Pages

Showing posts with label Jamaat-e-Islami Hind. Show all posts
Showing posts with label Jamaat-e-Islami Hind. Show all posts

Sunday, July 1, 2018

அர்ப்பணிப்புக்கு மறுபெயர்தான் பி.சி. ஹம்ஸா



நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ, இளைஞர்களை சத்திய மார்க்கத்தின் இராஜபாட்டையில் வழிநடத்தி, அவர்களின் சிந்தையிலும் செயலிலும் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி, இறைவனின் உவப்புக்காகவும் மறுமைவெற்றிக்காகவும் அனைத்தையும் அர்ப்பணிக்கின்ற இலட்சியக் கனலை அவர்களுக்குள் கிளர்ந்தெழச் செய்த முதுபெரும் மாணவர் தலைவர், சத்தியப் போராளி, இலட்சியப் பயணி பி.சி. ஹம்சா 21 ஜூன் 2018 வியாழன் அன்று நள்ளிரவில் கேரளத்தில் இறைவனிடம் மீண்டுவிட்டார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன் - திண்ணமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். திண்ணமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்).

அவருடைய மறைவு பற்றிய செய்தி பரவத் தொடங்கியதும் உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் கிராமத்திலிருந்து மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் வரையிலும் குஜராத்தின் கரையோரங்களிலிருந்து அஸ்ஸாமின் மலையோரங்கள் வரையிலும் ஆந்திரத்து தெலுங்கானா முதல் கர்நாடகம், தமிழகம் வரையிலும் தலைநகரமான தில்லியிலிருந்து அவர் பிறந்து வளர்ந்த கேரளம் வரையிலும் கண் கலங்கியவர்களும், புன்னகை மாறா அவரின் முகத்தை மனக் கண்களில் கொண்டு வந்து நெஞ்சம் நெகிழ்ந்தவர்களும் ஏராளம். ஏராளம். அனைவருடைய மனங்களிலும் நிலையான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்ற வசியமும், ஈர்ப்பாற்றலும் பெற்றிருந்தார் அவர்.

‘மனிதர்கள் அனைவரிடமும் ஏதேனுமோர் தனிப்பண்பு மிகைத்திருக்கும். அந்தப் பண்பைக் கொண்டு நினைவுகூரத்தக்க அளவுக்கு அவர்களின் வாழ்வில் அந்தப் பண்பு மிளிரும். பி.சி. ஹம்சா சாகிபை நினைவுகூரும்போதெல்லாம் மனத்தில் தோன்றுவது அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்பும்தாம்’ எனச் சொல்கின்றார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி. உண்மைதான். ‘அர்ப்பணிப்புக்கு மறுபெயர்தான் பி. சி..!’என்கின்ற அளவுக்கு தம்முடைய இரவையும் பகலையும் உழைப்பையும் ஒய்வையும் ஒட்டுமொத்த வாழ்வையும் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக முழுமையாக அர்ப்பணித்துவிட்டிருந்தார் அவர்.

எளிமையானவர். பழகுவதற்கு இனியவர். ‘1990-இல் அவர் முதன்முதலாக பீகாருக்கு வந்தார். முதல்முறையாகச் சந்திக்கின்றோம். ஆனால் ஏதோ காலங்காலமாக தோழமை கொண்டிருக்கின்ற உணர்வோடு உற்சாகமாகப் பழகி, இனிமையாகப் பேசி, சிரித்து இதயத்தில் நிலையாக தங்கிவிட்டார்’ என்கிறார் பீகாரின்  ஷப்பீர் ஆலம்.

 ‘We need Quality not Quantity  தரம்தான் தேவையே தவிர எண்ணிக்கை அல்ல என்று கான்பூர் கூட்டத்தில் அவர் சொன்னதை நினைவுகூர்கின்றார், அஸ்ஸாம் மாநிலத்து அபுல் ஹஸன். ‘தமிழகத்தில் களம் காலியாக இருக்கின்றது - இஸ்லாமிய இயக்கம் முழுமூச்சுடன் களம் இறங்க வேண்டும்’ என 1989-இல் அவர் சொன்னது இன்றும் காதுகளில் ரீங்காரமிடுவதாக நெஞ்சம் நெகிழ்கின்றார் வெல்ஃபேர் பார்ட்டியின் மூத்த தலைவர் எஸ்.என்.சிக்கந்தர். 

‘நான் அவரை முதல்முறை சந்தித்த போது கனிவான அண்ணனைச் சந்திக்கின்ற உணர்வில் திளைத்தேன். பல்லாண்டுகளுக்குப் பிறகு சந்தித்த போது ‘என் பெயர்..’ எனச் சொல்லி முடிப்பதற்குள், ‘உமைர் பாய், எப்படி இருக்கின்றீர்கள்?’ என முந்தையச் சந்திப்பில் விட்ட இடத்திலிருந்து சிரித்த முகத்துடன் தொடங்கிவிட்டார் அவர். வரிசையின் கடைசியில் நிற்பவனையும் நல்ல முறையில் அறிந்திருப்பதுதான் தலைமைக்கு அழகு. ஒரு நல்ல தலைவரை இன்று இயக்கம் இழந்து நிற்கின்றது’ என்கிறார், முன்னாள் எஸ்ஐஓ செயலாளர் உமைர் அனஸ்.

‘உடனுக்குடன் முடிவெடுக்கின்ற அவருடைய ஆற்றல்தான் இன்றும் என் நினைவில் நிற்கின்றது’ என்கிறார் தில்லி எஸ்ஐஓ முன்னாள் தலைவர் அயாஸ் இஸ்லாஹி. ‘அவரைப் போன்ற கடின உழைப்பாளிகள் எவரும் இருக்க மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் அவர் நிதானம் இழந்ததில்லை. புன்னகையுடன் எல்லாவற்றையும் எளிதாக சாதித்து முடித்துவிடுவார்’ என்கிறார் முன்னாள் எஸ்.ஐ.ஓ பொதுச் செயலாளர் ஐ. கரீமுல்லாஹ். 

‘ரோஜா மலரின் இதழைப் போன்ற மென்மையான இதயம் கொண்டவர் அவர். அதே சமயம் கொள்கை, கோட்பாடு என்று வருகின்ற போது எஃகினைப் போன்று உறுதிமிக்கவர் அவர்.’ என்கிறார் முதுபெரும் சமுதாயத் தலைவரும் மில்லி கெஜட் இதழாசிரியருமான டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான். ‘இதய நோய், டயாபிட்டீஸ், மிகை இரத்த அழுத்தம் என பற்பல நோய்களுடன் போராடி வந்த அவரை புற்றுநோயும் தொற்றிக் கொண்டது. அந்த நிலையிலும் அவர் தொடர்ந்து மும்முரமாக இயங்கி வந்தார். மாதக் கணக்கில் குடும்பத்தாரை விட்டு தலைமையகத்தில் தங்கிச் செயலாற்றி வந்தார். மலையாளம், உர்தூ, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அவர் புலமை பெற்றிருந்தார். அவருடைய மறைவு கட்சிக்கும் இயக்கத்துக்கும் மிகப் பெரும் இழப்பாகும்’ என நெஞ்சம் நெகிழ்கின்றார் வெல்ஃபேர் கட்சித் தலைவர் டாக்டர் சையத் காசிம் ரசூல் இல்யாஸ்.

இறக்கின்ற நாள் வரையில் அவர் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக பாடுபட்டு வந்தார். 1980 களின் இறுதியில் சத்தியப் பாதையில் இலட்சியப் பயணத்தைத் தொடங்கிய அந்தப் போராளி போகாத ஊர் இல்லை. போராடாத களம் இல்லை. இளமைத் துடிப்பும் கொப்பளிக்கும் பேரார்வமும் இலட்சிய வேட்கையும் நிறைந்த இளவலாக இயக்கத்தில் இணைந்த நாள் முதலே பெரும் பெரும் பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. 1986-இல் முதன் முதலாக மாணவர்களின் அகில இந்திய மாநாடு நடத்தப்பட்ட போது அதற்கான அனைத்தையும் செய்கின்ற பொறுப்பு அவருக்குத்தான் தரப்பட்டது. அதற்காக அரசு வேலையை உதறிவிட்டு வந்தார் அவர்.

படம்: இடமிருந்து மூன்றாமவராக கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருப்பவர்தான் பிசி ஹம்சா. 


(‘அமைதி, முன்னேற்றம், ஈடேற்றத்துக்கு இஸ்லாம்’ என்கிற மையக்கருத்தில் நடந்த அந்த மாநாடு இயக்க வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. புகழ்பெற்ற பாடகராக இருந்து இஸ்லாத்தை ஏற்ற யூசுப் இஸ்லாம் கலந்து கொண்டதும் அந்த மாநாட்டில்தான். இரண்டாம் நாள் இரவில் பெருமழை பெய்ய, கொட்டும் மழையில் மௌலானா அப்துல் அஜீஸ் சாகிப் உருக்கமாக உரை நிகழ்த்த, மாணவர் பட்டாளம் சற்றும் கலையாமல் ‘அடாது மழை பெய்தாலும் விடாது பணியாற்றுவோம்’ என உலகுக்கு உரத்துச் சொன்னதும் அந்த மாநாட்டில்தான்.) அதனைத் தொடர்ந்து எஸ்.ஐ.ஓ அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட நாடு முழுவதும் எண்ணற்ற மாணவ, இளைஞர்களின் வாழ்வில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தினார் அவர். தொடர்ந்து கேரளத்து அமீரின் தனி அலுவலர், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் என அவர் மீதான பொறுப்புகள் கூடிக்கொண்டே போயின.

ஒரு கட்டத்தில் மீன் டைம் என்கிற பத்து நாள் பத்திரிகை (வார இதழாகவும் அல்லாமல், மாதமிரு முறை இதழாகவும் இல்லாமல் மாதம் மும்முறை இதழாக) தொடங்கப்பட்ட போது, அதற்கான நிதி, நிர்வாகம், இதழாசிரியர் என எல்லாப் பொறுப்புகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. மணலில் கயிறு திரிக்கின்ற அந்த சவால் நிறைந்த பணியையும் மனமுவந்து ஏற்றார் அவர். ஆனால் வாய்ப்புக்கேடாக அந்த முயற்சி தோல்வியில் முடிய, அதன் வலியையும் வேதனையையும் தனி மனிதராகச் சுமந்தார் பி.சி. ஹம்சா.

அதன் பிறகும் அவர் துவண்டுவிடவில்லை. வெல்ஃபேர் கட்சி தொடங்கப்பட்ட போது அந்த சவால் நிறைந்த பணியிலும் அவர் சற்றும் தயங்காமல் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அது மட்டுமல்ல, கேரளத்தில் ஏராளமான அறக்கட்டளைகளிலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.

இவ்வாறு வாழ்வின் இறுதி மூச்சு வரை அமைப்பு, இயக்கம், ஊடகம், கட்சி என வெவ்வேறு தளங்களில் மும்முரமாக இயங்கி வந்த அவர் தம்முடைய 62ஆம் வயதில் இறைவனிடம் மீண்டுவிட்டார்.

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக. சுவனத்தின் உயர்ந்த தோட்டங்களில் அவருக்கு இடம் அளிப்பானாக. ஆமீன்.

- டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்.

Monday, March 5, 2018

‘இஸ்லாத்தின் படி வாழ்வது உங்களின் பிறப்புரிமை.’



- அமீரே ஜமாஅத்தின் எழுச்சியுரை.

எஸ்.ஐ.ஓ.வைச் சேர்ந்த மாணவ, இளைஞர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம் என் மனம் மகிழ்ச்சியால் நிறைந்துவிடும். வயது முதிர்ந்த தந்தைக்கு பெற்ற பிள்ளைகளைப் பார்க்கும் போது ஏற்படுகின்ற சந்தோஷத்தைப் போன்ற உணர்வை நான் பெறுகின்றேன். அந்த இனிமையையும் சுகந்தத்தையும் சுவையையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது. என்னுடைய கிழட்டு நாளங்களில் இளமை இரத்தம் பாய்வதைப் போன்று நான் புதுத் தெம்பைப் பெறுகின்றேன்.

நண்பர்களே! தோழர்களே! அன்பு மகன்களே என்று சொல்லி உங்களை அழைத்தாலும் அது தவறு ஆகாது. இந்த அமர்வில் பலரும் ‘இந்த நாட்டின் எதிர்காலம் என்ன ஆகுமோ?’ எனக் கவலை தெரிவித்தார்கள்.
நான் சொல்வேன். இந்த நாட்டின் எதிர்காலம் என்னுடைய இந்த இளைஞர்கள்தாம்..! (தக்பீர் முழக்கம்)

இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்த இளவல்கள்தாம் தீர்மானிப்பார்கள். எதிர்காலம் ஒளிமயமானதாகத்தான் இருக்கும் என்றே இவர்கள் தீர்மானித்து விட்டிருக்கின்றார்கள். நிச்சயமாக ஒளிமயமானதாகத்தான் இருக்கும். இன்ஷா அல்லாஹ். அந்த ஒளிமயமான எதிர்காலத்தை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

ஆயிரக் கணக்கில் இங்கு திரண்டிருக்கின்ற இளைஞர்களைப் பார்க்கின்ற போது - நான் போகின்ற இடங்களிலெல்லாம் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடத்தான் செய்கின்றார்கள் - நான் தனியாக இல்லை என்றே நான் உணர்கின்றேன். நான் தனியாளாக இல்லை. எனக்குப் பின்னால் ஜமாஅத்தே இஸ்லாமி இருக்கின்றது. எனக்கு பின்னால் இலட்சக்கணக்கான மாணவ, இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்றே உணர்கின்றேன்.

அன்பிற்கினியவர்களே!  நீங்கள் என்னுடையவர்கள். நான் உங்களைச் சேர்ந்தவன் என்றே நான் உணர்கின்றேன். (தக்பீர் முழக்கம்..)

இனி நீங்கள் என்றும் என்னுடன்தான் இருப்பீர்கள் என்கிற எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு. நானும் உயிருள்ள வரை உங்களுடனே இருப்பேன்.

நண்பர்களே! ‘முஸ்லிம்களின் உயிர், உடல், உடைமை, மானம் ஆகியவற்றுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை’ என இங்குச் சொன்னார்கள். ‘இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கின்ற உடல், உயிர், மானம் ஆகியவற்றின் பாதுகாப்பை நசுப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன’ என பலரும் சொன்னார்கள். ‘அரசு இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது’ என்றும் சொல்லப்பட்டது. இது உண்மைதான்.

ஆனால் முஸ்லிம்களின் உடைமைகள், உயிர்கள், மானம் ஆகியவற்றைப் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்களுடையது. வேறு எவரும் அவற்றை உங்களுக்காகப் பாதுகாக்க மாட்டார்கள். கண்ணியத்துடன், மானத்துடன்தான் நீங்கள் இந்த உலகத்தில் இருக்க வேண்டும்; அவமானப்பட்டு, கேவலப்பட்டு அல்ல!. இழிவான வாழ்க்கை வேண்டவே வேண்டாம்.

குர்ஆன் கூறுகின்றது: ஈமான் இல்லாதவர்கள் கூறுகின்றார்கள் : ‘நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்ற பிறகு நம்மில் பலசாலிகளாய், செல்வாக்கு மிக்கவர்களாய் இருப்பவர்கள் இந்த இழிவானவர்களை வெளியேற்றிவிடுவார்கள்’

குர்ஆன் தொடர்ந்து கூறுகின்றது: ‘கண்ணியமும் மரியாதையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும். ஆனால் நம்பிக்கையற்ற இந்தமக்களுக்கு இது புரிவதில்லை’ (அத்தியாயம் 63 அல்முனாஃபிகூன் 8)

கண்ணியமும் இழிவும் எங்களின் கைகளில் என எவர்கள் சொல்கின்றார்களோ அவர்களைப் பார்த்து குர்ஆன் அறிவிக்கின்றது. ‘கண்ணியமும் மரியாதையும் அல்லாஹ்வுக்கு உரியது. இறைத்தூதருக்கு உரியது. இறைநம்பிக்கையாளர்களுக்கு உரியது’. அவர்கள் கண்ணியத்துடன் இருக்கின்றார்கள். கண்ணியத்துடன்தான் இருப்பார்கள். எவராலும் இந்த டிக்னிட்டியை - கண்ணியத்தை எதிர்த்து சவால் விட முடியாது.

ஒரு முறை, ஹிஜ்ரத் நடக்கவிருந்த சந்தர்ப்பத்தில் சத்திய மார்க்கத்தின் எதிரிகள் ‘நாங்கள் முஹம்மத் நபிகளாரை மக்காவிலிருந்து வெளியேற்றிவிடுவோம். கொன்றுவிடுவோம்’ என்று தீர்மானித்தார்கள். அப்போது குர்ஆன் அறிவித்தது. அவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்:

‘ஆனால், அவர்கள் அவ்வாறு செய்தால் உமக்குப் பின் அவர்களும் இங்கு அதிக காலம் தங்கியிருக்க முடியாது’ (அத்தியாயம் 17 பனூ இஸ்ராயீல் 76)

அதாவது ‘நீங்களும் இங்கு அதிக நாள்கள் இருக்க மாட்டீர்கள். முஹம்மத் நபிகளாரும் அவர்களின் தோழர்களும் இன்றியமையாத சக்தியாய் இருக்கின்றார்கள். அவர்களின் பொருட்டு தான் இந்த நகரத்தில் இறைவனின் அருள்வளங்கள் அருளப்பட்டுக் கொண்டிருக்கின்ற. அவர்கள் இருப்பதால்தான் நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இந்த நகரத்தை விட்டு வெளியேறிவிட்டார்களேயானால் உங்களாலும் இந்த நகரத்தில் தங்கியிருந்து வாழ முடியாது. இந்த நாட்டின் எதிர்காலமும் உங்களைத்தான் சார்ந்திருக்கின்றது. நீங்கள் வெளியேறி விட்டீர்கள் எனில் இந்த நாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை. நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள். அதனால் இந்த நாட்டுக்கும் ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது. நீங்கள் இல்லாமல் போனீர்களேயானால் இந்த நாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை.

நாடே இருட்டில் மூழ்கியிருக்கின்றது. திரும்பும் திசையெங்கும் காரிருள்தான் சூழ்ந்திருக்கின்றது. இந்த இருளில் வெளிச்சத்தைப் பரப்புகின்ற கோபுரங்களாய் நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களிடமிருந்துதான் மக்கள் ஒளியைப் பெறுவார்கள்.

நண்பர்களே! தோழர்களே!

நான் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். அவை உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகலாம். அவை உங்களுக்குப் பிடிக்காமலும் போய் விடலாம். ஆனால் நான் எதனை சரியென்றும் சத்தியமென்றும் உணர்கின்றேனோ அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது என் மீதான கடமையாகும். உங்களுக்குப் பிடிக்காமல் போனாலும் நான் சொன்னவற்றைக் காதாரக் கேட்டு அவற்றின் படி நடப்பது உங்கள் மீதான பொறுப்பாகும். அவற்றைக் கேட்டு அவற்றின் படி செயல்படுவீர்கள் என்கிற எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு.

Saturday, March 3, 2012

Documentary on Moulana Abdur Razaq Latheefi

It is the unique documentary of its kind. Jamaat-e-Islami Hind has been striving in India for the establishment of Divine law in all aspects of life. It has attracted millions of noble souls and changed and shaped their lives. It continues to attract and mould countless human beings throughout the nook and corner of this country.

It has produced many stalwarts and stars. Moulana Abdur Razaq Latheefi is one of them. When we, a handful of youth and students made the goal of establishing Deen as our mission he was not in the scene. But, we grew up hearing moving, soul stirring anectodes about him. As we had Moulana M A Jameel Ahmed and Moulana H Abdur Raqeeb who never get tired of narrating anectodes from the life of Moulana Abdur Razaq Latheefi Sahib. Hence Latheefi Sahib is not alien to us.

But, still, we could not get the full picture. We had never seen his photograph. We never knew how he looked like.

Here is a documentary on the life and times of Moulana Abdur Razaq Latheefi Sahib. It is informative, inspiring and good. Scores of leaders and veterans of the Islamic movement introduce you various aspects of this towering personality. S. M. Malik Sahib's version would continue to echo in your mind : "Moulana used to undertake tours after tours. He used to remember the names and addresses of three hundred members. He never needed a file or assistant." It is simply amazing. Nowadays in this age we have become addicted to our cell phones, computers. Sometimes we tend to forget our own numbers.

Moulana Abdul Azeez Sahib and Moulana Sirajul Hasan Sahib extol the leadership quality of the late Moulana. Shakeel Anwar Sahib sheds light on his milli qidmat. Scores of his sons including Br Abdur Raqeeb Latheefi, my friend, remember him passionately.

It is worth watching. Cross posted in Luthfispace

Monday, January 9, 2012

A memorable camp of Jamaat-e-Islami Hind in Chennai


Hats off to Br A Shabbir Ahmed, Ameer-e-Halqa and Br Jan Muhammad Nazim-e-Ijtema for the succesful execution of the training camp for the state and central leaders and also making foolproof arrangements for the sessions of Markazi Majlis-e-Shura.

There may have been a few minor lapses, deficiencies and inadequacies. We are all humanbeings and to err is human. But the fact is that Allah blessed us all and both the events were successful, upto the mark and incident free.

The Markazi and Riyasati Qayideen returned to their homes with fond memories, smiling faces and rejuvenated spirits. I could not count the number of persons - every one of them tall leaders of the Tahreek - who congratulated and complimented for the arrangements made.

Alhumdulillah! All praise, glory, acclamation, honor, adoration, adulation and thanks to Allah.
Report of the camp Here and Here

Wednesday, December 28, 2011

Markazi Majlis-e-Shura in my Naani Ghar..!


It was a fascinating spectacle.

The Markazi Majlis-e-Shura of Jamaat-e-Islami Hind was about to begin in my grand mother's house. The atmosphere was that of bonhomie. You could find sherwani clad Moulanas everywhere. Where on earth you could find such a comraderie and mutual affection.

I was very much elated. I found myself running here and there. I was very much amused and excited. In my grandpa's room elderly Moulanas were staying. H Abdur Raqeeb Sahib's voice could be heard. I could not comprehend what is being said. Raqeeb Sahib was sitting in a chair and some Moulana was reclining in a bed. They were talking amicably.

Suddenly I found myself in the hall. It is the same hall where I used to play as a child. Grand pa used to listen BBC in his radio sitting in a easy chair in that very hall. They had converted it into a meeting hall.

Instantly I found myself moving towards the backyard. There people are taking their breakfast silently. Ameer-e-Halqa A Shabbir Ahmed was eating french toast. Somebody was placing a slice of a colourful fruit in someone's plate.

Then again I found myself in the passage between the hall and the backyard. At that instant Ameer-e-Jamaat in a bright blueish black Sherwani entered. He was moving confidantly like a bridegroom with a vibrant smile lit in his face. His steps are measured. He was flanked by two Moulanas. I could not recall their faces.

The hall is nearly full. Ameer-e-Jamaat and others were sitting in a row.

Suddenly I hear a feeble voice of my wife calling Rafia, my fourth daughter (who is doing her UKG). I look for Rafia. She was coming towards me. I move towards her to fetch her.

Just then the voice of my wife had gone shriller.

RAFIAAA..! SCHOOL JANE KA IRADHA HAI YA NAHIN..!

I woke up instantly.

Oh! It was a dream!
What a dream it was!

Tuesday, December 13, 2011

Hukumat-e-Ilahyia se Welfare Party of India Tak


What is the reason behind the decision to launch Welfare Party of India? Has Jamaat-e-Islami Hind compromised its treasured principles? Has the Jamaat discarded its nasb-ul-ain? What about the age old cherished dream of forming the Hukumat-e-Ilahiya (Kingdom of God)? Could this be described as a turnaround by the Jamaat? Ameenul Hasan answers all the questions convincingly and patiently. You could see a different Ameen here. The vibrancy is missing. He speaks smoothly and with conviction. After watching this enlightening lecture all the doubts regarding the Welfare Party move fade away. A must watch for those who have not yet digested the major move by the oldest Islamic Movement in India.
Crossposted in Luthfispace.


Sunday, November 13, 2011

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரியின் ஆதங்கம்


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடங்கி அறுப-தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அறிவு, சிந்தனை, செயல் என பல்வேறு களங்களில் அது நீண்ட தூரத்தைக் கடந்து வந்துள்ளது. இந்த நீண்ட பயணம் தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி: சித்தாந்தக் களத்தில் ஜமாஅத் ஊழியர்கள் அடைய வேண்டிய படித்தரத்தை இன்று வரை எட்டவேயில்லை.

ஜமாஅத் ஊழியர்களில் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த சகோதரர்கள் மத்தியில் அழைப்புப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஊழியர்களும் சரி, முஸ்லிம் சமுதாயத்தின் சீர்திருத்தத்திலும் வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டிருக்கின்ற ஊழியர்களும் சரி,  சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முனைப்புடன் செயலாற்றுகின்ற ஊழியர்களும் சரி, நாட்டு நடப்பு, தேசப் பிரச்னைகள் தொடர்பான விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கின்ற ஊழியர்களும் சரி - எல்லாருமே அறிவுக்களத்தில் பின்தங்கியவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

நாட்டுநடப்பிலும் அன்றாட பிரச்னைகளிலும் நல்ல விஷய ஞானத்தைக் கொண்டிருக்கின்றவருக்கு இந்திய மதங்கள் பற்றிய ஞானம் இல்லை. ஏதாவதொரு துறையில் நல்ல தேர்ச்சி பெற்றவருக்கோ மார்க்கப் புலமை இல்லை.

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பணியாற்றுகின்றவர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு விதங்களில் பயிற்சி தரப்படுவதால் சித்தாந்த பயிற்சி முகாம், சிந்தனைப் பட்டறை என பல்வேறு நிலைகளை அவர்கள் கடந்து வந்திருப்பதால் அவர்களுக்கு இந்திய மதங்களில் சிலவற்றைக் குறித்து சுருக்கமான அறிமுகம் கிடைத்துவிடுகின்றது. ஆனால் அவர்களில் எவருக்குமே எந்தவொரு மதத்தைக் குறித்தும் விரிவான, ஆழமான ஞானம் இல்லை.

இன்ன மதத்தைக் குறித்து இன்னாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதனைக் குறித்து வேறு எவரிடமும் விசாரிக்க வேண்டிய தேவை இருக்காது எனச் சொல்கின்ற அளவுக்கு நம்மில் எத்தனை வல்லுநர்கள் உருவாகி இருக்கின்றார்கள்?

உண்மையென்னவெனில் சிந்தனைப் பட்டறைகளிலும் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றதால் இவர்களுக்கு இந்திய மதங்களைக் குறித்து ஒரளவுக்கு அறிமுகம் கிடைத்துவிடுகிறது. ஆனால் அந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், இந்த மதங்களின் நூல்களை வாசிப்பதற்கும், வரலாற்றை அறிந்துக் கொள்வதற்கும் இவர்கள் மெனக்கெடுவதில்லை. அந்தச் சுருக்கமான அறிமுகத்தை வைத்துக் கொண்டே காலத்தை ஓட்டிவிடுகின்றார்கள். அவற்றைக் குறித்து அறிவதற்கும் நூல்களை வாசிப்பதற்கும் நேரமும் ஒதுக்குவதில்லை; அவகாசமும் கிடைப்பதில்லை.

நாம் வாழ்கின்ற நாடு எந்த அளவுக்குப் பரந்து விரிந்த நாடு. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் வல்லுநர்களும்  தேர்ச்சி பெற்ற திறமையாளர்களும் கொட்டிக் கிடக்கின்ற நாடு இது.
எல்லாத் துறைகளிலும் பெரும் பெரும் படிப்பாளிகளும் சூரப்புலிகளும் நிறைந்துள்ள நாடு இது. 

இந்தப் பின்னணியில் நம்முடைய இயக்கத்திலும் வல்லுநர்களும் ஆற்றல்வாய்ந்தவர்களும் நிறைந்திருக்க வேண்டாமா என்கிற கவலை எனக்குள் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு. சிலசமயம் பேருருவம் எடுத்து என்னுடைய தூக்கத்தைப் பறிப்பதுமுண்டு.

நம்மில் சிலராவது வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்த வல்லுநர்களாக மலர வேண்டாமா?

நம்மில் சிலராவது புத்த மதத்திற்கு அத்தாரிட்டி இவர் எனச் சொல்கின்ற அளவுக்கு புத்த மதத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டாமா?

நம்மில் சிலராவது சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டாமா?

பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம், உபநிஷத்துகள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?

இவ்வாறு இந்த மதங்களில் ஆழ்ந்த புலமை பெற்று குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் ஒளியில் அவற்றை விமர்சனமும் ஆய்வும் செய்கின்ற அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள் நம்மில் உருவாக வேண்டாமா?

இஸ்லாமிய இயக்கத்தின் தற்போதைய நூல்களையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நூல்களில் மேற்கத்திய சிந்தனைகள், சித்தாந்தங்கள் மீதான விமர்சனத்தைப் பார்க்க முடியும். நாத்திகம், கம்யூனிஸம், முதலாளித்துவம் போன்றவை பற்றிய விவாதங்களைப் பார்க்க முடியும். ஜனநாயகம், மதச்சார்பின்மை குறித்தும் இந்த நூல்கள் பேசுகின்றன.
ஆனால் இந்தியாவில் இருக்கின்ற மதங்கள், இந்தியப் பாரம்பர்யங்கள், பழக்கவழக்கங்கள், மாண்புகள் பற்றி இந்த நூல்களில் விவாதிக்கப்பட்டுள்ளதா?

எங்காவது ஏதாவதொரு பொருளில் இவற்றைப் பற்றிய மேலோட்டமான விவாதத்தை மட்டுமே பார்க்க முடியும். மௌலானா அவர்களின் ‘இஸ்லாமிய பண்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளும் உட்கூறுகளும்’ என்கிற நூலில் இந்து மதத்தின் சில நம்பிக்கைகள் குறித்து மேலோட்டமாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. ‘அல்ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூலில் போர் தொடர்பாக இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள நடைமுறைகள், நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் பணியாற்றுவதுதான் நம்முடைய நோக்கமெனில் இந்து மதம் குறித்து நல்ல முறையிலும் ஆழமாகவும் வாசித்து விளங்கியிருப்பது இன்றியமையாத-தாகும். இந்து மதம் மட்டுமல்லாமல் சீக்கிய மதம், புத்த மதம், ஜைன மதம் போன்றவற்றையும் நல்ல முறையில் ஆய்வு செய்திருப்பது அவசியமாகும்.

‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ விரிவுரையில் கிறிஸ்துவ மதம் குறித்து எழுதப்பட்டிருக்கின்ற குறிப்புகள் அனைத்துமே மத்தியக் காலத்திலும், நவீனக் காலத்திலும் எழுதப்பட்ட நூல்கள், என்ஸைக்ளோபிடியா பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ள விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவையே.

சென்ற நூற்றாண்டில் கிறிஸ்துவ அறிஞர்களும் யூத அறிஞர்களும் பைபிள் மீது செய்துள்ள விமர்சனங்களிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் கிறிஸ்துவ, யூத வரலாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்தும் பயனீட்டப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அறிஞர் என்னதான் மிகப்பெரும் மார்க்க மறுமலர்ச்சியாளராக, சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக முத்திரை பதித்து தனித்து நின்றாலும் எல்லாக் கலைகளிலும் தனித்-தேர்ச்சியையும் நுணுக்கமான விவரங்களையும் கவனித்து ஆய்கின்ற செயல்திறனையும் அவரிடம் எதிர்பார்க்க முடியாது அல்லவா?

இப்போது நமக்கு இருக்கின்ற மிகப் பெரும் தேவை என்னவெனில்  அறிவாற்றலும் ஆராய்ச்சித்திறனும் கொண்ட, இஸ்லாத்தின் கோட்பாடுகளிலும் ஆழமான புலமை கொண்ட சில இளவல்கள் இந்திய மதங்கள், அவற்-றின் வரலாறு, பாரம்பர்யங்கள், தற்போதைய சமூக விழைவுகள், சமூகச் செயல்பாடுகள் போன்றவற்றை ஆழ-மாக ஆராய வேண்டும்; இஸ்லாத்தை இந்தியப் பின்னணியில் அறிமுகப்படுத்த வேண்டும். இந்தப் பணி கனமான பணி. என்றாலும் மிகவும் அவசியமான பணி என்றே நான் கருதுகின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன் அலிகரில் சென்டர் ஃபார் ரிலிஜியஸ் ஸ்டடீஸ் என்கிற பெயரில் கல்வி நிறுவனத்தை நான் தொடங்கியதற்குப் பின்புலமாக இருந்தது இந்தச் சிந்தனைதான்.

தில்லி திரும்பிய பிறகு பல்வேறு பணிகளில் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அவற்றில் ஒன்றுதான் இந்த சென்டரும். 2005 ஆகஸ்டு மாதத்தில் இதனைத் தொடங்கினேன்.

இதிலிருந்து சில இளைஞர்கள் சொக்கத்தங்கங்களாக வெளியாகி இருக்கின்றார்கள். அவர்களிடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

உங்களுடைய கேள்விக்கு ஒரு கோணத்தில் இதுவரை பதிலளித்துவிட்டேன். இப்போது உங்களுடைய கேள்வி-யின் இன்னொரு பரிமாணத்திற்கு வருகின்றேன். அதாவது என்னுடைய பங்கு என்ன? நான் என்ன செய்திருக்கின்றேன்?

ஒரு மூன்று துறைகளில் எனக்குத் தனி ஈடுபாடு உண்டு. அதில் தொடக்கத்திலிருந்தே கவனம் செலுத்தி வருகின்றேன். முதலாவதாக மதங்களுக்கிடையே ஒப்பாய்வு, இரண்டாவதாக, சூஃபிஸம், மூன்றாவதாக ஒழுக்கக் கல்வி.

ஒழுக்கக் கல்வி தொடர்பாக நான் சில நூல்களை எழுதியிருக்கின்றேன். ஒழுக்க மாண்புகள் தொடர்பான கல்வியில் தனி முத்திரை பதித்த ஒழுக்கவியலாளரும் புகழ் பெற்ற அறிஞருமான முஸ்கவியா குறித்து நான் மேற்கொண்ட ஆய்வை (முனைவர் பட்டத்திற்காக நான் மேற்கொண்ட ஆய்வு அது) அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது.
ஒழுக்கவியல் குறித்து புகழ்பெற்ற தத்துவ அறிஞர் அபுன் னஸர் ஃபாராபி அவர்களின் சிந்தனைகள் என்கிற தலைப்பில் ஒரு நூல் எழுதி இருக்கின்றேன். இப்னு சீனா, முக்ஸில்லா போன்றோரின் ஒழுக்கவியல் போதனைகள் குறித்தும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன்.

சூஃபிஸம் குறித்து Sufism and Shariah என்கிற தலைப்பில் நான் எழுதிய புத்தகம் முஜத்தித் அல்ஃபெ ஸானி ஷேக் அஹ்மத் சர்ஹிந்தி அவர்களின் சிந்தனைகள், கொள்கைகள் தொடர்பான ஓர் ஆய்வு நூல் ஆகும். என்றாலும் அதில் இஸ்லாமிய சூஃபிஸத்தின் உட்கூறுகளை வரையறுப்பதற்கு முயன்றிருக்கின்றேன். உர்தூ மொழியிலும் இதன் மொழிபெயர்ப்பு வெளியாகி அறிவுக்களங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிறுவப்பட்டு 67 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்தியாவில் இஸ்லாமிய இயக்கத்தின் நிலைமை குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் அகில இந்தியத் தலைவர்  டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி  அளித்த பேட்டியிலிருந்து

Saturday, October 22, 2011

The debacle in local bodies election in Tamil Nadu and some thoughts



More than eleven brothers and sisters affiliated with the Islamic Movement contested in the just held local bodies eletion in Tamil Nadu. They were supported by the newly launched Welfare Party of India. Infact the state President of the welfare party Mr S. N. Sikkander toured, campaigned and strived for the victory of the canditates in fray. While the majority of them contested for the post of Corporator or Councillor one brother (Br A Syed Nazeer) contested for the Municipal Chairmanship. All of them have been defeated badly. Even the much hyped Janab T Ismail Sahib (the first member of Jamaat to get elected as councillor in the whole of country) too bited the dust.


The outcome is indeed sad and shocking. Ofcourse winning and losing a election is part of the game. But, it is sad that not a single soul managed to win. 


But, at the same time it is pleasing to note that thousands of voters across the state prefered to vote for these brothers and sisters. The fact that these canditates in their maiden attempt have succeeded in striking the chord with vast multitudes of people is itself reassuring. 


It should be noted that each and every single vote procured by these men and women is much more, more and more valuable than others. 


Because these are not the votes which were casted driven by the communal zeal or caste affiliation. These are the visa documents given by the noble for a dawn of new era.


These votes are not the one which are casted driven by the devotion to one's own party. These votes were casted by those noble souls who marched towards the polling booth attracted by the slogan மக்கள் பணம் மக்களுக்கே public money should be spent for the public alone.  


These votes were not bought for a few hundred rupees. Rather these are the votes of those illustrious sons and daughters of this great nation who believe in probity in public life. 


These are not the votes which were casted induced by the childish wish that "My vote should not go waste. I will vote only the winning canditate". Rather these are the votes casted by the responsible citizens of this country who believe in the concept of Welfare State, Communal Harmony, Inclusive Democracy etc.


Therefore we should thank all of these noble souls who prefered us and voted us. We should do everything to consolidate them and save their good-will. We have to work harder and harder. We have to work  indefatiguably. 


Besides we have to analyse the reasons for this debacle. What went wrong? Why did we fail? What to be done? How to rectify, reform and reach out? 


At the same time all those brothers and sisters who worked tirelessly deserve praise and acclaim. They have spent their time. They have spared their money. They have done everything. May Allah accept their endeavours and reward in excess. 


Another point is that these brothers and sisters have become known figures in their respective areas. In a way this is capital to us. And this capital if invested properly would give rich dividends in near future. Insha Allah. The urgency and the need of contiuous work and struggle is undisputable. Allah-o-Akbar.
Crossposted in Luthfispace.

Moulana Moududi on electoral victory


ஆகுமான அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டு தோற்றுப் போவதை 'வெற்றி' என்றே நாங்கள் கருதுகின்றோம். ஹராமான தடுக்கப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டு வெற்றிப் பெறுவதை 'தோல்வி' என்றே நாங்கள் நினைக்கின்றோம். 
சர்வாதிகாரத்தால் இந்த நாட்டுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கும் நஷ்டத்துக்கும்  இணையானது தான் வோட்டை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதாலும் போலி வோட் கள்ள வோட் போடுவதால் ஏற்படுகின்ற இழப்பும நஷ்டமும்.
கள்ள வோட் போட்டும் பணம் கொடுத்து வோட்டை விலைக்கு வாங்கியும் ஜெயிப்பவர்களால் எந்த நன்மையையும் கிடைக்காது.
- மௌலானா அபுல் அலா மௌதூதி

Thursday, October 13, 2011

A lion roars..!


Do you hear கர்ஜனை  of the lion? I received this photo taken in a mobile thru a friend. The oldman with the mike is Janab P A Syed Muhammad Sahib of Coimbatore. He has been attached with the Islamic Movement for the past fifty years. He has served the Movement in various capacities. He has been the circle Incharge, unit president and district organisor. More than thirty brothers and sisters of his family (sons, daughters, grand sons, grand daughters) are active workers of Islamiya Iyakkam. He is seen here wielding the megaphone canvassing for the canditate contesting in Corporation election in Coimbatore. A placard depicting the symbol of the canditate (Globe) is lying beside him. You can also see a flag of SIO too. Curiously there is no sign of the flag of Welfare Party of India.


Eleven brothers and sisters are in the fray this time. In the last election Br T Muhammad Ismail of Vaniyambadi got elected as MC in the Municipality of Vaniyambadi. He is the first member of Jamaat-e-Islami Hind in the whole of India to get elected to a Municipality. Now this time Br A. Syed Nazeer is contesting for the Municipal Chairmanship in Krishnagiri. If he gets elected he would be the first Municipal Chairman of the Islamic Movement in Tamil Nadu Insha Allah.

Friday, October 7, 2011

Ameer-e-Jamaat Bereaved



Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat has lost his sister. She passed away yesterday(6th October, 2011) night in Chennai at her son's residence. (Inna lillahi wa inna ilaihi rajeewoon..,.) She had been ill for some time. On hearing this news Ameer-e-Jamaat rushed to Chennai.

Today she was buried in Rahmania Masjid burial ground. Ameer-e-Jamaat led the janaza prayer.

May Allah forgive her and grant maqfirath and Jannah. Ameer-e-Jamaat would be in Chennai for two days.

Sunday, September 25, 2011

My pen has not retired: Moulana Kausar Yazdani


What change you find in the Jamaat’s work?
There was a time, say up to first forty years of the Jamaat’s formation that everyone was very sincere without any concern about personal amenities. Now the situation has changed. Even full time workers’ officialdom and personal concerns have increased at the cost of sincerity. Now it has a become a routine job beginning at, say, 9 A.M. and continuing up to, say, 5 P.M. Earlier the atmosphere was of total devotion to the object of the Jamaat. There are exceptions, no doubt, but my feeling is based on overall atmosphere.

What are your engagements these days?
After retirement from the Jamaat I have kept myself busy in translation work into the Hindi language. I have translated Bukhari in three volumes. A publisher provides me books for translation and I do the job. My pen has not retired.
Moulana Kausar Yazdani in conversation with Dr Waquar Anwar in Radiance weekly. Here


A towering personality among Muslims

Moulana Kausar Yazdani was not just a journalist or writer, but an active worker and a leader also. He became chief of J. I. H. (Delhi & Haryana State) in 1979 and remained so till 1995. At that time, he used to start his day before morning prayers (salat Fajr), read daily news paper and wrote editorial, etc. Later, he worked for the Kanti till about 1’o clock. After 3 or 5’o clock in the afternoon, to 11 in the night, he spent his time, visiting different places of Delhi & Haryana for Dawah and Islamic awekening. It was his daily routine. In 1995 he was called to central office of the Jamaat as its all India secretary to look after the Dawah work from which he just retired. Nadvi translated about 40 books in Hindi and wrote a dozen books.
Javed Ali in Milli Gazette. Here

Moulana Kausar Yazdani was laid to rest in New Delhi

Maulana Dr. Kausar Yazdani, a renowned Islamic scholar, author, journalist, activist and former Secretary for Dawah, Jamaat-e-Islami Hind (JIH), breathed his last on August 29 at his residence in New Delhi following a brief illness. He was 76.

His funeral prayer was led by Amir JIH Maulana Syed Jalaluddin Omari after Zuhr prayers on August 30. He was laid to rest in Batla House Graveyard. He left behind three sons and one daughter.
A report in Radiance Weekly. Here

Tuesday, June 21, 2011

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தில் மஸ்லக் பற்றிய பிரச்னைகளே இல்லை: அமீரே ஜமாஅத் பேட்டி - நான்காம் பாகம்



m முஸ்லிம் சமுதாயத்தில் மஸ்லக் தொடர்பான சர்ச்சைகள், விவாதங்கள் இன்றும் நீடிக்கின்றனவே! இன்றும் அனல் பறக்கும் விவாதங்களும் சூடான சர்ச்கைகளும்தாம் புகழ்பெற்ற மார்க்க மதரஸாக்கள் வெளியிடுகின்ற பத்திரிகைகளை ஆக்கிரமித்திருக்-கின்றனவே! (இன்று நாட்டில் பத்திரிகை வெளி-யிடாத மதரஸாவே இல்லை என்கிற அளவுக்கு மதர-ஸாக்கள் அனைத்தும் பத்திரிகைகளை வெளியிட்-டுக்கொண்டிருக்கின்றன) கடந்த 25 ஆண்டுகளில் இந்தச் சமுதாயம் மிகக் கடுமையான நெருக்கடிகளை-யும் மிகப்பெரும் பிரச்னைகளையும் சந்தித்து நிற்-கின்றது. என்றாலும் மஸ்லக் தொடர்பான சர்ச்சை-களுக்கும் சண்டைகளுக்கும் தான் முடிவே இல்லாத நிலைமையைப் பார்க்கின்றோம். நம் நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலைமை? இதற்கு யார்தான் பொறுப்பு? இந்த நிலைமையை எப்படித்தான் மாற்றுவது? ஒரு மார்க்க அறிஞர் என்கிற நிலையில் உங்களுடைய கருத்துகளைச் சொல்லுங்களேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இன்று நாம் சந்தித்து நிற்கின்ற முக்கியமான முரண்பாட்டை நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் ஃபிக்ஹு தொடர்பான விவகாரங்களிலும், மஸ்லக் தொடர்பானவற்றிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தக் கருத்துவேறுபாடுகள் இந்தியத் துணைகண்டத்தில் (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) முற்றிப்போய் கடுமையாகியிருப்பதைப் போன்ற நிலைமையை உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாது.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, இந்த மஸ்லக்குகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் இவற்றையே சமுதாயத்தின் முக்கியமான பிரச்னையாகப் புரிந்துவைத்திருக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இவற்றையே உண்மையான மார்க்கமாகவும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் தம்முடைய மஸ்லக்குக்கு ஆதரவாக வாதிடுவதை மார்க்கத்திற்குச் செய்கின்ற மிகப்பெரும் சேவையாகவும் இவர்கள் நினைக்கின்றார்கள். மஸ்லக்குகளின் உயிர்நாடியே இந்தப் பிரச்னைகள்தாம் என்று இவர்கள் நினைக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது. இதனால் இவர்கள் எதிராளியின் மஸ்லக்கை சகித்துக்கொள்வதற்கு எந்த நிலையிலும் முன் வர மாட்டார்கள்.

இது தொடர்பாக இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்வது அவசியமாகும்.

முதலாவதாக மஸ்லக் தொடர்பான இந்தக் கருத்து வேறுபாடுகள் மார்க்கம், ஷரீஅத் தொடர்பான கொள்கை சார்ந்த கருத்துவேறுபாடுகள் கிடையாது. அதற்கு மாறாக இந்தக் கருத்துவேறுபாடுகள் அனைத்தும் சில சட்டங்கள், பிரச்னைகள் தொடர்பானவையே. அந்தச் சட்டங்கள், பிரச்னைகள் குறித்து ஷரீஅத்தின் நிலைப்பாட்டை அறிய முற்படும்போது ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகள்தாம் இவை. இந்தப் பிரச்னைகளோ மார்க்கத்தின் அடிப்படைகளுடன் தொடர்புள்ள பிரச்னைகள் அன்று. அதற்கு மாறாக அவை கிளைப் பிரச்னைகளாக, பகுதிப் பிரச்னைகளாகத்தான் இருக்கின்றன. குர்ஆனும் நபிவழியும்தாம் இறுதி ஆதாரங்கள் என அனைத்து மஸ்லக்குகளைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள். அதன்படித்தான் செயல்படுகின்றோம் என்றே அனைவரும் வாதிடுகின்றார்கள். ஆனால் சில சட்டங்கள், பிரச்னைகள் தொடர்பாக அவற்றுக்குச் சான்றாக முன்வைக்கப்படுகின்ற சான்றுகள் குறித்துதாம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. எந்தவொரு மஸ்லக்கையும் ஆதாரமற்றது என்று சொல்லிவிட முடியாது. அனைத்துமே தமக்கென ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டிருக்கின்றன. இந்தச் சான்றுகளை மையப்படுத்தித்தான் வாதங்களும் சர்ச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சான்றுகளின் அடிப்படையில் எந்தப் பிரச்னையில் எந்த மஸ்லக்குக்கு முன்னுரிமை இருக்கின்றது என்கிற கோணத்தில்தான் விவாதம் நடக்கின்றது. இதனை நெஞ்சத்தில் பசுமையாக வைத்திருந்தால் கருத்துவேறுபாட்டில் கடுமையோ, தீவிரமோ ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த மஸ்லக்குகள் தொடர்பாக சர்ச்சைகள், வாதவிவாதங்களில் மூழ்கிப்போவதால் தீனின் உண்மையான நோக்கம், அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகியவை அமுங்கிப் போகின்றன; இறைவனுடனும் இறைத்தூதருடனும் தொடர்பும் பற்றும் மழுங்கிப் போகின்றன; நடத்தையிலும் எண்ணத்திலும் உயர்ந்தோங்க வேண்டும் என்கிற ஆசையும் கைரே உம்மத்தாக இருக்கின்றோம் என்கிற எண்ணத்தெளிவும், தன்னுடைய வெற்றிக்காகவும் உலகின் வெற்றிக்காகவும் அந்த மார்க்கத்திற்காக சுறுசுறுப்பாக செயல்பட்டாக வேண்டும் என்கிற கடமையுணர்வும் மறந்துபோகின்றன; இன்றைய காலத்தில் இஸ்லாம்தான் ஒரே மாற்றாக இருக்கின்றது என்கிற உண்மையும் இதுபோன்ற அடிப்படையான விவகாரங்களும் பார்வையிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் விலகிப்போய்விடுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இது போன்ற விஷயங்கள் நம்முடைய பேச்சிலும் விவாதத்திலும் இடம்பெறாமலே போய்விடுகின்றன.

மார்க்கத்தைப் பற்றிய சரியான கருத்தோட்டமும் தற்போதைய நிலைமைகளில் அது நம்மிடம் வேண்டுவன எவை என்பவற்றைப் பற்றிய விழிப்புணர்வு நம்முடைய நெஞ்சங்களில் இருக்குமேயானால், இந்தக் கிளைப் பிரச்னைகளிலும் சின்னச் சின்ன சர்ச்சைகளிலும் நாம் சிக்கிக்கொள்ளவே மாட்டோம். மற்றவர்கள் செய்கின்ற இஜ்திஹாதையும் செயல்முறையையும் மகிழ்ச்சியுடன் சகித்துக்கொள்வோம். தொடக்கக்காலத்தில் நபித்தோழர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். அவர்களுக்கிடையிலும் சில பிரச்னைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் அந்தக் கருத்து வேறுபாடுகளை வைத்துக்கொண்டே அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றார்கள். மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்கின்ற பணியிலும் மார்க்கத்தை மேலோங்கச் செய்கின்ற போராட்டத்திலும் தோளோடு தோள் நின்று பங்கேற்றார்கள். அந்த அழகிய முன்மாதிரியை ஏற்றுச் செயல்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தில் இந்த மஸ்லக் பற்றிய பிரச்னைகளே இல்லை என மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கின்றேன். மஸ்லக் பற்றிய கருத்து வேறுபாடுகளின் தீவிரத்தையும் கடுமையையும் கட்டுப்படுத்துவதில் ஜமாஅத் பெருமளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் ஒரு வகையில் அவற்றை முற்றாக ஒழித்துவிட்டிருக்கின்றது என்றே சொல்வேன். ஜமாஅத் அன்பர்களில் வெவ்வேறு மஸ்லக்குகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் யார் எந்த மஸ்லக்கைப் பின்பற்றுகின்றார் என்கிற அளவிலும் கூட ஜமாஅத் அன்பர்கள் விசாரித்துக்கொள்வதுமில்லை; அது பற்றிய சர்ச்சையே மூள்வதில்லை. இகாமத்தே தீன் - தீனை நிலைநாட்டுதல் என்கிற உயர்ந்த, சிறந்த குறிக்கோள் ஜமாஅத் ஊழியர்களை ஓரணியில் நிற்க வைத்திருக்கின்றது. இதே போன்று ஜமாஅத்துடன் தொடர்புடைய மார்க்க மதரஸாக்கள், நிறுவனங்களிலும் கூட ஃபிக்ஹு நிலைப்பாடுகள் பற்றி விவாதம் நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று எவர் மீதும் எந்தவோர் மஸ்லக்கும் திணிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, தாமாக நிலைப்பாடு ஒன்றை எடுத்துக்கொள்வதற்கு எல்லாருக்கும் சுதந்திரம் தரப்படுகின்றது.
 
m நம்முடைய நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பாலும் நெருக்கமாக வாழ்கின்றார்கள். நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி இதே நிலைமை தான் என்றாலும் அண்மைக்காலமாக  முஸ்லிம்களில் பெரும் எண்ணிக்கையினர் மாநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பதைப் பார்க்க முடிகின்றது. இவர்களுக்கும் பொதுவான முஸ்லிம்களுக்கும் தொடர்போ, உறவோ இருப்பதில்லை. தொழுகை வசதியின்றி, பள்ளிவாசல் இன்றி இவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றார்கள். வெள்ளிக்கிழமை தொழுகைக்கும் பெருநாள் தொழுகைகளுக்கும் இரமளான் மாதத்து தராவீஹ் தொழுகைகளுக்கும் கூட இவர்கள் வெகுதொலைவு பயணிக்க வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றார்கள். தனித்து வாழ்வதால் இவர்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு இஸ்லாத்தைப் போதிப்பதற்கும் இஸ்லாமிய அச்சில் பயிற்சி கொடுப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகின்றது. கிராமங்களிலும் இவ்வாறு ஓரிரு குடும்பங்களோ அல்லது நான்கைந்து குடும்பங்களோ மட்டும் முஸ்லிம்களாக இருக்கின்ற சூழலில் அந்தக் கிராமத்து முஸ்லிம்களும் மேற்படி சிக்கல்களுக்கு ஆளாகின்றார்கள். இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி வாழ்வதிலும், இஸ்லாமியப் பாரம்பர்யங்களைப் பின்பற்றுவதிலும் சிரமத்துக்கு ஆளாகின்றார்கள். இந்த முஸ்லிம் குடும்பங்களை முஸ்லிம் குடியிருப்புகளுடன் பிணைப்பதற்கு உங்களுடைய பார்வையில் எத்தகைய வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?  


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: ஒரு முக்கியமான பிரச்னையை நீங்கள் எடுத்துரைத்திருக்கின்றீர்கள்.

பொதுவாக பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் அடிப்படை குடியிருப்பு வசதிகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கின்ற பகுதிகளில் ஸ்லம் ஏரியா எனச் சொல்லப்படுகின்ற பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் விரல் விட்டு எண்ணி விடுகின்ற அளவுக்கு மிகக் குறைவான எண்ணிக்கையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் மார்க்கத்தைப் பேணி வாழ்வதே பெரும் பாடாகிவிடுகின்றது. மார்க்கத்தின் கட்டளைகளும் அது விதிக்கின்ற பொறுப்புகளும் ஒரு பக்கம் இருக்க, இவர்கள் வாழ்கின்ற சூழல் இவர்களை நேரெதிர் திசையில் இழுக்கின்றது. மிகவும் இக்கட்டான நிலைமைதான்.

இவர்கள் தொடர்பாக நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம்? நான்கு களங்களில் கவனம் செலுத்துவது அவசியம் என்று எனக்குத் தோன்றுகின்றது.

  • முதலாவதாக, நாடு முழுவதும் இவ்வாறு முஸ்லிம் குடியிருப்புகளை விட்டு விலகி தனித்தும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி வாழ்கின்ற முஸ்லிம்கள் குறித்து சர்வே எடுக்க வேண்டும். இவ்வாறு சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களின் மார்க்கத் தொடர்பு எந்த நிலைமையில் இருக்கின்றது? முஸ்லிம் குடியிருப்புகளை விட்டு விலகி வாழ்வதால் ஏற்படுகின்ற பாதகமான நிலைமையை இவர்கள் எப்படி எதிர்கொள்கின்றார்கள்? என்கிற ரீதியில் ஆய்வு நடத்த வேண்டும். என்னைப் பொருத்த வரை எல்லா இடங்களிலும் நிலைமை ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகின்றேன். இஸ்லாத்தின்படி வாழ்வதற்கு இவர்களில் பலரும் பலவிதமான முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும். இவர்களை சீர்திருத்துவதற்கான திட்டம்வகுக்கும்போது அந்த முயற்சிகளும் அனுபவங்களும் பெரிதும் உதவியாக இருக்கும்.
  • இத்தகைய இடங்களில் தங்கியிருந்து மார்க்க சேவையாற்றுகின்ற வகையில் முஅல்லிம்கள், ஆசிரியர்கள், இமாம்கள், அழைப்பாளர்கள் போன்றவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். இவர்கள் இந்த இடங்களில் தங்கியிருந்து மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் தேவையான அடிப்படைக் கல்வியையும் போதிப்பார்கள். இத்தகைய இடங்களில் வாழ்கின்ற மக்களின் மார்க்கத் தொடர்பை வலுப்படுத்துவதற்கு முயல வேண்டும். இதற்கான செலவுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
  • அடுத்து இந்தக் குடியிருப்புவாசிகளுக்கு அவர்களின் தேவைகளுக்கேற்ப அவர்களுடைய மொழியில் மார்க்கத்தின் அடிப்படைகளை விவரிக்கின்ற நூல்களை வழங்க வேண்டும். குர்ஆன், நபிமொழி, அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாறு ஆகியவற்றையும் நவீன மனங்களைத் திருப்திப்படுத்துகின்ற ஆக்கங்களையும் கொண்டதாக இந்த நூலககங்கள் இருத்தல் வேண்டும். இத்தகைய நூல்கள் இன்று நாட்டின் அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளன. தேவைப்பட்டால் புதியதாக நூல்களும் எழுதப்படல் வேண்டும்.
  • இது தொடர்பாக இன்னொன்றையும் செய்யலாம். இவர்களின் பிள்ளைகளுக்காக இஸ்லாத்தைப் போதிக்கின்ற மதரஸாக்களை நிறுவி நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். அடுத்த தலைமுறையை மார்க்கத்தின் நிழலில் கொண்டு வருவதற்கு இத்தகைய முயற்சி இன்றியமையாததாகும். இதற்காக மார்க்க மதரஸாக்களின் உதவியையும் பெறலாம். இது மிகப் பெரிய வேலை. இதற்காக முஸ்லிம் அமைப்புகளும் சமுதாயத்தின் நலன்களில் அக்கறை கொண்டிருக்கின்ற புரவலர்களும் ஒன்றுசேர்ந்து நீண்டக்காலத் திட்டம் வகுத்து செயல்பட்டாக வேண்டும். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் தனது பங்கை ஆற்றும்.
m இன்று இந்திய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற, திடீரென முளைத்துவிடுகின்ற பிரச்னைகள், சவால்கள்; எடுத்துக்காட்டாக, பள்ளிவாசல்களின் பாதுகாப்பு, அரசுக் கல்வித்திட்டத்தில் இஸ்லாம் அல்லாத அல்லது இஸ்லாமியக்  கோட்பாடுகளுக்கு நேர்எதிரான பாடங்கள் திணிப்பு, அவ்வப்போது ஆங்காங்கே நடக்கின்ற வகுப்புக்கலவரங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டாவதாக முஸ்லிம்கள் மீதுள்ள பொறுப்புகள். அவர்கள் செய்தே தீரவேண்டிய வேலைகளாக இவற்றைச் சொல்லலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, மார்க்கக் கல்விக்கான முறையான ஏற்பாடு, செக்குலர் கல்வியோடு மார்க்கக்கல்விக்கான ஏற்பாடு, முஸ்லிம் சமூக சீர்திருத்தப்பணிகள் போன்றவை. இவற்றை முஸ்லிம்கள் செய்துகொண்டும் இருக்கின்றார்கள். இந்த இரண்டுவிதமான பணிகளிலும் வெவ்வேறு முஸ்லிம் அமைப்புகளும் இயக்கங்களும் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையே பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஏதாவது செய்யப்பட வேண்டாமா? முதல் வகை சவால்களைச் சந்திப்பதற்காக பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத் என்கிற கூட்டமைப்பை உருவாக்கின. இந்தக் கூட்டமைப்பு இன்றும் செயலாற்றி வருகின்றது. என்றாலும் அதன் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றவையாகவோ தீர்க்கமானவையாகவோ இல்லை. இந்த நிலையில் மேறப்டி இரண்டு வகை சவால்களையும் எதிர்கொள்வதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை ஒருங்கிணைத்து எல்லாரும் ஒன்று சேர்ந்து செயல்படுவது சாத்தியமா? உங்களுடைய கருத்து என்ன?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நீங்கள் குறிப்பிட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புளும் நிறுவனங்களும் களத்தில் இருக்கின்றன. இவை அனைத்தும் சிறிய, பெரிய அளவில் தம்மால் இயன்றதைச் செய்து வருகின்றன. சில தனிமனிதர்களும் இந்தச் சவால்களில் ஆர்வம் கொண்டு தம்மால் முடிந்ததைச் செய்து வருகின்றார்கள். ஆனால் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள், நிறுவனங்கள், தனிமனிதர்கள் ஆகியோருக்கிடையில் எந்தவகையான தொடர்போ, இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடோ இல்லை என்பதுதான் உண்மை. முஸ்லிம் அமைப்புகள் ஒவ்வொன்றும் தத்தமது பாணியில் தம்மால் முடிந்ததைச் செய்து வருகின்றன. நீங்கள் குறிப்பிட்டுள்ள படி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளையும் இயக்கங்களையும் கொண்ட கூட்டமைப்புதான் அகில இந்திய முஸ்லிம் முஷாவரத். இந்தக் கூட்டமைப்பைக் கொண்டு நாம் பிரச்னைகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு தீர்ப்பதற்கு முயலலாம். கடந்த காலத்தில் இத்தகைய முயற்சிகள் பல முறை நடந்திருக்கின்றன. இந்தக் கூட்டமைப்பை வலுப்படுத்துவது நம் எல்லார் மீதும் இருக்கின்ற பொறுப்பாகும்.

m முஸ்லிம் தனியார் சட்டம் இன்று மிக முக்கியமான பிரச்னையாக இருக்கின்றது. ஒருவகையில் அதனை நம் மீது திணிக்கப்பட்ட, திடீரென முளைத்துவிட்ட அதிரடி பிரச்னையாகவும் சொல்லலாம். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்துடன் தொடக்கத்திலிருந்தே ஜமாஅத் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கின்றது. அது நிறுவப்படுவதிலும் ஜமாஅத் முக்கியமான பங்காற்றியது. நீங்களும் அதன் துணைத் தலைவராக இருக்கின்றீர்கள். முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கின்றதா? எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது? தற்போதைய நிலைமை என்ன?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்னையை அசாதாரணமான பிரச்னை என்றோ ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் திடீரென முளைத்துவிட்ட அதிரடி பிரச்னையாகவோ சொல்லி விட முடியாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தியர்கள் அனைவருக்கும் தத்தமது தனியார் சட்டங்களின்படிச் செயல்படுகின்ற சுதந்திரமும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சுதந்திரத்தையும் உரிமையையும் தக்க வைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டியது அவசியமாகின்றது.

சில சமயம் நாட்டின் நீதிமன்றங்கள் தருகின்ற சில தீர்ப்புகள் முஸ்லிம் தனியார் சட்டத்துடன் மோதுகின்றவையாக அமைந்துவிடுகின்றன. அல்லது இந்த நீதிமன்றங்கள் தருகின்ற சில விளக்கங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு நேர் எதிரானவையாக அமைந்துவிடுகின்றன. இந்தத் தீர்ப்புகளை எதிர்க்கத் தவறினால் இந்தத் தீர்ப்புகளும் இந்தத் தீர்ப்புகளில் இடம் பெற்றுவிட்ட தவறான விளக்கங்களும் வருங்காலத்தில் தவறான முன்னுதாரணங்களாக அமைந்துபோகின்ற ஆபத்து இருக்கின்றது. பிறகு சிறுகச் சிறுக ஷரீஅத்தின் பல்வேறு அம்சங்கள் மீது கை வைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்துவிட நேரிடலாம்.

இதே போன்று நாட்டில் பல்வேறு மதத்தவர்களுக்கு தனித்தனி தனியார் சட்டங்கள் எதற்கு? அனைத்தையும் ஒழித்துவிட்டு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரலாமே என்றும் அவ்வப்போது குரல் எழுப்பப்படுவதுண்டு. நாட்டின் உச்ச நீதிமன்றமும் தன் பங்குக்கு இது குறித்து அரசின் கவனத்தை அவ்வப்போது ஈர்த்து வருவதுமுண்டு. முஸ்லிம்களின் விருப்பத்துடன்தான் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றே இன்று வரை அரசாங்கம் சொல்லி வருகின்றது. ஆனால் முஸ்லிம்களின் விருப்பம் என்று சொல்லி இவர்கள் எத்தகைய நடவடிக்கையை எப்போது எடுப்பார்கள் என்று எதுவும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.

அதே சமயம் இங்கு இன்னொன்றையும் அழுத்தம்திருத்தமாக, ஆணித்தரமாக தெளிவுபடுத்திவிடுவதும் அவசியமாகின்றது. அதாவது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விரும்பினாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் தம்முடைய விருப்பங்களின் அடிப்படையில் எத்தகைய திருத்தத்தையும் கொண்டு வர முடியாது. அந்த உரிமை அவர்களுக்கு இல்லை; எவருக்கும் இல்லை.

இந்தப் பிரச்னையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பாராட்டத்தக்க முறையில் செயலாற்றி வருகின்றது. பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், இயக்கங்கள், தனி மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதற்கு இருந்துவருகின்றது.

என்றாலும்இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அது மிகவும் கவனிக்கத்தக்க பிரச்னையும் கூட. அண்மைக்காலமாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தனது வட்டத்துக்கு வெளியே இருக்கின்ற பிரச்னைகளையும் எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. பல்வேறு பிரச்னைகளில் அது மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளது. இந்த அக்கறையும் ஆர்வமும் இனி வருங்காலத்தில் அதற்கு நன்மையோ இலாபமோ அளிக்காது என்பதுதான் எனது கவலையெல்லாம்.

உங்களுக்கு ஒன்று நினைவிருக்கும். பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்டவுடன் ராபிதா கமிட்டி, ஆக்ஷன் கமிட்டி, பாபரி மஸ்ஜித் கமிட்டி ஆகிய மூன்று கமிட்டிகள் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் அவர்களுக்குள் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் பணியில் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை. இந்த நிலையில் சமுதாயத்தின் முக்கியமான பிரச்னை என்பதால் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்த விவகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என யோசனை சொல்லப்பட்டது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற முக்கியமான பிரச்னை என்பதால் இந்த விவகாரத்தை வாரியம் எடுத்துக் கொண்டது.

ஆனால் இது எங்குப் போய் முடிந்ததெனில் இன்று முஸ்லிம்களின் கட்டாயக் கல்வி, வக்ஃப் சொத்துகள் பற்றிய பிரச்னைகள் போன்றவற்றையும் வாரியம் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளது. இத்தனைக்கும் இந்தப் பிரச்னைகளை ஏற்கனவே சில முஸ்லிம் அமைப்புகள் ஆண்டு வந்துள்ளன; துடிப்புடன் செயல்பட்டு வந்துள்ளன. இப்போது நிலைமை என்னவெனில் இந்த விவகாரத்தில் அந்த அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை! இதன் விளைவாக வாரியத்துடனான அந்த அமைப்புகளின் தொடர்பும் உறவும் பலவீனமடைகின்ற ஆபத்து மூண்டுள்ளது. தங்களுடைய பணிகளில் வாரியம் தலையிடுவதாக அந்த அமைப்பினர் நினைப்பதற்கும் வாய்ப்வு இருக்கின்றது.

இதே போன்று சமூக சீர்திருத்தப் பணிகளிலும் வாரியம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இந்த வேலையில் முஸ்லிம் அமைப்புகள் அனைத்துமே தொடக்கத்திலிருந்தே ஈடுபட்டு வருகின்றன. மார்க்க மதரஸாக்களும் தனி மனிதர்களும்கூட இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் தனியார் சட்ட வாரியமோ இது தொடர்பாக அந்த அமைப்புகளைத் தொடர்பு கொள்வதுமில்லை. அந்த அமைப்புகளும் இந்த விவகாரத்தில் வாரியத்துடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.

சமுதாயத்தின் அமைப்புகளால் தீர்த்துக்கொள்ளத்தக்க பிரச்னைகளையும் வாரியம் வலிந்து தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதாகத் தோன்றுகின்றது. இதன் இயல்பான விளைவாக அந்த அமைப்புகளுக்கும் வாரியத்துக்கும் இடையில் இடைவெளி விழலாம். அதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தனது செயல்பாடுகளை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பானவற்றில் மட்டும் குவித்து வைத்திருப்பதே நல்லது. அதுதான் அதற்கு வலு சேர்க்கும். அந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் முஸ்லிம் அமைப்புகள் அதற்கு முழு மனநிறைவுடன் ஒத்துழைப்பும் ஆதரவும் அளிப்பர்.

m இன்று நாட்டில் ஊழல் ஒழிப்பு மிகப்பெரும் பிரச்னையாக பேருருவம் எடுத்துள்ளது. மிகப் பெரும் மக்கள் பிரச்னையாகவும் இது வளர்ந்துள்ளது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தமான விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் அரங்கிலும் சட்டம் இயற்றுதல் தொடர்பாகவும் நடந்து வருகின்ற முயற்சிகள் குறித்து உங்களுடைய கருத்து  என்ன?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நமது நாட்டில் ஊழலும் இலஞ்சமும் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. ஆனால் இப்போது பயங்கரமான அளவில் பேருருவம் எடுத்திருப்பதைப் போன்று இதற்கு முன் எப்போதும் நடந்தது கிடையாது.

இது நம் நாட்டின் அரசியல், பொது வாழ்வு ஆகியவற்றின் நாடி நரம்புகளிலெல்லாம் இரண்டறக் கலந்துவிட்டிருக்கின்றது.

இந்த நாட்டில் இலஞ்சம் கொடுத்து எந்தவொரு வேலையையும் சாதித்து விட முடியும்; இலஞ்சம் கொடுக்காமல் ஆகுமான உரிமையைக் கூடப் பெற முடியாது. இந்த உண்மைநிலையை இந்த நாட்டு குடிமக்கள் அனைவருமே நன்கு அறிந்திருக்கின்றார்கள்.

இப்போது இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்காக இங்கே மக்கள் எழுந்திருக்கின்றார்கள்.  பாடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் முயற்சிகளை நாங்கள் மனமார வரவேற்கின்றோம்.

ஆனால் வெறுமனே சட்டம் இயற்றுவதால் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துவிட முடியாது என்றே நாங்கள் கருதுகின்றோம். அதற்கு மாறாக இலஞ்சமும் ஊழலும் புதுப்புது வேடங்களைப் பூண்டு வந்துகொண்டே இருக்கும்.

இந்தத் தீமைகளை ஒழிப்பதற்கு இரண்டு விஷயங்கள் தேவை. முதலாவதாக, நாடெங்கிலும் சமூகம் முழுவதிலும் இலஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிரான சூழலை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இலஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் மன்னிக்க முடியாதக் குற்றமாக நினைக்க வேண்டும். இந்தச் சமூகச் சூழல் எந்த அளவுக்கு உக்கிரமாக இருக்க வேண்டுமெனில் இலஞ்சமாகப் பணத்தைக் கொடுப்பதற்கோ, வாங்குவதற்கோ எவருக்குமே தைரியம் இருக்கக் கூடாது. இலஞ்ச ஊழலுக்கு எதிராக இத்தகைய இறுக்கமான சூழலை ஏற்படுத்தாத வரையில் வெறுமனே சிலரைக் கைது செய்து சிறையில் அடைப்பதாலோ, சிலர் மீது வழக்குத் தொடர்வதாலோ இந்தத் தீமையை ஒழிக்கவே முடியாது. இத்தகைய சமூகச் சூழலை ஏற்படுத்துவதற்காக எவருமே எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் வருத்தம் தருகின்ற செய்தி.

இரண்டாவதாக தனி மனிதர்களிலும் சமூகத்திலும் இறையச்சமும் மறுமையில் இவ்வுலகச் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்படுவோம் என்கிற நம்பிக்கையும் நிலை பெற வேண்டும். இலஞ்சம் வாங்குகின்ற ஒவ்வொரு மனிதனும் நாளை மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்குமே...! அப்போது இந்தச் செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றோம் என்று எண்ணி மனம் பதைக்க வேண்டும். இலஞ்சம் கொடுக்கின்றவனும் எந்தத் தகாத செயலுக்காக அல்லது முறைகேட்டுக்காக இலஞ்சம் கொடுக்கின்றானோ அந்தத் தகாத செயல் குறித்தும் முறைகேடு குறித்தும் நாளை மறுமை நாளில் இறைவன் விசாரித்தால் என்ன பதில் சொல்வது, அவன் தருகின்ற தண்டனையை எப்படிச் சகிப்பது என்கிற ரீதியில் யோசிக்க வேண்டும்.  இதுதான் இந்தப் பிரச்னைக்குச் சரியான தீர்வாகும். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இத்தகைய மனோபாவத்தை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய சிந்தனைத் தெளிவை நெஞ்சங்களில் அழுத்தமாகப் பதியச் செய்வதற்கும்தான் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.

தமிழில்
: T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat.Translated by T Azeez Luthfullah.  
Concluded 
This is the concluding part (total four parts) of the interview of Ameer-e-Jamaat More Here and Here and Here
 

Friday, May 27, 2011

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளை அடைவதற்கான போராட்டத்தைத் தொடரும்! 
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் அமீரே ஜமாஅத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஏப்ரல் 6 அன்றே தஅவத் இதழுக்காக அவருடன் உரையாட முயன்றேன். ஆனால் மௌலானா ஷஃபி மூனிஸ் சாகிப் இறந்துவிட்டதால் அன்றைய தினம் மௌலானா அவர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பும் நேரமும் வாய்க்கவில்லை.

மத்தியப் பிரதிநிதிகள் சபையின் கடைசி அமர்வையும் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எப்பாடு பட்டாவது ஏப்ரல் 31 ஆம் தேதியிட்ட தஅவத் இதழில் அமீரே ஜமாஅத் அவர்களின் பேட்டியை வெளியிட வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனால் மௌலானா அவர்களோ அடுத்தடுத்த தினங்களில் இன்னும் அதிகமாகப் பிஸியாகிவிட்டார். சுற்றுப்பயணங்கள் வேறு! இந்த நிலைமையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தொடங்கப்பட்டுவிட அது தொடர்பான கேள்விகளையும் சேர்க்க வேண்டியதாயிற்று.

இவ்வாறாக, பல்வேறு பிரச்னைகள், வாய்ப்புகள், சவால்கள் குறித்து மௌலானா அவர்களுடன் பல மணிநேரம் பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.வெவ்வேறு நாட்களில் மூன்று அமர்வுகளில் இந்த உரையாடல்கள் நடந்தன.

மௌலானா அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் எல்லாவற்றைக் குறித்தும் விரிவாக விடையளித்தார். பேட்டி நீண்டுவிட்டதால் மௌலானா அவர்களின் அனுமதியுடன் சில கேள்விகளுக்கான விடைகளின் சில பகுதிகளை நீக்கி சுருக்க வேண்டி வந்தது.

இவ்வாறாக, பல்வேறு விஷயங்கள் குறித்து ஒருங்கிணைந்த, இரத்தினச் சுருக்கமான, நிறைவான விடைகள் தொகுத்துத் தரப்படுகின்றன.  பேட்டியின் தொகுப்பை அமீரே ஜமாஅத் அவர்களும் ஒரு பார்வை பார்த்துக் கொடுத்துள்ளார்.

சற்றே காலதாமதமாக இந்த நேர்காணல் அச்சானாலும் மன நிறைவைத் தரும் என்று எதிர்பார்க்கின்றேன். முஸ்லிம் உம்மத், இஸ்லாமிய இயக்கம், நாட்டுப் பிரச்னைகள், சமுதாயச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் இதனை வாசித்துப் பயன் பெறுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. நாட்டுநடப்பு, நிகழ்வுகள் பற்றிய மௌலானாவின் தாக்கங்களும், எண்ணங்களும் அவ்வப்போது வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்!
- பர்வாஸ் ரஹ்மானி, ஆசிரியர், தஅவத் வாரம் இருமுறை


m ஜமாஅத் உறுப்பினர்கள் மீண்டும் ஒரு முறை உங்களைத் தங்களின் அமீராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். மிகப் பெரும் பொறுப்பை உங்கள் மீது சுமத்தியிருக்கின்றார்கள். நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
முதல் தடவையாக என் மீது இந்தப் பொ-றுப்பு சுமத்தப்பட்ட போது இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவாற்றல், இறையச்சம், இறைப்பற்று, ஞானம், மதிநுட்பம், அர்ப்பணிக்கும் பண்பு, இறைவழியில் நிலைத்து நிற்றல் போன்ற அனைத்திலும் மற்றவர்களை விட கடைகோடியில் இருப்பவனாகத் தான் என்னை நானே பார்த்தேன். நான்கு ஆண்டுகள் இந்தப் பொறுப்பைச் சுமந்த பிறகு அந்த உணர்வு இன்னும் கூடியிருக்கின்றது.

உண்மை என்னவெனில், வாழ்க்கைத் திட்டம் பற்றிய புரட்சிகரமான பார்வையைக் கொண்ட, தனிப்பட்ட வாழ்விலும் கூட்டு வாழ்விலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த விழைகின்ற, இந்த நோக்கத்திற்காக நாடு முழுவதிலும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்ற ஒரு இயக்கத்துக்குத் தலைமை தாங்குவதும் வழிகாட்டுவதும் சாதாரண வேலை அன்று. ஆனால் ஜமாஅத் இந்த எளியவன் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். கடந்த நான்காண்டுகளில் இயக்கத் தோழர்களும் நண்பர்களும் எனக்கு அளித்த ஆதரவும் ஒத்துழைப்பும் எனக்கு மனநிறைவைத் தருகின்றது; என்னுடைய கவலையைப் போக்குகின்றது.

அல்லாஹ்வின் தனிப்பெரும் கிருபைக்கும் அருளுக்கும் அடுத்ததாக இயக்கத் தோழர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அசாதாரணமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இனி வரும் நாட்களிலும் எனக்கு இந்த ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்றும் இயக்கம் வெற்றிப்பாதையில் மேன்மேலும் முன்னேறிச் செல்லும் என்றும் நம்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்

m மத்திய தலைமையகச் சூழலைக் குறித்துச் சொல்லுங்களேன். அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியத் தலைமையகத்துடன் இணைந்து இருந்திருக்கின்றீர்கள். பன்னிரு ஆண்டுகள் அகில இந்தித் துணைத் தலைவராக (1991-இலிருந்து) செயல்பட்டிருக்கின்றீர்கள். எனவே மத்தியத் தலைமையகமும் அதன் சூழலும் உங்களைப் பொறுத்த வரை அந்நியமான சூழல் கிடையாது. என்றாலும் நீங்கள் அமீரே ஜமாஅத்தாகச் செயலாற்றிய இந்த நான்கு ஆண்டுகளில் மத்தியத் தலைமையகச் சூழல் குறித்து உங்களுடைய உணர்வுகளைக் கூறுங்களேன்

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
இந்தக் கேள்வி இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. முதலா-வது மத்தியத் தலைமையகத்தில் இருப்பவர்கள் ஒருவருக்-கொருவர் கொண்டுள்ள உறவு பற்றியது. இந்தக் கோணத்-தில் பார்த்தால் மனம் மகிழ்ச்சியால் நிறைகின்றது. மத்தியத் தலைமையகத்தில் பணியாற்றுகின்ற பொறுப்பாளர்கள், ஊழியர்கள்  மத்தியில் அன்பும் இணக்கமும் தூய எண்ணமும் நிறைந்த உறவும் தொடர்பும் நிலைபெற்றுள்ளது. அவர்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இந்த எளியவனுக்குத் தொடர்ந்து கிடைத்து வந்துள்ளது. தலைமையகத்தில் இருக்கின்ற நாம் அனைவருமே ஒரே டீமாக, குழுவாகச் சேர்ந்து செயலாற்றி வருகின்றோம்.

இரண்டாவது பரிமாணம் இறைத்தொடர்பு, தஸ்கியா ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இந்தக் கோணத்தில் பார்த்தால் சில தோழர்கள் மிக மிக பாராட்டத்தக்க அளவில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் நம் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றார்கள்.

சில சகோதரர்களிடம் சில பலவீனங்கள் காணப்படுகின்றன. ஆனால் தங்களின் பலவீனங்களை அவர்கள்  உணர்ந்திருக்கின்றார்கள். இது மகிழ்ச்சியளிக்கும செய்தியாகும். சகோதரர்களுக்கு அவர்களிடம் இருக்கின்ற பலவீனங்கள் குறித்து உணர்த்தும்போது எவருமே முகம் சுளித்ததில்லை; அதிருப்தியடைந்ததில்லை. இனி வருங்காலத்தில் அவர்கள் தங்களின் பலவீனங்களைக் களைந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

m  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த மீக்காத்-தில் (2007 முதல் 2011 வரையிலான நான்கு ஆண்டுகளில்) சில இலக்குகளை நிர்ணயித்திருந்-தது. எடுத்துக்காட்டாக, உறுப்பினர்களின் எண்ணிக்-கையை அதிகரித்தல், ஊழியர்களின் எண்ணிக்-கையை நான்காண்டுகளில் இரட்டிப்பாக்குதல் என இலக்குகளை நிர்ணயித்திருந்தது. அந்த இலக்குகளை அடைந்து விட்டீர்களா?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
சென்ற மீக்காத்தில் உறுப்பினர், ஊழியர் எண்ணிக்கையைப் பெருக்குதல் தொடர்பாக மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இலக்குகளை நிர்ணயித்திருந்தோம். இஸ்லாமிய சமூகம், இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பு, மகளிர் மத்தியில் பணியை விரிவுபடுத்துதல், மக்கள் சேவை, கல்வி, பயிற்சி, அமைப்பு நிர்வாகம் எனப் பல்வேறு களங்களிலும் இலக்குகளை நிர்ணயித்திருந்தோம். இவற்றில் பெரும்பாலான களங்களில் இலக்குகளை அடைவதில் வெற்றி பெற்றிருக்கின்றோம். இறைவனுக்கே நன்றிகள் அனைத்தும்! 

அழைப்பியல் களத்தில் நாம் நிறையவே செய்திருக்கின்றோம். பொதுச்செயலாளர் சமர்ப்பித்த அறிக்கையில் இது எடுப்பாகச் சொல்லப்பட்டிருந்தது. சிலக்  களங்களில் அய்ம்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருக்கின்றோம்.

இஸ்லாமிய சமூகத் துறையை எடுத்துக் கொண்டால் நம் வசம் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கியிருக்கின்றோம்.

எல்லா மாநிலங்களிலும் உறுப்பினர்கள் மாநாடுகள் நடந்திருக்கின்றன. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி அகில இந்திய அளவில் உறுப்பினர்களுக்கான மாநாடும் தில்லியில் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள், மாநாடுகள் ஆகியவற்றால் நல்ல தாக்கம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகின்றது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்ற சமூக அமைப்புகளுடன் தொடர்பும் உறவும் வளர்ந்துள்ளன.  மக்கள் சேவைக்கான மிகப் பெரும் திட்டங்கள் மிகப் பெரும் அளவில் நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இஸ்லாத்தின் பொருளாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்ற முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாமிய வங்கியியலை நிறுவுதல் தொடர்பாக சென்ற மீக்காத்தில் மிக அதிக அளவில் பல்வகை நடவடிக்கைகள்  முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

பயிற்சித் துறையோ புதுமையான உத்திகளை மேற்கொண்டது. பயிற்சித் துறைச் செயலாளார் பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார். வாய்ப்புள்ள இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தனியாக சந்தித்துப் பேசினார். அவர்களின் சிந்தனையையும் மனோபாவத்தையும் புரிந்துகொள்ள முயன்றார். சீர்திருத்தத்தின்பக்கம் அவர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட மாநில ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தொடர்பான தம்முடைய அறிக்கையைச் சமர்ப்பித்தார். இனி வருங்காலத்தில் செய்ய வேண்டியவன குறித்து ஆலோசித்தார். இதற்காக வேண்டி நடந்த மாநில ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் அகில இந்தியத் துணைத் தலைவர் அகில இந்தியத் துணைத் தலைவர் மௌலானா முஹம்மத் ஜஃபர் தலைமை வகித்தார்.

முந்தைய மீக்காத்துக்களோடு ஒப்பிடும் போது அவற்றை விட சென்ற மீக்காத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகி இருக்கின்றது. ஆனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்ததைப் போன்று ஊழியர்களின் எண்ணிக்கை பெருகவில்லை. ஊழியர்களின் எண்ணிக்கை விகிதம் குறைவாகத்தான் நீடிக்கின்றது. இந்த விஷயத்தில் தீவிரக் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இலக்குகளை அடைகின்ற விஷயத்தில் அனைத்து மாநிலங்களின் நிலைமையும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. சில மாநிலங்களில் அதிக அளவில் வேலை நடந்திருக்கின்றது. சில மாநிலங்களில் குறைந்த அளவே பணி நடந்திருக்கின்றது.

மேன்மேலும் போராடுவதற்கான வாய்ப்பையும் நல்லருளையும் இறைவன் தந்தருள்வானாக!

m அடிப்படையில் நீங்கள் ஒரு எழுத்தாளர். எழுத்தும் நூலாக்கமும்தாம் உங்களுடைய முதன்மைப் பணிகளாய் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இந்த நிலையில் நான்காண்டுகளுக்கு முன்பு அகில இந்தியத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு எழுத்துப் பணி எந்த நிலையில் உள்ளது? தலைவருக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவாறு எழுத்துக்கும் நூலாக்கத்திற்கும் நேரம் கொடுக்க முடிந்ததா? 

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
கடந்த மீக்காத்தில் இடைவிடாத நிர்வாகப் பணிகள், இயக்கப் பணிகள் ஆகியவற்றுக்கு நடுவில் நேரத்தை உறிஞ்சியெடுத்து எழுத்துப் பணியிலும் கவனம் செலுத்த முயன்று வந்துள்ளேன்.

இவ்வகையில் கடந்த நான்காண்டுகளில் செய்து முடிக்கப்பட்ட பணிகளின் பட்டியல் பின்வருமாறு:

(1) நான் மீள்பார்வை செய்து கொடுத்த பிறகு என்னுடைய கட்டுரைகளின் தொகுப்புகள் இரண்டு வெளியாயின.  அவற்றில் ஒன்று ‘இஸ்லாமிய ஆய்வுகளில் ஃபிக்ஹு தொடர்பான விவாதங்கள்’ என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டவை. இந்தத் தொகுப்பில் மிகவும் நுட்பமான, முக்கியமான ஃபிக்ஹு விவகாரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

எடுத்துக்காட்டாக, தாருல் ஹரப், தாருஸ்ஸலாம் ஆகியவை தொடர்பான கருத்தோட்டங்கள், இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விவரம், முஸ்லிம் அல்லாதவர்களுடன் திருமணத் தொடர்புகள், ஷரீஅத்தில் இஜ்திஹாத் செய்தல் தொடர்பான நிலை, ஷரீஅத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற சட்ட அந்தஸ்து, கிஸாஸ், லிஆன் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்கள் போன்றவற்றைக் குறித்து இந்தத் தொகுப்பில் ஆய்வு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவதாக வெளியான கட்டுரைத் தொகுப்பு ‘தஅவத் ஒ தர்பியத், இஸ்லாம் கா நக்தா ஒ நஜர்’.  அழைப்பியல், பயிற்சி தொடர்பாக நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இது.

2) பின்வரும் நூல்கள் மீள்பார்வை செய்யப்பட்டு, புதியதாகத் தொகுத்துத் தரப்பட்டன.
1. அவ்ரத் - இஸ்லாமி முஆஷிரா மே. (பெண் - இஸ்லாமிய சமூகத்தில்.
2. அவ்ரத் அவ்ர் இஸ்லாம் (பெண்களும் இஸ்லாமும்)
3. இஸ்லாம் அவ்ர் முஷ்கிலாத்தே ஹயாத் (வாழ்க்கைப் பிரச்னைகளும் இஸ்லாமும்)
4. இன்ஸான் அவ்ர் உஸ்கே மஸாயில் (மனிதனும் அவனுடைய பிரச்னைகளும்)

இந்த நான்கு ஆண்டுகளிலும் அலிகரிலிருந்து தஹ்கீகாதே இஸ்லாமி என்கிற இஸ்லாமிய ஆராய்ச்சிக்கான காலாண்டிதழ் ஓரிதழ் கூட தவறாமல் குறித்த நேரத்தில் வெளியானது. இது ஒரு ஆய்வு இதழ் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனைத்  தொகுப்பதும் நடத்துவதும் மிகவும் சிரமமான, கடின உழைப்பையும் தீவிரக் கவனத்தையும் வேண்டுகின்ற பணி என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. அன்புச் சகோதரர் டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வியின் ஒத்துழைப்புடன் இந்தப் பணி தடையின்றி நடந்துவருகின்றது.

இத்துடன் சில சிற்றேடுகளும் இந்த நான்காண்டுகளில் வெளியாயின. தலைவர் பொறுப்பை ஏற்றவுடனே தஅவத் இதழிலும் பிற பத்திரிகைகளிலும் என்னுடைய நேர்காணல்கள் வெளியாயின. அந்த நேர்காணல்களின் தொகுப்பை மீள்பார்வை செய்த பின்பு ‘தற்போதைய நிலைமைகளில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் செயல்திட்டம்’ என்கிற பெயரில் சிற்றேடு வெளியிடப்பட்டது. இதில் தேசம், சமுதாயம், உலகம், இயக்கம் தொடர்பாகத் தொடுக்கப்பட்டக் கேள்விகளுக்கு பதில் தரப்பட்டிருந்தது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த முயலப்பட்டிருந்தது.

என்றாலும் இந்த நான்காண்டுகளில் எழுத்து, நூலாக்கப் பணிகள் பாதிக்கப்பட்டன என்பதில் ஐயம் இல்லை. எழுத்துப் பணிக்காகத் தேவைப்படுகின்ற மனஓர்மையும் கவனமும் நேரமும் கிடைக்காமல் போயிற்று. என்னுடைய கவனக்குறைவும் ஒழுங்கின்மையும் இதற்குக் காரணமாயின.

இனி வரும் நாட்களில் இந்தப் பலவீனங்களைக் களைவதற்கு முயல்வேன். இன்ஷா அல்லாஹ்

m  இஸ்லாமிய இயக்கத்திடம் தற்போது இருக்கின்ற இலக்கியம் இன்றைய இந்தியச் சூழலில் போதுமானதல்ல என நினைக்கின்றீர்களா? தற்போ-தைய இந்தியச் சூழலின் தேவைகளை நிறைவேற்று-கின்றவையாக அவை இல்லையெனில் புதியதாக, தற்போதைய காலகட்டத்துக்கேற்ப எழுதப்பட்ட நூல்களை வெளிக் கொணர்கின்ற திட்டம் இருக்கின்-றதா? அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்-கின்றனவா  ?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: என்னைப் பொருத்தவரை ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்-டுள்ள நூல்கள் ஆகட்டும், அல்லது வேறு இஸ்லாமிய இயக்கம் வெளியிட்டுள்ள நூல்கள் ஆகட்டும் அவற்றில் மேற்கத்திய சிந்தனைகளை விட இஸ்லாம் தான் சிறப்பானது என்பதை நிறுவி, இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான உணர்வைத் தோற்றுவிப்பதற்குத்தான் முயலப்பட்டிருக்கின்றது.

இந்தியப் பின்னணியைக் கருத்தில் கொண்டாலும் சரி, இந்தியாவுக்கு வெளியில் இருக்கின்ற உலகைக் கருத்தில் கொண்டாலும் சரி, இன்றும் சிந்தனைக் களத்தில் மேற்கத்தியர்களே மேலோங்கி நிற்கின்றனர். உண்மையில் நமக்குப் போட்டியாக இருப்பது மேற்கத்திய சிந்தனைகள்தாம்! மேற்கு முன்வைக்கின்ற அரசியல் சிந்தனைகள், அதன் பொருளாதாரம், அதன் ஒழுக்க மதிப்பீடுகள் ஆகியவைதாம் இன்று தீர்மானிக்கின்ற சக்திகளாய் வளர்ந்துள்ளன.

இந்தக் கோணத்தில் இந்த அடிப்படையில் இலக்கியங்களை - நூல்களை, ஆக்கங்களை- வெளியிடுவது அவசியமாகும்.

சிந்தனைக் களத்தில் செய்யப்படுகின்ற பணி இரண்டு வகையானவை. (1) நீடித்த, நிலையான மதிப்பைக் கொண்டவை. இதற்கு எடுத்துக்காட்டாக மௌலானா அபுல் அஃலா மௌதூதி அவர்களால் எழுதப்பட்ட குத்பாப் பேருரைகள், இதுதான் இஸ்லாம், இஸ்லாமியப் பண்பாட்டின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகிய நூல்களைச் சொல்லலாம். (2) குறிப்பிட்ட காலத்தியப் பிரச்னைகளை விவாதிப்பவை. இத்தகைய நூல்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் பற்றியெரிகின்ற பிரச்னைகள் குறித்து பேசுபவை. என்றாலும் இவற்றிலும் நூலாசிரியரின் அடிப்படை சிந்தனைகள் இழையோடிக் கொண்டிருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக மஸ்லா ஏ கவ்மியத், மௌஜுதா ஸியாஸி கஷ்மகஷ் போன்ற நூல்களைச் சொல்லலாம்.

இங்கு இன்னொன்றையும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக சிந்தனைக்களத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு பணியும் குறிப்பிட்ட நிலைமைளிலும் சூழல்களிலும் பின்னணியிலும்தான் அரங்கேறுகின்றன. எனவே நூல்களை வாசிக்கும்போது அவை எழுதப்பட்ட காலத்துச் சூழல்கள், பின்னணி போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் சில சமயம் தேவையற்றக் குழப்பங்களுக்கு ஆளாகக் கூடும்.

புதியதாக நூல்களை வெளியிடுவதைப் பொருத்த வரை இன்று நிலைமைகள் பெரும் அளவுக்கு மாறிவிட்டன. அரசியல் புரட்சிகள், மேற்கத்திய பண்பாட்டுத் தாக்குதல்கள், புதிய பொருளாதார மாற்றங்கள் எல்லாமே புதியதாக நூல்கள் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இந்த விஷயத்தில் மிகக் குறைவாகவே பணி நடந்துள்ளது. நேரத்தையும் திறமையையும் ஆற்றலையும் வேண்டுகின்ற பணி இது. ஜமாஅத்துக்கு இவையனைத்தும் கிடைத்திட இறைவனிடம் பிரார்த்தியுங்கள். 

m  நூலாக்கக் களத்தில் உங்களுடைய பங்களிப்புகள் என்ன? தனிப்பட்ட முறையில் நீங்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்துச் சொல்லுங்களேன். 

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்படாத, அதிகமாகச் சீண்டப்படாத விவாதப்பொருள்களை நான் எடுத்துக் கொண்டேன். எடுத்துக்காட்டாக என்னுடைய நூல்களில் ஒன்று ‘கைர் முஸ்லிமோ சே தஅலுக்காத் அவ்ர் உன் கே ஹுகூக்’ - முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு கொள்ளலும் அவர்களின் உரிமைகளும்’.

இன்றையக் காலத்தில் முஸ்லிம்களில் அதிகமானோர் முஸ்லிம் அல்லாதவர்கள் அதிகமாக வாழ்கின்ற நாடுகளில் சிறுபான்மை மக்களாய் வாழ்கின்றனர். அத்தகையச் சூழலில் முஸ்லிம் அல்லாத மக்களுடன் எத்தகையத் தொடர்புகளை வைத்துக் கொள்வது என்பது அங்கு எழுகின்ற முக்கியமான கேள்வியாகும். இந்தியப் பின்னணியிலோ இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் பன்மடங்கு கூடிவிடுகின்றது.

இந்தக்கேள்வியோடு இணைந்து இருக்கின்ற கேள்வி என்னவெனில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற, முஸ்லிம்களின் ஆட்சி நிறுவப்பட்டுள்ள நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள் என்னென்ன? இதனைக் குறித்தும் நான் மேலே குறிப்பிட்ட நூலில் விவாதித்துள்ளேன்.

இதே போன்று இஸ்லாம் அல்லாத அரசாங்கத்தின் கீழ் வாழ்கின்ற முஸ்லிம்கள் மார்க்கக் கண்ணோட்டத்தில் எத்தகைய உரிமைகளைக் கோருவார்கள்? அவர்கள் அங்கு எத்தகைய பங்காற்றுவார்கள்? இஸ்லாம் அல்லாத அரசாங்கத்தின் கீழ் வாழ்கின்ற முஸ்லிம்களின் நடத்தையும் ஒழுக்கமும் எத்தகையதாக இருக்கும்?  போன்றக் கேள்விகளுக்கு விடை காணுகின்ற வகையில் நான் எழுதிய நூல்தான் ‘கைர் இஸ்லாமி ரியாஸத் அவ்ர் முஸல்மான்’ - (இஸ்லாம் அல்லாத அரசாங்கமும் முஸ்லிமும்). முஸ்லிம்கள் மீது பயங்கரவாதம், வன்முறை, தேசத் துரோகம் போன்ற பழிகள் சுமத்தப்பட்டு வந்தச் சூழலில் இந்த நூல் எழுதப்பட்டது.

இந்த உலகில் நல்ல உடல் நலத்துடனும் ஆரோக்கியமாகவும் வாழவே மனிதர்கள் அனைவருமே விரும்புகின்றார்கள். நோயுறும்போது அந்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவதும் அவனுடைய உரிமையாகும். நலமான வாழ்வை உறுதி செய்கின்ற அனைத்தையும் ஏற்பாடு செய்வதும், நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்துவதும், சிகிச்சைக்கான வசதிகள் செய்து தருவதும் அரசாங்கத்தின் கடமைகளாகும்.

இந்த விவகாரங்கள் குறித்து இஸ்லாமிய அறவுரைகளின்
இஸ்லாம் இந்தப் பிரச்னையை எப்படி அணுகுகின்றது? எப்படித் தீர்க்கின்றது போன்றக் கேள்விகளுக்கு விடை காண்கின்ற விதத்தில் நான் எழுதிய நூல்தான் ‘ஸிஹத்-ஒ-மர்ஸ் : இஸ்லாமி தஅலிமாத் மே’ - உடல் நலமும் நோயுறுதலும் : இஸ்லாமிய அறவுரைகளின் ஒளியில்’

இதே போன்று மனித உரிமைகளும் மிக அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரச்னைகளே. மனித உரிமைகள் குறித்தும் குறிப்பாக பெண்களின் உரிமைகள் குறித்தும் நிறைய எழுதியிருக்கின்றேன். அவற்றைப் பற்றிய விவரங்களை விவரிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

த மதங்கள் பற்றிய ஆய்வு அவசியம்; குறிப்பாக இந்திய மதங்களை அறிந்துகொள்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் முயல வேண்டும். மதங்கள் குறித்து நூல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றெல்லாம் கடந்த மீக்காத்தில் கருத்து தெரிவித்திருந்தீர்கள். இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்னென்ன செய்யப்பட்டன?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இன்று உலகெங்கும் உலகாயதம் மேலோங்கியிருக்கின்றது. இதன் விளைவாகவும் வேறு பல காரணங்களாலும் ஆன்மீகத்தின் பக்கம் மக்கள் பெருமளவில் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். மேற்கத்திய நாடுகளிலும் இந்தப் போக்கைப் பார்க்க முடியும்.

கிழக்கத்திய நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவில் இந்த ஆர்வமும் ஆன்மிகத் தேடலும் எடுப்பாகத் தென்படுகின்றன. மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் குறித்தும் இப்போதெல்லாம் அதிகமாகப் பேசப்படுகின்றது.

சமூகத்தின் விதியைத் தீர்மானிக்கின்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததாக மதம் இல்லை. என்றாலும் இந்தியா போன்ற நாடுகளில் மதங்கள் மக்களைக் கட்டிப்போட்டிருக்கின்றன. மதங்களின் செல்வாக்கு பெரும் அளவுக்கு ஓங்கியிருக்கின்றது. மக்களை மதங்கள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே மதங்கள் குறித்து ஆய்வு செய்வதும் வாசிப்பதும் அவசியமாகின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்தத் தேவையை உணர்ந்தது. இதனை நிறைவேற்றுவதற்காக ஆக வேண்டியதைச் செய்வதற்கும் முன் வந்தது. என்றாலும் இந்த விவகாரத்தில் எந்த அளவுக்குக் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்குக் கவனம் செலுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை.

இருந்தாலும் இந்தக் களத்தில் சென்ற மீக்காத்திலும் அதற்கு முந்தைய மீக்காத்களிலும் ஒரளவுக்கு பணி நடந்திருக்கின்றது. குறிப்பாக இந்தக் களத்தில் மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் அவர்கள் எழுதியிருக்கின்ற ‘இஸ்லாம் கி அஹம்மியத் இந்து தரம் கி பஸ் மன்ஜர் மே’ - ‘இந்து மதத்தின் பின்னணியில் இஸ்லாத்தின் முக்கியத்துவம்’ என்கிற நூலையும் ‘தஸவ்வுரே ஆகிரத்:இந்துஸ்தானி மத்ஹபி குதுப் கி ரோஷ்ணி மே’ - ‘இந்திய மத நூல்களின் ஒளியில் மறுமை பற்றிய கண்ணோட்டம்’ என்ற நூலையும் எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.
‘மறுபிறவிக் கோட்பாடு: யதார்த்தமான ஆய்வு’ எனும் தலைப்பில் டாக்டர் முஹம்மத் அஹ்மத் எழுதிய நூலும் குறிப்பிடத்தக்க நூலாகும்.
‘இஸ்லாம் ஓர் இறைமார்க்கம்’ என்கிற தலைப்பில் டாக்டர் ராஜிந்தர் நாராயண் லஅல் அவர்களால் எழுதப்பட்டு மதுர் சந்தேஷ் வெளியிடப்பட்டுள்ள நூலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய நூலாகும்.

பல்ரியா கஞ்சு ஜாமிஅத்துல் ஃபலாஹ் அரபிக் கல்லூரியைச் சேர்ந்த மௌலானா அனீஸ் அஹ்மத் மதனி அவர்கள் ‘மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு’ என்கிற தலைப்பில் 400 பக்கங்களைக் கொண்ட கனமான நூல் ஒன்றை எழுதியிருக்கின்றார். இதனைப் பதிப்பித்து வெளியிடுவதும் இன்ஷா அல்லாஹ் இந்தத் துறையில் பெரிதும் நன்மை அளிக்கும்.

இதாரா தஹ்கீக் தஸ்னீஃப் இஸ்லாமி (இஸ்லாமிய ஆய்வு நிறுவனமும்) இது தொடர்பாக சில குறிப்பிடத்தக்க நூல்களை வெளியிட்டுள்ளது. அன்பியா கிராம் கி தஅவத் (நபிமார்களின் அழைப்பு), தஅலிமாத்தே அன்பியா அவ்ர் குர்ஆன் (நபிமார்களின் போதனைகளும் குர்ஆனும்) ஆகிய இரண்டு நூல்கள் முக்கியமானவை. இவையிரண்டையும் டாக்டர் ரஜியுல் இஸ்லாம் நத்வி எழுதியிருக்கின்றார்.

இந்தத் துறையில் ஜமாஅத் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆற்றல் வாய்ந்த, வல்லமை மிக்க எழுத்தாளர்களை ஜமாஅத் உருவாக்கியிருக்கின்றது. இவர்கள் இந்தியாவில் இருக்கின்ற மதங்களை ஆழ்ந்து படித்திருக்கின்றார்கள். அதன் பிறகு இஸ்லாத்தின் ஒளியில் அவற்றைக் குறித்து கருத்துரைத்திருக்கின்றார்கள். இவர்களைப் போன்ற ஆற்றல் படைத்தவர்கள் இந்தி பேசுகின்ற மாநிலங்களில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம். மற்ற மதங்களை நல்ல முறையில் ஆய்வு செய்த அனுபவமும் எழுத்தாற்றலும் கொண்ட வல்லுநர்கள் இருக்கலாம். இருந்தாலும் இந்தத் துறையில் இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கின்றது என்பது உண்மையே.

m தனிப்பட்ட வணக்க வழிபாடுகளோடு இஸ்லாம் நின்றுவிடுவதில்லை. அது வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவிய முழுமையான வாழ்க்கைத் திட்டம் என்பது பற்றிய விழிப்பு உணர்வு இந்திய முஸ்லிம்களிடம் மலர்ந்திருக்கின்றதா? இந்திய முஸ்லிம்கள் மத்தியில் அத்தகைய விழிப்பு உணர்வு இல்லை; சமூக சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டிருப்பதற்கும் அதுதான் காரணம் என்று நினைக்கின்றீர்களா?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இன்றும் சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தைத் தனிப்பட்ட விவகாரமாகத்தான் பார்க்கின்றார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து. அவர்கள் அதனை தனிப்பட்ட விவகாரமாகவே எடுத்துக்கொள்கின்றார்கள். அதன் அடிப்படையில் ஒருசில மார்க்கக் கடமைகளையும் மேற்கொள்கின்றார்கள். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றை ஒரளவுக்கு பேணி நடந்துகொள்கின்றார்கள். இவற்றில் பிழை ஏற்பட்டுவிட்டாலோ, குறை நேர்ந்துவிட்டாலோ அது மார்க்க விவகாரத்தில் ஏற்பட்டுவிட்டதாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

இதே போன்று குடும்ப விவகாரங்களிலும் இயன்ற வரை இஸ்லாமிய போதனைகளின்படி நடந்துகொள்வதில் தக்கக் கவனம் செலுத்தப்படுகின்றது. நிகாஹ், குளா, தலாக், வாரிசுரிமை போன்ற விவகாரங்களில் மார்க்கத்தின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அக்கறையையும் கவனத்தையும் பார்க்க முடிகின்றது. குடும்ப வாழ்வு தொடர்பான விவகாரங்களில் மார்க்கப் போதனைகளுக்கு நேர்மாறாக நடப்பது குற்றம் என்கிற தெளிவும் சமுதாய மக்களிடம் நிறைந்துள்ளது.
ஆனால், வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்ட வந்த மார்க்கம்தான் இறைவனின் மார்க்கம்; வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இறைமார்க்கத்தின் வழிகாட்டுதல்களின்படியே நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தெளிவோ, நாம் எல்லோருமே ஒரே சமுதாயத்தவர்கள்தாம்; மார்க்க உறவுதான் நம் எல்லாரையும் பிணைத்திருக்கின்றது; சமுதாயத்தின் மகிழ்ச்சியும் துக்கமும் நம் அனைவருடைய மகிழ்ச்சியும் துக்கமும் ஆகும் என்கிற விழிப்பு உணர்வோ சமுதாய மக்கள் மத்தியில் இல்லை என்பதுதான் உண்மை. இறைவன் இந்தச் சமுதாயத்தை கைரே உம்மத் - சிறந்த சமுதாயமாக ஆக்கியிருக்கின்றான்; இந்தச் சமுதாயத்தைக் கொண்டு உலகைச் சீர்திருத்துகின்ற வேலையைச் செய்ய விரும்புகின்றான்; இறைவனின் மார்க்கம்தான் உலகில் செழிப்பைக் கொண்டு வரும்; மறுமையிலும் நமக்கு வெற்றியைத் தேடித்தர வல்லது அந்த இறைமார்க்கம் ஒன்றே என்கிற பரந்த எண்ணமும் விரிவான பார்வையும் சமுதாய மக்கள் மத்தியில் பசுமையாக நிறைந்திருக்கவில்லை.

இந்தக் களத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமைக்கும் இப்போது உள்ள நிலைமைக்கும் இடையில் பெரிதாக வேறுபாடு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. இந்த நிலைமையை மாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

m  சமுதாய ஒற்றுமை மலர வேண்டுமென்பதில் ஜமாஅத்துக்குத் தனி ஆர்வமும் விருப்பமும் இருந்து வந்துள்ளது. சமுதாய ஒற்றுமை மலர்வதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடர்ந்து பாடுபட்டும் வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் உங்களுடைய தலைமையில் சமுதாய ஒற்றுமைக்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? உங்களுடைய பார்வையில் இன்று சமுதாய ஒற்றுமை எந்த நிலைமையில் உள்ளது?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: சமுதாய ஒற்றுமை மலர வேண்டுமென்பதில் ஜமாஅத்துக்குத் தனி ஆர்வமும் விருப்பமும் இருந்து வந்துள்ளது என்றும் அதற்காக ஜமாஅத் தொடர்ந்து பாடுபட்டும் வருகின்றது என்றும் மிகச் சரியாகச் சொன்னீர்கள்.  இந்த விஷயத்தில் சமுதாயத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஜமாஅத் தொடர்நது முயன்று வந்துள்ளது. சமுதாயத்திலும் இது தொடர்பாகக் கவலையும் அக்கறையும் இருந்து வருகின்றது.

சமுதாய ஒற்றுமை மலர வேண்டுமென்பதற்காக ஜமாஅத் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத், தீனி தஅலிமி கவுன்ஸில் போன்ற நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஜமாஅத்தும் பங்கேற்றது; இந்த நிறுவனங்கள் திறம்படச் செயலாற்றுவதற்கும் ஜமாஅத் தொடர்ந்து உதவியும் ஒத்துழைப்பும் அளித்து வருகின்றது. இன்றும் இந்த நிறுவனங்களுடன் ஜமாஅத் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளது.

கடந்த மீக்காத்தில் பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முறையான முயற்சிகள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமான பொறுப்பாளர்களையும் சந்தித்தோம். இந்த முயற்சிகள், சந்திப்புகளின் பலனாக நல்ல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன, இறைவனுக்கே நன்றிகள் அனைத்தும்!

ஜமாஅத் குறித்து நிலைபெற்றிருந்த தவறான கருத்துகள் பெரும் அளவுக்கு குறைந்துள்ளன. புதிய தொடர்புகளும் உறவுகளும் மலர்ந்துள்ளன. தேவ்பந்த் நிறுவனம் தன்னுடைய சில முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தது. நாங்கள் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். இதே  போன்று அவர்களும் நம்முடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள்.

ஸஹாரபூர் மஸாஹிருல் உலூம், லக்னௌ நத்வத்துல் உலமா, ஜமிய்யத்துல் அஹ்லே ஹதீஸ் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்புகள் வளர்ந்துள்ளன. பல்வேறு குழுக்களைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களுடனும் உறவுகள் வலுப்பெற்றுள்ளன. தென் இந்திய மார்க்க நிறுவனங்களுக்கும் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்குள்ள மார்க்க அறிஞர்களுடனும் தொடர்புகள் அதிகரித்துள்ளன. எங்கிருந்தும் எந்தவொரு வகையிலும் எதிர்ப்பையும் இடைவெளியையும் வெளிப்படுத்துகின்ற யாதொன்றும் வெளிப்படவில்லை. அதற்கு மாறாக சேர்ந்து பணியாற்றுகின்ற விழைவும் ஒத்துழைக்கின்ற உணர்வும்தாம் மேலிட்டு நின்றன.

இன்று சமுதாய ஒற்றுமை எந்த நிலைமையில் இருக்கின்றது எனக் கேட்கின்றீர்கள். இது தொடர்பாக ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். சமுதாயத்தைப் பாதிக்கின்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஒன்றுபட்ட, ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற உணர்வு சமுதாயத்தில் மிகைத்தோங்கி நிற்கின்றது. சமுதாயப் பிரச்னைகளைத் தீர்க்கின்ற விஷயத்தில் ஜமாஅத்தின் ஆற்றலும் செல்வாக்கும் பெரிதும் துணைநிற்கும் என்பதில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட அரண்களைப் போல சமுதாயத்தில் ஒற்றுமை நிலவுகின்றது என்று சொல்ல முடியாது. என்றாலும் அந்த நிலையை அடைவதற்கான தொடர்முயற்சிகள் தொடர்கின்றன.

m இஸ்லாத்தை ஓர் மாற்றாக (alternative) அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது என்றே நீங்கள் உங்களுடைய உரைகளிலும் ஆக்கங்களிலும் தொடர்ந்து சொல்லி வருகின்றீர்கள்.  இந்த விஷயத்தில் ஜமாஅத் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது? புதிய மீக்காத்தில் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கின்றது?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: தற்போது நடைமுறையில் இருக்கின்ற வாழ்க்கைத் திட்டங்களுக்கு மாற்றாக இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றே நான் என்னுடைய கட்டுரைகளிலும் கொற்பொழிவுகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளேன். இவ்வாறு நாம் இஸ்லாத்தை ஓர் மாற்றாக அறிமுகப்படுத்தாத வரை அழைப்புப் பணி முழுமையடையாது என்பதுதான் என்னுடைய வாதம் ஆகும்.

போதாக்குறைக்கு இன்று நாட்டிலும் உலகிலும் நிலவுகின்ற சூழல்களும் இதன் தேவையைப் பன்மடங்கு பெருக்கியுள்ளன. கடந்த மீக்காத்தில் வகுக்கப்பட்ட கொள்கை மற்றும் செயல்திட்டத்திலும் இந்தக் கருத்து திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நம்முடைய பணிகளின் திசை வரையறுக்கப்படுகின்றது.
இஸ்லாத்தை ஓர் மாற்றாக அறிமுகப்படுத்துவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன.

இன்று உலகம் முழுவதிலும் ஒரு வகையான சித்தாந்த வெற்றிடம் காணப்படுகின்றது. இன்று எவருக்குமே வாழ்க்கை திட்டம் பற்றிய விவாதத்தில் போவதற்கே விருப்பமில்லையோ எனத் தோன்றுகின்றது. எவருக்குமே சித்தாந்தம், வாழ்க்கைத்திட்டம் பற்றிய கவலை இல்லை. பொருளாதார வளர்ச்சி, செழிப்பான வாழ்க்கைதான் இவர்களுக்கு எல்லாமே. என்ன விலை கொடுத்தாவது அதனை அடைய இவர்கள் தயார்.

இந்த நிலையில் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத்திட்டம் தேவை என்பதை உணர வைப்பது நம்முடைய வேலை ஆகும். வாழ்க்கைத்திட்டம் தீர்மானிக்கப்படும்போதுதான் வாழ்வின் திசை நிர்ணயமாகும்.

இஸ்லாம் ஒரு வாழ்க்கைத்திட்டத்தை வழங்குகின்றது. மனிதனின் பொருளாதார, உலகாயதத் தேவைகளை நிறைவேற்றுகின்ற வழிகளையும் அவனுடைய மனம் நிம்மதி பெறுவதற்கான வழிமுறைகளையும் சொல்கின்ற வார்க்கைத் திட்டம் அது!

வணக்க வழிபாடுகளுக்காக அது வழங்கியுள்ள கட்டமைப்பு அதன் வாழ்க்கைத்திட்டத்துக்கு வலிமை சேர்க்கின்ற திறன் படைத்தது.

இவ்வாறாக வாழ்வின் ஒவ்வொரு துறைக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை விரிவாக விவரிக்க வேண்டிய தேவை உள்ளது. இன்று குடும்ப அமைப்பு சீர்குலைந்து வருகின்றது. சமூகத்தின் அடித்தளம் குடும்ப அமைப்புதான். இன்று அதன் கட்டமைப்பு வேகமாக ஆட்டம்காணத் தொடங்கியுள்ளது. ஆனால் இஸ்லாம் அதனைக் கட்டமைப்பதற்கு வலுவான, தீர்க்கமான அடிப்படைகளை வரையறுத்துக் கொடுத்துள்ளது. ஒழுக்கம், நடத்தை தொடர்பாக இஸ்லாம் வழங்குகின்ற அறவுரைகளும் நெறிமுறைகளும் தூய்மையான ஆளுமைகளைச் செதுக்கி வார்த்தெடுப்பதில் பெரும் பங்காகற்றுகின்றன. இந்த உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளால் மனித உறவுகளும் துலங்குகின்றன.

இஸ்லாம் வழங்குகின்ற பொருளாதார அமைப்பு நீதமும் நியாயமும் செறிந்ததும் சமநிலை தவறாததும் ஆகும். பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையிலான மோதலிலிருந்து சமூகத்திற்கு விடுதலை அளிப்பது இஸ்லாம் கட்டமைக்கின்ற பொருளாதாரக் கட்டமைப்பு மட்டுமே. இஸ்லாம் கட்டமைக்கின்ற சமூகத்தில் அனைத்துத் தரப்பினரின் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. அதற்கான உறுதியை அளிப்பது இஸ்லாமிய பொருளாதார அமைப்பு மட்டுமே. ஆகுமான வழிகளில் பொருளைப் பெருக்கிக் கொள்வதற்கும் இஸ்லாமிய பொருளாதாரக் கட்டமைப்பு அனுமதிக்கின்றது.

இஸ்லாம் வழங்குகின்ற அரசியல் கட்டமைப்பிலோ மனிதன் மீது மனிதன் ஆட்சி செலுத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. மனிதனை மனிதனின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து மனிதர்கள் அனைவரையும் ஏக இறைவனின் அடிமைகளாக, ஏக இறைவனின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக ஆக்குவது இஸ்லாம் தான்.

இஸ்லாத்தை மாற்றாக அறிமுகப்படுத்துகின்ற போக்கு இன்று ஜமாஅத் தோழர்களில் பரவியிருக்கின்றது. நமது பேச்சாளர்களும் சொற்பொழிவாளர்களும் இஸ்லாத்தை ஓர் மாற்றாக அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது.
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. 
To be continued... 
Related Posts Plugin for WordPress, Blogger...