Pages

Saturday, November 10, 2012

மேற்கில் உதித்த சூரியன்...



மர்யம் ஜமீலா (1934-2012) எண்ணற்ற இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை விதைத்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவருடைய எழுத்துகளைப் போலவே அவருடைய வாழ்வும் வசீகரமானது. மலைக்க வைக்கும். சிந்திக்க வைக்கும். இறையருளை நினைவு கூர வைக்கும்.

மேற்கில் உதித்த சூரியனாய் உலகெங்கும் எண்ணற்ற இதயங்களை தனது எழுத்துக்களால் ஈர்த்த மர்யம் ஜமீலா அக்டோபர் 31, 2012 அன்று லாகூரில் அவருடைய இல்லத்தில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இறக்கின்ற வரை அவருடைய பேனா ஓயவேயில்லை. இங்கிலாந்திலிருந்து வெளியாகும் தி வர்ல்ட் முஸ்லிம் புக் ரிவியூ காலண்டிதழில் அவர் தொடர்ந்து பல்வேறு நூல்களுக்கு விமர்சனம் எழுதி வந்தார்.


ஒரு ஆசை

என்னை ஷஃபீக்கா ஆபாவின் பக்கத்தில்...

‘ஒரு பெண் உலகை விட்டுப் போகும்போது கணவன் கண்ணீர் விட்டு அழுகின்றார் எனில் அந்தப் பெண் எத்துணை நற்பேறு பெற்றவளாக இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்:  ‘ஒரு பெண் வணக்க வழிபாடுகளில் பேணுதலாக இருந்து, பெரும் பாவங்களை விட்டு முற்றிலும் விலகி இருந்து, அவள் இறக்கின்ற வரை கணவனின் மகிழ்வையும் திருப்தியை யும் பெற்றிருந்தாள் எனில் அவள் சுவனவாசி என்பதற்கு நான் உறுதி அளிக்கின்றேன்’

இந்த நபிமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்தாம் மர்யம் ஜமீலா. மர்யம் ஜமீலா அவர்களின் கணவர் யூசுப் கானின் நண்பர் ஒரியா மக்பூல் ஜான் சொல்வதைக் கேளுங்கள்:

‘ஆண்கள் எளிதில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். அதுவும் யூசுப் கான் போன்ற மிடுக்கான, கம்பீரமான ஆண் மகனைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? எல்லா வேளைகளிலும் அவர் பட்டான்களுக்கே உரிய மிடுக்குடனும் கண்டிப்பான தோரணையுடனும்தான் பார்த்திருக்கின்றேன். அவரை உணர்ச்சிவசப்பட்டு எந்த நாளும் பார்த்ததில்லை. ஆனால் அவர் அந்த மகத்தான பெண்மணியின் மரணத்தின்போது குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.

நியூ யார்க் நகரத்தின் ஒரு செக்குலர் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி யூசுப் கானின் இரண்டாவது மனைவி ஆவார். எத்தகைய உணர்வும் உந்துதலும் அவரை நியூ யார்க்கிலிருந்து லாகூர் கொண்டு வந்து சேர்த்தது என்பதை யாரால் தான் உணர முடியும்? ஆனால் லாகூரில் அந்த இரண்டு மாடி வீட்டில் அவர் யூசுப் கானின் இரண்டாவது மனைவியாகச் சேர்ந்து வாழத் தொடங்கியதிலிருந்து அந்த வீட்டில் நிலவிய இணக்கமும், அன்பும், பாசமும் இருக்கின்றதே... அதனை இறைவனின் அருள் என்றே சொல்ல வேண்டும். இரண்டு பெண்களுக்குள்ளும் அப்படியொரு இணக்கமும் அன்பும் இழையோடியது. இருவரின் குழந்தைகளும் சகோதர வாஞ்சையுடன் ஒன்றாய்க் கலந்து விட்டார்கள். ஒரே ஒரு நாள் கூட அந்நிய உணர்வு அங்கு எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

குழந்தைகள் முதல் மனைவியை அம்மி (அம்மா) என்றும் இந்தப் பெண்மணியை ஆபா(அக்கா) என்றும் அழைத்து வந்தார்கள். குழந்தைகள் முதல் மனைவியின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் வளர, இந்தப் பெண்மணி உலகம் முழுவதற்கும் மேற்கத்திய சிந்தனைகளின் வெற்றுத்தனத்தையும் இஸ்லாத்தின் சத்தியச் செய்தியையும் உணர்த்துவதற்காக எழுத்துப் பணி ஆற்றி வந்தார். அதிலேயே ஓயாமல் ஒழியாமல் ஈடுபட்டு வந்தார்.

- இவ்வாறு புகழ்பெற்ற எழுத்தாளர் ஒரியா மக்பூல் ஜான் எழுதியிருக்கின்றார்.

அவர் குறிப்பிட்டுள்ள இன்னொரு செய்தி நெஞ்சம் நெகிழச் செய்வதாகும். மக்பூல் ஜான் எழுதுகின்றார்: “மர்யம் ஜமீலா அவர்கள் மறைந்த நாள் அன்று நான் அவருடைய வீட்டில் ஜனாஸாவைக் கொண்டு செல்வதற்காகக் காத்திருந்தேன். மறைந்த மர்யம் ஜமீலா அவர்களின் கணவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அந்தப் பட்டான் சாகிப் கண்களில் கண்ணீர் மல்க துக்கம் தோய்ந்த குரலில் என்னிடம் சொன்ன வாக்கியம் என்னை உருகச் செய்துவிட்டது. தன்னையும் ஷஃபீக்கா ஆப்பாவுக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று இறப்பதற்கு முன்பு மர்யம் ஜமீலா வசிய்யத் செய்திருந்தாராம். ஆஹா...! என்னே அன்பு.. என்னே பாசம்...! இது போன்ற அன்பும் பாசமும் இஸ்லாத்திற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்ட தூய்மையான உள்ளத்தில்தான் உதிக்கும்.”

ஒரு சான்று

திருப்பத்தைத் தந்த சென்னைவாசி

மர்யம் ஜமீலா இஸ்லாத்தை ஏற்றதில் சென்னைவாசி ஒருவருக்கும் சிறு பங்கு இருந்தது.

அந்த சென்னைவாசியின் பெயர் சி அப்துல் ஜலீல்.

சென்னை நகர ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர்-ஏ-முகாமியாக இருந்துள்ளார். வணிகராக, பழ வியாபாரியாக, பத்திரிகையாளராக இருந்துள்ளார். உர்துவிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்ப்பும் செய்து வந்துள்ளார்.

அவர் இவ்வாறு மௌலானா மௌதூதி அவர்களின் ஜிந்தகி பாத் மௌத் என்கிற கட்டுரையை (தமிழில் ’மரணத்திக்குப் பின்’ என்கிற பெயரில் தனி நூலாக வெளியாகியுள்ளது IFT வெளியீடு. ) ஆங்கிலத்தில் Life after death என்கிற பெயரில் மொழிப்பெயர்க்க அதனை தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரிலிருந்து அந்தக் காலத்தில் வெளி வந்த முஸ்லிம் டைஜஸ்ட் என்கிற மாத இதழ் வெளியிட, நியு யார்க் நகரில் வாழ்ந்து வந்த மார்கரட் என்கிற யூதப் பெண்மணிக்கு அந்தக் கட்டுரை வெகுவாக கவர, அவர் மௌலானா மௌதூதியுடன் தொடர்புக் கொள்வதற்காக கேப்டவுன் முஸ்லிம் டைஜஸ்ட் பத்திரிகையை தொடர்புக் கொள்ள, அவர்கள் சி அப்துல் ஜலீலைத் தொடர்புக் கொள்ள, மெட்ராசிலிருந்து ஜலீல் சாகிப் முகவரியை அனுப்ப, மார்கரெட் அம்மையார் மௌலானாவைத் தொடர்புக் கொள்ள... அதன் பிறகு நடந்தது வரலாறு ஆயிற்று.

சி. அப்துல் ஜலீல் அவர்களின் அந்த Life after death  என்கிற ஆங்கிலக் கட்டுரை வெளியான அந்த முஸ்லிம் டைஜஸ்ட் நான் மாநில அலுவலகத்தில் கண்ணாரப் பார்த்திருக்கின்றேன். அப்போது அந்தக் கட்டுரைக்குப் பின்னால் இது போன்ற சரித்திரம் இருக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

இன்று அல்கோபாரிலிருந்து அப்துல் அஸீம் என்கிற பெரியவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் இந்த சரித்திர நிகழ்வின் இன்னொரு செய்தியைத் தாங்கியிருந்தது. மேற்படி முஸ்லிம் டைஜஸ்ட் பத்திரிகை, லைஃப் ஆஃப்டர் டெத் கட்டுரை போன்றவற்றையெல்லாம் நினைவுகூர்ந்த அப்துல் அஜீம் இன்னொன்றையும் சொன்னார்:

“1969-இல் நான் சி. அப்துல் ஜலீல் அவர்களைப் பார்த்தேன். அவர் என்னிடம் மர்யம் ஜமீலா அவர்கள் எழுதிய இஸ்லாம் இன் தியரி அண்டு பிராக்டீஸ் என்கிற நூலைக் காட்டினார்.

அதில் ‘ I am glad to present to you my book , as your translation " LIFE AFTER DEATH" inspired me to discover Islam"  (உங்களுக்கு என்னுடைய நூலை அன்பளிப்பாக வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் லைஃப் ஆஃப்டர் டெத் என்கிற உம்முடைய மொழிபெயர்ப்புக் கட்டுரைதான் என்னை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது) என மர்யம்ஜமீலா அவர்களே கைப்பட எழுதியிருந்தார்.”

மர்யம் ஜமீலாவின் வரலாற்றின் இந்த அம்சம் உண்மையிலேயே மலைக்க வைப்பதாகும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

பாகிஸ்தானிலிருந்து ஒருவர் ஒரு கட்டுரையை எழுதுகின்றார். அதனை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றார். அது தென் ஆப்ரிக்காவிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியாகின்றது.
அந்தக் கட்டுரையை நியூயார்க்கில் வாழ்ந்து வந்த ஒரு பெண்மணி வாசிக்கின்றார். பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்.
சத்தியத்தைத் தேடியடைகின்ற ஆர்வம் ஒருவருக்கு இருக்குமேயானால் அவருக்கு வழிகாட்டுதல் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பதற்காக இறைவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்; எவரை வேண்டுமானாலும் பணியில் ஈடுபடுத்திக் கொள்வான் என்பதற்கு மர்யம் ஜமீலாவின் வரலாறு சான்று.

ஒரு கருத்து

காலமெல்லாம் பேசப்படும்

மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்வின் இன்னொரு பரிமாணமும் இன்றைய அழைப்பாளர்களுக்கும் சத்தியப் போராளிகளுக்கும் பெரிதும் ஊக்கமும் உந்துதலும் தருவதாகும். இதனை அமீரே ஜமாஅத் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அமீரே ஜமாஅத் குறிப்பிட்டிருப்பதாவது:

“நியூ யார்க்கில் வாழ்ந்து வந்த தீவிரமான, கட்டுக்கோப்பான மதப்பற்று மிக்க யூதக் குடும்பத்தில் பிறந்த மர்யம் ஜமீலா குர்ஆனை வாசித்ததன் மூலமாக இஸ்லாத்தின் உண்மைநிலையையும் இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதையும் உணர்ந்ததும் சற்றும் தயங்காமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

எதற்கும் பயப்படவில்லை.

எத்தகைய பேராசைக்கு ஆளாகவில்லை.

உறவினர்களின் அன்புக்குப் பணிந்து விடவில்லை.

எத்தகைய முட்டுக்கட்டைக்கும் குனிந்துபோக-வில்லை.

சத்தியத்தை ஏற்று அதில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் அவருக்கு எந்த அளவுக்கு மன உறுதியும் ஊக்கமும் இருந்ததெனில் தன்னுடைய உற்றார் உறவினøயும் பிறந்த நாட்டையும் எல்லாவற்றையும் துறந்து அந்நியமான நாடு ஒன்றுக்கு புலம் பெயர்ந்தார். ஹிஜ்ரத் செய்துவிட்டார். அதன் பிறகு திரும்பிப் போகவே இல்லை.

மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்வின் இந்தப் பரிமாணம் ஒளிமயமானதாகும். காலமெல்லாம் பேசப்-படக்கூடியதாகும். சத்தியத்தைத் தேடியடைய விரும்பு-கின்ற அனைவருக்கும்ஊக்கம் அளிப்பதாகும்’

ஒரு ஏக்கம்

தமிழில் மொழிபெயர்ப்பது எப்போது?

மேற்கில் உதித்த சூரியனாக அறிவுலகில் ஜொலித்த மர்யம் ஜமீலா முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். மாக்கியவல்லியின் உலகாயதச் சிந்தனைகளை நார் நாராய்க் கிழித்திருக்கின்றார். அய்ரோப்பியர்கள் பெரிதும் தூக்கிவைத்துக்கொண்-டாடுகின்ற கிரேக்க தத்துவஞானி பிளாட்டோவை ஒரு பிடி பிடித்திருக்கின்றார். வால்டேரின் செக்குலரிசத்தை-யும் சிக்மண்டு ஃபிராடின் பாலியல் சார்ந்த உளவியலையும் ப்பூவென ஊதித் தள்ளியிருக்கின்றார். பிரிட்டிஷ் அறிஞர் தாமஸ் ராபர்ட் மால்தஸின் மக்கள்தொகை அபாய அறிவிப்பையும் கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ சிந்தனையையும் எந்த அளவுக்கு அறிவுப்பூர்வமாக, ஆழமாக விமர்சித்திருக்கின்றார் எனில் படிப்பவரின் புருவங்கள் வில்லாய் வளைந்துவிடும்.

மேற்கத்திய சிந்தனைகள் மீதான அவருடைய விமர்சனங்கள் கூர்மையானவை. கனமானவை. காலத்தை வென்று நிற்பவை. அதே சமயம் ஆழமான தத்துவங்-களையும் எளிமையாக, தீர்க்கமாக எழுதுகின்ற வல்லமை அவருக்கு இருந்தது. மர்யம் ஜமீலா அத்துடன் நிற்கவில்லை. இந்த மேற்கத்திய பாடாவதி சிந்தனைகளுக்கு மாற்றாக ஒளிமயமான இஸ்லாமிய அறவுரைகளை அழகாக, தீர்க்கமாக எடுத்துரைத்திருக்கின்றார்.

குறிப்பாக வெஸ்டர்ன் சிவிலிசேஷன் அண்டு தி டிஹியூமனைசேஷன் ஆஃப் மேன்கைண்டு என்கிற நூலையும் வெஸ்டர்ன் சிவிலிசேஷன் கண்டம்ன்ட் பை இட்செல்ஃப் என்கிற நூலையும் இஸ்லாம் அண்டு தி வெஸ்ட் என்கிற நூலையும் சொல்லலாம்.

எளிமையான ஆங்கிலத்தில் ஓட்டமும் துள்ளலும் நிறைந்த நட்பு மணம் கமழ்கின்ற சரளமான நடையில் ஆழமான கருத்துகளை மிகவும் சாதாரணமாக எழுதி முடித்திருக்கின்றார் மர்யம் ஜமீலா. மர்யம் ஜமீலாவின் நூல்கள் தமிழில் வெளியாகாமல் இருப்பது ஒரு குறையே. இனி வருங்காலத்திலாவது அவற்றைத் தமிழில் வெளியிடுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.

மர்யம் ஜமீலா அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியல்:

1. ISLAM VERSUS THE WEST (இஸ்லாம் வர்சஸ் தி வெஸ்ட்)
2. ISLAM AND MODERNISM  (இஸ்லாம் அண்டு மாடர்னிஸம்)
3. ISLAM IN THEORY AND PRACTICE (இஸ்லாம் இன் தியரி அண்டு பிராக்டிஸ்)
4. ISLAM VERSUS AHL AL KITAB PAST AND PRESENT (இஸ்லாம் வெர்சஸ் அஹ்லே கிதாப் பாஸ்ட் அண்டு பிரசன்ட்)
5. AHMAD KHALIL (அஹ்மத் கலீல் - வரலாற்று நாவல்)
6. ISLAM AND ORIENTALISM  (இஸ்லாம் அண்டு ஒரியன்டிலிஸம்)
7. WESTERN CIVILIZATION CONDEMNED BY ITSELF  (வெஸ்டர்ன் சிவிலிசேஷன் கண்டம்ட் மை இட்செல்ஃப்)
8.  CORRESPONDENCE BETWEEN MAULANA MAUDOODI AND MARYUM JAMEELAH  (கரஸ்பான்டன்ஸ் பெட்வீன் மர்யம் ஜமீலா அண்டு மௌலானா மௌதூதி)
9. ISLAM AND WESTERN SOCIETY (இஸ்லாம் அண்டு வெஸ்டர்ன் சொசைட்டி)
10. A MANIFESTO OF THE ISLAMIC MOVEMENT (ஏ மானிஃபெஸ்டே ஆஃப் தி இஸ்லாமிக் மூவ்மெண்ட்)
11. IS WESTERN CIVILIZATION UNIVERSAL (இஸ் வெஸ்டர்ன் சிவிலிசேஷன் யூனிவர்சல்)
12 WHO IS MAUDOODI ? (ஹு இஸ் மௌதூதி?)
13 WHY I EMBRACED ISLAM  (வை ஐ எம்ப்ரேஸ்ட் இஸ்லாம்)
14 ISLAM AND THE MUSLIM WOMAN TODAY (இஸ்லாம் அண்டு தி முஸ்லிம் வுமன் டுடே)
15 ISLAM AND SOCIAL HABITS  (இஸ்லாம் அண்டு சோஷியல் ஹாபிட்ஸ்)
16 ISLAMIC CULTURE IN THEORY AND PRACTICE (இஸ்லாமிக் கல்ச்சர் இன் தியரி அண்டு பிராக்டீஸ்)
17 THREE GREAT ISLAMIC MOVEMENTS IN THE ARAB WORLD OF THE RECENT PAST (த்ரீ கிரேட் இஸ்லாமிக் மூவ்மென்ட்ஸ் இன் தி அரப் வர்ல்ட் ஆஃப் தி ரிசென்ட் பாஸ்ட்)
18 SHAIKH HASAN AL BANNA AND IKHWAN AL MUSLIMUN (ஷேக் ஹஸன் அல்பன்னா அண்டு இக்வான் அல் முஸ்லிமீன்)
19 A GREAT ISLAMIC MOVEMENT IN TURKEY (ஏ கிரேட் இஸ்லாமிக்மூவ்மெண்ட் இன் துர்க்கி)
20 TWO MUJAHIDIN OF THE RECENT PAST AND THEIR STRUGGLE FOR FREEDOM AGAINST FOREIGN RULE  (டூ முஜாஹிதீன்ஸ் ஆஃப் தி ரீசன்ட் பாஸ்ட் அண்டு தேயர் ஸ்டிரக்கல் ஃபார் ஃப்ரீடம் அகைன்ஸ்ட் ஃபாரின் ரூல்)
21 THE GENERATION GAP ITS CAUSES AND CONSEQUENCES  (தி ஜெனேரேஷன் கேப் இட்ஸ் காசஸ் அண்டு கான்ஸ்க்யூசன்சஸ்)
22 WESTERNIZATION VERSUS MUSLIMS  (வெஸ் டர்னைசேஷன் வர்சஸ் முஸ்லிம்ஸ்)
23 WESTERNIZATION AND HUMAN WELFARE (வெஸ்டர்னைசேஷன் அண்டு ஹியூமன் வெல்ஃபேர்)
24 MODERN TECHNOLOGY AND THE DEHUMANIZATION OF MAN (மாடர்ன் டெக்னாலஜி அண்டு தி டீஹியூமனைசேஷன் ஆஃப் மேன்)
25 ISLAM AND MODERN MAN (இஸ்லாம் அண்டு மாடர்ன் மேன்)‘

டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

சாதி ஒழிய.. சமத்துவம் மலர..!


தமிழகத்தில் சில நாள்களாக சாதிக் கலவரங்களும் சாதி உணர்வால் உந்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களும் வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

தென் தமிழகத்தில் வெடித்த தீ இன்று வட தமிழகத்திலும் பரவியிருக்கின்றது. தர்மபுரியில் 200 ஏழைகள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு கிராமமே காலியாகி இருக்கின்றது.

இதில் வேதனையான முரண்பாடு என்னவெனில் இன்று ஒருவர் மற்றவரை வெட்டிச் சாய்க்கத் துடிக்கின்ற இரு தரப்பினருமே சாதிக் கட்டமைப்பில் அடித்தட்டு  நிலையில் நிற்பவர்களே. மனுதர்மத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சாதிக் கட்டமைப்பில் கடைகோடியில் நிற்கின்ற மக்களே ஒருவர் மற்றவரைத் தாக்கிக் கொண்டிருப்பதும் திட்டிக் கொண்டிருப்பதும் வேதனையான முரண் ஆகும். சமூக விடுதலைக்கான போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மோசமான பின்னடைவாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளால், இதயத்தைக் கிழிக்கின்ற சுடுசொற்களால் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் பிற சாதியினரைத் திட்டுகின்ற போக்கும் அதிகரித்துவிட்டுள்ளது.
இவர்கள் அவர்களைத் திட்டுகின்றார்கள். அவர்கள் இவர்களைத் திட்டுகின்றார்கள். அதே சமயத்தில் சாதிய சிந்தனை முற்றாக ஒழிக்கப் பட வேண்டும் என்று விரும்புகின்றவர்களும் ஏராளமானோர் இருக்கின்றார்கள். இவர்கள் சாதிக் கட்டமைப்பின் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுபடவே விரும்புகின்றார்கள்.

சாதிக்கு எதிராக அரசாங்கமும் பலவாறு முயன்று வருகின்றது. பெரியார் முதல் பாரதியார் வரை, காந்தி முதல் அம்பேத்கர் வரை சாதி வேறுபாடுகள் ஒழிக்கப் பட வேண்டும் என்றே விரும்பி வந்துள்ளார்கள். தமிழகத்தில் சாதி ஒழிப்புக்காக மக்கள் இயக்கங்கள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

  • என்றாலும் சாதி ஏன் ஒழியவில்லை?
  • மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் கூறு போடுகின்ற கொடுமை ஏன் அகலவில்லை?
  • மற்ற சாதிக்காரனைத் தாழ்வாகப் பார்க்கின்ற அவலம் ஏன் களையப்படவில்லை?
  • இந்தச் சூழல் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன?
  • முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
பிளவுபட்டுக் கிடக்கின்ற மக்களை ஒன்றிணைக்க எத்தகைய வழிமுறை கையாளப்பட வேண்டும்?இணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவது   எப்படி?

இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடை தருவதாய் சாதி ஒழிய.. சமத்துவம் மலர..! என்கிற நூல் ஜொலிக்கின்றது.
இந்த நூலை நாம் அதிகமதிகமாய் பரவலாக்க வேண்டும். நம்முடைய நண்பர்களுக்கு,  தோழர்களுக்கும் தர வேண்டும். அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோருக்கும் இந்த நூல் தரப்பட வேண்டும்.

சாதி ஒழிய.. சமத்துவம் மலர.. என்கிற தலைப்பில் எல்லாத் தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்து கருத்தரங்குகளும் நடத்தப்பட வேண்டும்.

சாதிப் பேயை ஒழிப்போம். சமத்துவம் சமைப்போம். இணக்கம் காப்போம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே..!
This book can be purchased online Here

Friday, November 2, 2012

மிகப் பெரும் ஆயுதம் : நஜீப் ஃபாஜில்



“அம்மா உங்க வயசு என்னம்மா..?”

“எழுபது ஆண்டுகள்”

“அப்படியென்றால் விடுதலைப் போர் சமயத்தில் உங்களுக்கு இருபது அல்லது இருபத்தியோரு வயசு இருந்திருக்கும் இல்லே..”

“ஆமாம்’‘

“அன்றிலிருந்து நீங்கள் இந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லையா, அம்மா?”

“ஒரு நாளும் போனதில்லை”

“இத்துணை ஆண்டுகளில் உலகத்தில் மிகப் பெரும் மாற்றங்கள் நடந்துவிட்டுள்ளன அம்மா..”

“கேள்விப்பட்டிருக்கின்றேன்.”

“நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லையா?”

“இல்லை”

“என்னுடைய கேள்விகளால் உங்கள் மனம் புண்படுகின்றதா, அம்மா?”

“அஸ்தக்ஃபிருல்லாஹ். (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக). இதில் போய் மனம் புண்படுவதற்கு என்ன இருக்கின்றது?”

“எனக்கு வேறு வழி தெரியவில்லை, அம்மா. உங்களைப் பற்றிய விவரங்களை உங்களிடமிருந்து தானே எனக்குக் கிடைத்தாக வேண்டும். ஆனால் நீங்களோ ஒருநாளும் தாமாக பழைய நிகழ்வுகளைக் குறித்து சொன்னதே இல்லை. அதனால்தான் நானாக உங்களைக் குடைந்து குடைந்து கேட்டுக்கொண்டிருக்-கின்றேன். முந்தைய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆர்வம் உங்களுக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லையா?

“ம்ஹூம். அப்படியெல்லாம் நான் ஒருநாளும் விரும்பியதில்லை.”

“உங்களுக்கு என்னதான் பிடிக்கும்?”

“எனக்கு ஒரே ஒரு ஆசைதான். எப்போதும் ஓதிக்  கொண்டே இருக்க வேண்டும்”

“எதனை ஓத வேண்டும் என்று ஆசை?”

“திருமறையைத்தான்!”

“உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா, அம்மா?”

“குர்ஆன் ஓத மட்டுமே தெரியும்”

“உங்களுக்கு ஓதக் கற்றுக் கொடுத்தது யார்?”

“என்னுடைய தகப்பனார்தான்”

“குர்ஆன் ஓதுகின்றவரால் துருக்கி மொழியையும் எளிதாக வாசிக்க முடியும் அல்லவா?. பழைய லிபியில் எழுதப்பட்ட வாசகங்களை எளிதாக வாசிக்க முடியுமே..”

“எனக்கு பழைய துருக்கி எழுத்துகளையும் வாசிக்க இயலாது. திருக்குர்ஆனில் இருக்கின்ற இறைவாக்கு-களை ஓதுவதுதான் எனக்கு ஈஸியாக இருக்கின்றது. அதனைத் தவிர மற்ற எழுத்துகளைப் பார்க்கும்போது அவை புழு பூச்சிகளாய்த்தான் தோன்றும்.”

“உங்களுடைய கணவரைப் போல உங்களுடைய தகப்பனாரும் ‘செபிக்’ - ஆக இருந்தாரா?”

“அவர் ஊர் பள்ளிவாசலில் இமாமாகச் சேவையாற்றி வந்தார். அந்தக் காலத்தில் ‘செபிக்’ என்று தனி-யாகக் குலம் கோத்திரம் எதுவும் கிடையாது. என்றாலும் அந்தக் காலத்து இளைஞர்கள் மெத்தப் படித்தவர்களாய் மார்க்கத்தைக் கற்றவர்களாய் ‘செபிக்’ தனம் இல்லாதவர்களாய், ‘செபிக்’குகளுக்கு சற்றும் குறையாத-வர்களாய் இருந்தார்கள்”

“இன்றைய இளைஞர்கள்...”

“அவர்களின் நிலைமை எல்லாருக்குமே தெரியும்”


“உங்களுடைய தகப்பனார் எங்கு இறந்தார்கள்? எப்படி இறந்தார்கள்?”

“அவர் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து திரும்பி வரவே இல்லை”

“உங்களுடைய தகப்பனார் உங்களுக்கு ஏதேனும் விட்டுச் சென்றாரா?”

“அங்கே மூலையில் பச்சை பட்டுத் துணியில் சுற்றப்பட்டு இருக்கின்ற பொருள் தெரிகின்றதா? அதுதான் திருக்குர்ஆன். அது மட்டும்தான் என்னுடைய தகப்பனார் எனக்காக விட்டுச் சென்ற சொத்து. கூடவே அவர் எனக்கு அறிவுரை ஒன்றையும் சொன்னார்”

“அந்த அறிவுரை என்ன?”

“இந்த வேதத்துடனான தொடர்பை எந்தக்காலத்திலும் துண்டித்துவிடக்கூடாது”

“ஆனால் அப்போது நீங்கள் ஒரு பதின்பருவத்துப் பெண்ணாக அல்லவா, இருந்தீர்கள்?”

“ஆமாம்”

“அதன் பிறகு உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்-டது. அப்படித்தானே”

“என்னுடைய பத்தொன்பதாவது வயதில் என்னை என்னுடைய மாமா பையனுடன் மணம் முடித்தார்கள். கிரேக்கர்கள் சமர்னா நகரத்தை ஆக்கிரமித்துவிட்டிருந்த காலத்தில் இது நடந்தது. சில மாதங்களுக்குள்ளாகவே அவர்கள் இந்த ஊருக்கும் வந்துவிட்டார்கள். இந்த ஊரையும் ஆக்கிரமித்துவிட்டார்கள். அவர்களின் ஒரு படைக்குழுவே - பட்டாலியனே இங்கு வந்துவிட்டது.”

“மேலும் சொல்லுங்கள். அதன் பிறகு என்ன நடந்தது?”

“என்னத்தைச் சொல்வது. கேட்டால் சொல்வேன்.

அப்படியும் என்னைக் குறித்து எல்லாவற்றையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்”

“அதை விடுங்க. நான் உங்களிடமிருந்தே அவற்றை-யெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆசை. பொதுவாக மக்கள் காரசாரமாக மசாலா சேர்த்தே சொல்வார்கள் அல்லவா? இதனால் உண்மையில் என்னதான் நடந்தது என்பது தெரியாமலே போய் விடுகின்றது”

“நீங்கள் சரியாத்தான் சொல்றிங்க. மக்கள் என்னைப் பற்றி கதைகதையாய் என்னவெல்லாம் சொல்லிவிட்டார்களோ அந்த இறைவனுக்கே வெளிச்சம்”

“நீங்கள் தன்னந்தனியாக ஒரு படைக்குழுவையே - பட்டாலியனையே அடித்து விரட்டி விட்டதாய் மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்”

“இல்லை.  இல்லை மகனே! நான் என்ன அந்த அளவுக்குப் பலசாலியா? எனக்கு ஏது வலிமையும் சக்தியும். இது திருக்குர்ஆனின் சக்தி நிகழ்த்திய சாதனை. குர்ஆனால்தான் எதிரிகள் ஓட்டம் பிடித்தார்கள்”

“திருக்குர்ஆனின் சக்தி..?”

“வேறென்ன? நீயே சொல் நான் இந்தக் குர்ஆனை என்னுடைய மார்போது சேர்த்துக் கட்டிக் கொண்டிருக்-காவிட்டால் என்னால் அவர்களை ஓட ஓட விரட்டியிருக்க முடியுமா, என்ன?”

“ஆனாலும் அம்மா, ஒரு ரைஃபிள் அல்லது ஒரு துப்பாக்கி செய்கின்ற காரியத்தை குர்ஆனால் செய்ய முடியாதே”

“குர்ஆனின் ஒரு எழுத்துக்கு எதிராக ஓராயிரம் ரைஃபிள்களும் துப்பாக்கிகளும் நிற்க முடியாது”

“கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன். அன்றைக்கு என்னதான் நடந்தது? எப்படி நடந்தது? என்ன செய்தீர்கள்?”

Wednesday, October 24, 2012

Dr Abdul Huq Ansari, K. S. Sudarshan and an inspiring insight

Dr Abdul Huq Ansari

The following is the translation of the article written by Parvaz Rahmani in Dawat dated 8-10 October2012 issue. It conveys an inspiring insight.

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி(ரஹ்)
டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி 1931-இல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல சின்ன வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் திகழ்ந்தார். மார்ககப் பற்றும் சமூகத் தொண்டார்வமும் நிறைந்தவராய் மிளிர்ந்தார். இதனால் மாணவப் பருவத்திலேயே இஸ்லாமிய இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். வசதி வாய்ப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் கல்லூரிப் படிப்பை முடித்தார். மேலும் படித்தார். முன்னேறிக் கொண்டே போனார். தர்ஸ்காஹ் இஸ்லாமியில் ஆலிம் பட்டம் பெற்றார். தொடர்ந்து அரபி மொழியில் இளங்கலைப் பட்டமும் ஃபிலாஸஃபியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தொடர்ந்து அதே துறையில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றார். அதற்கடுத்து அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.டி.எஸ் பட்டமும் பெற்றார். எந்த மார்க்கப் பற்றுடனும் சமூகத்தொண்டார்வத்துடனும் அவர் மாணவப் பருவத்தில் தன்னை இஸ்லாமிய இயக்கத்தில் இணைத்துக் கொண்டாரோ அந்த பற்றும் ஆர்வமும் அதிகமாகிக் கொண்டே போனது. அவர் சார்ந்த இயக்கமும் வளர்ந்து கொண்டே போனது. இறுதியில் அவர் அந்த இயக்கத்தின் அகில இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்றார். நான்காண்டுகள் அந்தப் பொறுப்பை வகித்த பிறகு அவர் 2007-இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பிறகும் இயக்கத்திற்கான நூல்களை எழுதி வெளியிடுகின்ற பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதே நிலையில் அவர் தன்னுடைய 81-ஆவது வயதில் 2012  அக்டோபர் 13 ஆம் தேதியன்று தான் வாழ்நாள் முழுவதும் ஏற்று வந்த நம்பிக்கையிலும் கோட்பாட்டிலும் முழுமையான திருப்தி உள்ள நிலையில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவருடைய தோழர்களும் உறவினர்களும் அளவற்ற அன்புடனும் வாஞ்சையுடனும் அவரை நல்லடக்கம் செய்தனர்.

மற்றும் கே.எஸ். சுதர்ஸன்
கே.எஸ். சுதர்ஸனும் 1931-இல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல சின்ன வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் திகழ்ந்தார். வசதி வாய்ப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் படிப்பில் முன்னேறிக் கொண்டே போனார். நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற உணர்வு அவருக்குள் மிகைத்திருந்தது. இதனால் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தேசபக்தி முழக்கங்களால் கவரப்பட்டு அதன் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். படிப்பும் தொடர்ந்தது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பி.ஈ பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றார். நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர் எந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தாரோ அந்த அமைப்பின் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் நடை முறைப்படுத்துவதில் முனைப்புடன் மும்முரமாகச் செயலாற்றி வந்தார்.ஒரு கட்டத்தில் அதன் உச்சக்கட்ட பொறுப்பை சர்சங்சாலக் - அகில இந்தியத் தலைவர் பொறுப்பையும் ஏற்றார். ஒன்பது ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்த பிறகு 2009-இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் பதவி விலகியதிலிருந்து எந்த இயக்கப் பணியிலும் ஈடுபடாமல் வாசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 15 செப்டம்பர், 2012 அன்று அவர் தன்னுடைய 81-ஆவது வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். ஆனால் தன்னுடைய இறப்புக்கு இருபத்தேழு நாள்களுக்கு முன்பு அவர் தொடர்பாக வெளியான செய்தி ஒன்று பல்வேறு ஊகங்களுக்கும் எண்ணங்களுக்கும் வித்திட்டது. 20 ஆகஸ்ட் 2012 அன்று பெருநாள் பண்டிகையின் போது போபாலில் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதற்காகவோ (அல்லது முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்கோ) அவர் தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலுக்குப் போக விரும்பினார்.

இருவருக்குமிடையில் இருக்கின்ற ஒற்றுமை சுவையானது...! இருவரும் சந்தித்த முடிவோ முற்றிலும் மாறுபட்டது..!

 இவ்விரு தலைவர்களின் வாழ்வில் சில விஷயங்களில் காணப்படுகின்ற ஒற்றுமை சுவையானவை. இவ்விருவருமே முற்றிலும் மாறுபட்ட நேர் எதிரான இயக்கங்களில் தம்மை வாழ்நாள் முழுவதும் இணைத்துக் கொண்டிருந்தனர். இருவருமே தாம் சார்ந்திருந்த இயக்கத்தின் அகில இந்தியத் தலைமைப் பொறுப்பை ஏற்கின்ற அளவுக்கு வளர்ந்தனர். ஆனால் இருவரின் இறுதி முடிவில் அடிப்படையான வேற்றுமையைப் பார்க்க முடிகின்றது. டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி அவர்களுக்கு தம்முடைய நம்பிக்கையிலும் கோட்பாட்டிலும் முழுமையான மனநிறைவு இருந்தது. அவை தொடர்பான எண்ணத் தெளிவுடனும் முழுமையான திருப்தியுடனுமே அவர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவருக்கு ஒரே ஒரு மனக்குறை இருந்திருக்க வேண்டும். இயக்கத்திற்கான நூல்களை எழுதித் தர வேண்டும் என்கிற தன்னுடைய நாட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாத குறை மட்டுமே அவரை வாட்டியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, சுதர்ஸன் அவர்கள் தம்முடைய கடைசி காலத்தில் ஒருவிதமான வேதனைக்கும் கவலைக்கும் ஆளாகி இருந்தார்.  குறைந்தபட்சம் இஸ்லாத்தைக் குறித்தும் முஸ்லிம்களைக் குறித்தும் தான் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்து அவர் பெரிதும் அதிருப்தியுற்றவராய், அதனை மீள்பார்வை செய்கின்றவராய் இருந்துவந்திருக்கின்றார்.  அவருடைய தோழர்கள் சொல்வதைப் போல் அவருடைய மனநிலை சரியில்லாமல் போய்விட்டது என்பதை சரி என எடுத்துக் கொண்டாலும் அவருடைய உள்மனத்துக்குள் ஏதோவொன்று நடந்திருக்க வேண்டும். அதுதான் அவரை தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லத் தூண்டியிருக்க வேண்டும். 16 செப்டம்பர், 2012 தேதிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியில் அவர் திருக்குர்ஆனை ஆழ்ந்து வாசித்து வந்தார் என்கிற தகவல் இடம் பெற்றுள்ளது.

எது எப்படியோ இந்த இரண்டு ஆளுமைகளின் வாழ்வில் எது நடக்க வேண்டுமோ அது நடந்து முடிந்துவிட்டது. இனி ஆகப் போவதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் இறைவனின் கையில்..!
பர்வேஸ் ரஹ்மானி
தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

தஅவத் 8-10 அக்டோபர் 2012 இதழ்

Tuesday, October 23, 2012

Parvaz Rahmani, K S Sudarsan and Islamic Dawah

Parvaz Rahmani


The following is the translation of the article written by Parvaz Rahmani in Dawat dated 20-22 September2012 issue. It is written in the true spirit of Islamic Dawah.
அந்தச் சாவை நினைத்து வருத்தம் ஏற்பட்டதேன்...?

கே. எஸ். சுதர்ஸனின் (மறைவு 15 செப்டம்பர், 2012) மரணம் குறித்து சங் பரிவாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு வருத்தம் ஏற்பட்டதோ, தெரியவில்லை. ஆனால் கடந்த 20 ஆகஸ்ட் அன்று ஈகைப் பெருநாளின்போது ஆர். எஸ். எஸ் இயக்கத்தின்இந்த மூத்த தலைவர் போபால் நகரத்தின் புகழ் பெற்ற தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற விரும்பியதாகவும் அல்லது தன்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பியதாகவும் அதற்காக வேண்டி தாஜுல் மஸாஜீத் பள்ளிவாசலுக்குப் போக விரும்பியதாகவும், ஆனால் அவருடைய ஸ்டாஃப் - உதவியாளர் களும், காவல் துறை அதிகாரிகளும் ‘போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது’ என்று சொல்லியும், ‘பெருநாள் தொழுகை முடிந்துவிட்டது’ என்று எடுத்துரைத்தும் தொழுகையை நிறைவேற்றுகின்ற அவருடைய ஆசையை அணை போட்டு தடுத்துவிட்டதாகவும் அதன் பிறகு முன்னாள் முதல்வர் பாபுலால் கோடா அவரைத் தன்னுடைய முஸ்லிம் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த வீட்டில் சுதர்ஸன் தன்னுடைய முஸ்லிம் ‘சகோதரர்களுக்கு’ பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும், சேமியா பாயசத்தை ரசித்து ருசித்து அருந்தி மகிழ்ந்ததாகவும், தன்னுடைய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் கொண்டதாகவும் போபாலிலிருந்து வந்த செய்தியைப் படித்த, கேட்ட முஸ்லிம்களுக்கு அவருடைய மரணம் தவிப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கும். சுதர்ஸன் அவர்களின் இந்த ‘மாற்றம்’ குறித்து எந்தவோர் ஆங்கில நாளிதழிலிலும் விமர்சனமோ, கருத்துரையோ வரவில்லை; என்னுடைய பார்வைக்கு வரவில்லை. ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வு பற்றி ஆங்கில இதழ்களில் வெளியான செய்தியில் அவருக்கு ‘ஞாபக மறதி’ நோய் தொற்றிவிட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் உர்தூ பத்திரிகைகளில் அவருடைய இந்த திடீர் ஆர்வம் குறித்து பரபரப்பாக விவாதிக்கப் பட்டது. சுதர்ஸன் அவர்களுக்கு ஞாபக மறதி நோய் தொற்றிவிட்டதால் அவர் இவ்வாறு பெருநாள் தொழுகைக்காக விருப்பம் தெரிவித்திருக்க மாட்டார்; தொழுகை, பெருநாள், முஸ்லிம்கள் பற்றிய அவருடைய பார்வையிலும் கருத்திலும் நிச்சயமாக ஏதோவொரு அதிரடி மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிற சிந்தனைதான் இந்த பரபரப்பான விவாதத்திற்குப் பின்புலமாக அமைந்தது.

ஒரு நண்பர் அனுப்பிய குறுந்தகவல்...!
இந்த நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து நண்பர் ஒருவர் அனுப்பிய குறுந்தகவல் குறிப்பிடத்தக்கது. 17 செப்டம்பர் அன்று 09313522885 என்கிற தொலைபேசி மூலமாக அவர் அனுப்பிய குறுந்தகவலின் விவரம் வருமாறு: ‘சுதர்ஸன் ஜி 20 ஆகஸ்ட் அன்று போபாலின் தாஜுல் மஸாஜித் மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றி இஸ்லாம் தர்ஷன்மூலமாக தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவே விரும்பினார். ஆனால் அவருடைய தோழர்கள் அவருடைய இந்தத் தனிப்பட்ட சுதந்தரத்தையும் அவருக்குத் தரவில்லை. அவரை பள்ளிவாசலுக்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள். கடைசியில் சுதர்ஸன் அவர்கள் அதிருப்தியுற்ற நிலையிலேயே இந்த உலகை விட்டுப் போய்விட்டார். சுதர்ஸன் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சர்சலாங்- அகில இந்தியத் தலைவராக இருந்த காலத்தில் நம்முடைய தோழர் ஒருவர் இஸ்லாத்தின் அருள் மார்க்கச் செய்தியை விரிவாக விவரித்து கடிதம் எழுதினார். சுதர்ஸன் ஜி அவருக்குப் பதில் கடிதமும் எழுதினார். வண்டியை அனுப்பி தன்னிடம் வரவழைத்து நீண்ட நேரம் பேசவும் செய்தார். இறந்து போனவர் வெளிப்படையாக எதனைவும் அறிவிக்கவில்லை. ஆனால் தன்னுடைய செயலின் மூலமாக ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தினருக்கு கனமான செய்தியை பதிவு செய்திருக்கின்றார். எவராவது அவருடைய அந்தச் செய்தியைப் புரிந்துகொண்டால் எத்துணை நன்றாக இருக்கும்...! முஸ்லிம்களும் அழைப்புப் பணி தொடர்பான உணர்வைப் பெற்றால் எத்துணை நன்றாக  இருக்கும்..!” மகாராஷ்டிர நண்பரின் உணர்வுகளும் ஆதங்கமும் பொருத்தமானவையே. சிறப்பானவையே. ஒருவருக்கு ஞாபக மறதி நோய் தொற்றிவிட்டாலோ, முதுமையின் மூப்பால் பீடிக்கப்பட்டாலோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசத்தான் செய்வாரே தவிர, முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது உளறுவாரே தவிர, இப்படி தீர்க்கமாக தொழ வேண்டும் என்றோ வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றோ சொல்ல மாட்டார். இது போன்ற எண்ணங்களை உணர்வும் எண்ணமும் உறுதியாக இருக்கின்ற மனிதர்தான் வெளிப்படுத்துவார். எனவே மகாராஷ்டிர நண்பரின் கவலையில் அர்த்தம் இருக்கின்றது.

நிச்சயமாக இப்படி நடந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது...!
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னாள் சர்சந்சாலக் - அகில இந்தியத் தலைவராகன குப்பள்ளி சீதாராமையா சுதர்ஸன் அவர்கள் தீவிரமான கடுமையான இந்துத்துவக் கொள்கை மீது பற்று கொண்டவராக இருந்தார். 2000 முதல் 2009 வரை சர்சந்சாலக்காக - அகில இந்தியத் தலைவராக அவர் இருந்த காலத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அவருடைய நிலைப்பாட்டைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்தவண்ணம்தான் இருந்தன. முஸ்லிம்கள் தொடர்பான சங் பரிவாரத்தின் நிலைப்பாட்டை அவர் ஆணித்தரமாகவும் அழுத்தம்திருத்தமாகவும் எடுத்துரைத்து வந்துள்ளார். நாட்டுப் பிரச்னைகள் தொடர்பாகவும் அவர் காரசாரமாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். சில நேரங்களில் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் கருத்துகளை மறுத்துரைத்தும் அவர் பேசியிருக்கின்றார். எது வரை எனில் ‘இந்த நாட்டில் இது வரை ஆண்ட பிரதமர்களில் இந்திரா காந்திதான் வெற்றிகரமான பிரதமர்’ என்றும் மனம் விட்டுப்பேசி இருக்கின்றார். இவையெல்லாம் உணர்த்துவது என்ன? தன்னுடைய மனத்திற்குச் சரி எனப் பட்டதை வெளிப்படுத்துவதில் அவர் என்றைக்குமே தயங்கியதில்லை. நறுக்குத்தெறித்தாற்போல் ஆணித்தரமாகவே எதனையும் சொல்லி வந்துள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு அவர் அதிகமாகப் பேசியதில்லை. மௌனம் சாதித்தே வந்துள்ளார். இந்தக் காலத்தில் அவர் வாழ்க்கை குறித்தும் வாழ்க்கை உணர்த்துகின்ற உண்மை குறித்தும் அதிகமாக ஆராய்ந்திருக்க வேண்டும். சத்தியத்தை அடைய வேண்டும் என்கிற உந்துதலில் நாள்களைக் கடத்தியிருக்க வேண்டும். இஸ்லாத்தின் கோட்பாடுகளையும் போதனைகளையும் மீள்பார்வை செய்திருக்க வேண்டும். இவ்வாறு நடந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. மகாராஷ்டிர நண்பர் அனுப்பிய குறுந்தகவல் இதனை மெய்ப்பிப்பதாக இருக்கின்றது. எனவே சங் பரிவாரத்துடன் நீண்ட காலம் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக இஸ்லாம், முஸ்லிம்கள் தொடர்பாக அவருக்குள் வேரூன்றி இருந்த நிலைப்பாட்டையும் எண்ணத்தையும் அவர் தம் கடைசி காலத்தில் மீள்பார்வை செய்து வந்திருக்க வேண்டும். அதற்கும் வாய்ப்பிருக்கின்றது.
பர்வேஸ் ரஹ்மானி
தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

தஅவத் 20-22 செப்டம்பர் 2012 இதழ்

Thursday, September 13, 2012

இதயத் தூய்மை : எம். ஐ. அப்துல் அஜீஸ்



பயிற்சிக்கும் தர்பியத்துக்கும் இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றது. தகுதி படைத்த மனிதர்களை வார்த்தெடுப்பதுதான் தர்பியத்தின் முதன்மை நோக்கமாகும்.

நடப்பு மீக்காத்துக்காக (ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2015 வரையிலான காலக்கட்டம்) வகுக்கப்பட்டுள்ள நான்காண்டு செயல்திட்டத்தில் இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்ற பணிக்கு (தத்ஹீரே கல்ப்) முதன்மை முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றது.

நம்மை நாமே சுய மதிப்பீடு செய்யும்போது நாம் இதில் பின்தங்கி இருக்கின்றோம் என்கிற உணர்வு மேலிட வேண்டும். அதுதான் தர்பியத்துக்கான முதல் படி ஆகும். தனி மனிதர்களின் தர்பியத்துடன் ஒட்டுமொத்த ஜமாஅத்தின் தர்பியத்தின் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும்.
தர்பியத் என்றால் என்ன? இதயத்தைச் செம்மைப்படுத்துவதற்குப் பெயர்தான் பயிற்சி, தஸ்கியா, தர்பியா!

இதயத்தின் பல்வேறு நிலைமைகளைக் குறித்து குர்ஆன் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. நல்ல இதயம் எப்படி இருக்கும் என்பதையும் குர்ஆன் விவரித்-துள்ளது. கெட்ட இதயம் எத்தகையதாக இருக்கும் என்பதையும் குர்ஆன் சுட்டிக்காட்டியுள்ளது.

தீய செயல்களின் காரணமாக இதயங்கள் கறை படிந்து போகும் எனக் குர்ஆன் எச்சரிக்கின்றது:
“மாறாக உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் இதயங்களில் படிந்துவிட்டிருக்கின்றது” (திருக்குர்ஆன் 83;14)
எவர்கள் வரம்புமீறுகின்றார்களோ அவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விடும்.  அவர்கள் வழிகாட்டுதல் பெற மாட்டார்கள்.
“இவ்வாறே வரம்பு மீறிச் செல்வோரின் உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம்” (திருக்குர்ஆன் 10;74)
இறுகிப்போன இதயங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.


“படிப்பினை தருகின்ற சான்றுகளை நீங்கள் பார்த்த பின்னருங்கூட உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் ஆகிவிட்டன. ஏன் அவற்றை விடவும் கடினமாகி விட்டன. ஏனெனில் சில கற்களில் இருந்துகூட நீரூற்றுக்கள் பொங்கி எழுகின்றன. இன்னும் சில கற்கள் பிளந்து அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது. இன்னும் சில அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்கி கீழே விழுந்து விடுகின்றன. நீங்கள் செய்து கொண்-டிருக்கின்ற இழிசெயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை” (திருக்குர்ஆன் 2;74)
இதே போன்று குருடாகிப்போன இதயங்கள் என்றும் குர்ஆன் இவர்களைக் கண்டிக்கின்றது.
“பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா, என்ன? (அவ்வாறு பார்த்-திருந்தால்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்களையும் கேட்கக் கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே. உண்மை யாதெனில் கண்கள் குருடாவதில்லை. ஆனால், நெஞ்சங்களிலுள்ள இதயங்கள்தான் குருடாகின்றன” (திருக்குர்ஆன் 22;46)
நயவஞ்சக நடத்தைக்கு வித்திடுவதும் இதயம்தான். நோயுற்ற இதயம் என குர்ஆன் எச்சரிக்கின்றது.
“எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 2;10)
சிந்தித்துணராத இதயங்களைக் கொண்டவர்களை அலட்சியம் தொற்றிக் கொள்ளும் எனக் குர்ஆன் எச்சரிக்கின்றது.
“அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்-வதில்லை. அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்-பதில்லை. அவர்களுக்கு காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்-பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள். அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.” (திருக்குர்ஆன் 7;179)
வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்துகொள்வதால்தான் இதயத்தை நோய் தொற்றிக் கொள்கின்றது என்றும் குர்ஆன் எச்சரிக்கின்றது.


“எனவே, அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறு செய்த காரணத்தாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் வஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான். அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அது அவர்களிடம் இருக்கும்” (திருக்குர்ஆன் 9;77)
இறைவனை நினைவு கூர்கின்ற இதயங்களை மென்மையான, மிருதுவான இதயங்கள் எனக் குர்ஆன் வர்ணிக்கின்றது.
“அதனைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கின்றது. பின்னர் அவர்களின் உடலும், உள்ளமும் மிருதுவாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன” (திருக்குர்ஆன் 39;23)
அல்லாஹ்வை நினைவுகூர்வதில்தான் மன நிம்மதி இருக்கின்றது என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.

“மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. பிறகு, எவர்கள் (சத்திய அழைப்பை) ஏற்றுக்கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மகிழ்வும் நல்ல முடிவும் இருக்கின்றன” (திருக்குர்ஆன் 13; 28, 29)
இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு பரிவும் கருணையும் நிறைந்த இதயம் கிடைக்கின்றது என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது .

“மேலும், எவர்கள் அவரைப் பின்பற்றினார்களோ அவர்களின் உள்ளங்களில் நாம் பரிவையும் கருணையையும் ஏற்படுத்தினோம்” (திருக்குர்ஆன் 57;27)
 தூய்மையான உள்ளங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.




“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திட மாட்டா. ஆனால் எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர” (திருக்குர்ஆன் 26; 88, 89)
அல்லாஹ்வின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உருகிவிடுகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.


“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?” (திருக்குர்ஆன் 57;16)

இறைநினைவால் நடுநடுங்கிப்போகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகிறது.



“மேலும், (நபியே) பணிவான நடத்தையை மேற்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக. அவர்கள் எத்தகையவர்களெனில், அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டால் அவர்களின் இதயங்கள் நடுநடுங்கி விடுகின்றன.” (திருக்குர்ஆன் 22; 34, 35)
 அல்லாஹ்வின் பக்கம் அதிகமாக மீளுகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“அவரோ பார்க்காமலேயே கருணைமிக்க இறைவனுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார்.” (திருக்குர்ஆன் 50;33)
இதயங்களைத் தூய்மைப்படுத்துகின்ற பணி இறைத்தூதர்கள் செய்த பணி ஆகும். இதயத் தூய்மை இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. இரண்டும் முக்கியமானவை. இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அவை ; (1) நோய்கள், பலவீனங்கள், குறைகள் ஆகியவற்றை நீக்குதல். (2) நன்மைகள், நலங்கள், நிறைகள் ஆகியவற்றை செழித்தோங்கச் செய்தல்.

எந்தவிதமான கசடோ, குப்பையோ, களங்கமோ இல்லாத இதயம்தான் தேவை.

எத்தகைய ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இம்மிளவுகூட வளைந்து கொடுக்காத, தயங்காத, தடுமாறாத வீரஞ்செறிந்த இதயம்தான் தேவை.

எந்தவிதமான சந்தேகத்துக்கும் சஞ்சலத்திற்கும் உள்ளாகாத, தடுமாறாத உள்ளம்தான் தேவை.

பொய், பகட்டு, வஞ்சகம் போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை பெற்ற தூய்மையான இதயம்தான் தேவை.

இதயத்தூய்மைக்கு அடிப்படைகளாக இரண்டைச் சொல்லலாம். இந்த இரண்டையும் வளர்த்துக் கொள்வதில் நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்.

முதலாவதாக, அல்லாஹ்வின் மீது அன்பு. அல்லாஹ்வின் மீது அதீத அன்பு செலுத்துகின்றவர்களாய், படைத்தவனின் மீது பேரன்பு கொண்டவர்களாய், கருணை மிக்க இறைவனின் மீது பற்று வைத்திருப்பவர்களாய் நாம் இருக்க வேண்டும். “அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி கொண்டார்கள்” என்கிற உன்னத நிலையை அடைய வேண்டும். அந்த அளவுக்கு ஆழமானதாகவும் வலுவானதாகவும் இறைத்தொடர்பு இருத்தல் வேண்டும்.

இரண்டாவதாக, நாம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மறுமைக்கே முன்னுரிமை தருதல் வேண்டும். உலக இலாபங்களைவிட மறுமை இன்பங்களுக்கே முன் னுரிமை தருகின்ற மனப்பக்குவம் நமக்கு இருத்தல் வேண்டும். அற்பமான, குறுகிய கால உலக இன்பங்களை விட நீடித்த, நிலையான, முடிவே இல்லாத மறுமை நலன்களுக்கு முன்னுரிமை தருகின்றவர்களாய் நாம் மாற வேண்டும்.

உலகத்தை விட மறுமைக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தருகின்ற இந்தப் பண்பை நாம் வளர்த்துக்கொள்ளாவிட்டால் நாம் தாஃகூத்துக்கு அடிமையாகிப் போவோம்.

மறுமையைவிட இந்த உலக வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆபத்தில் முடியும். இத்தகைய மனிதர்கள் மீது இறைவனின் கோபம் உண்டாகும். அவர்களைப் பயங்கர வேதனை சூழ்ந்துகொள்ளும்.

எவர் மனநிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்கின்றாரோ அவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இத்தகையவர்களக்கு மாபெரும் வேதனையும் இருக்கின்றது. இதற்குக் காரணம் இவர்கள் மறுமையை விட உலக வாழ்க்கையை அதிகம் நேசித்தார்கள் என்பதுதான். (திருக்குர்ஆன் 16 ; 106)

இதயத்தைப் பாதிக்கின்ற நான்கு பலவீனங்கள்

நான்கு பலவீனங்கள் இதயத்தைப் பாதிக்கும். அவற்றைக் குறித்து விழிப்புடன் இருந்து அவற்றிலிருந்து விலகி இருத்தல் அவசியமாகும். இதயத்தூய்மை குறித்து கவலைப்படுகிற அனைவரும் இந்தப் பலவீனங்களைத் துறப்பது குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

1) டென்ஷன். இதுதான் முதல் பலவீனம். டென்ஷன் அடைதல் இதயத்தைப் பாதிக்கும். எப்போதும் எந்நேரமும் எதைக்குறித்தாவது டென்ஷன் அடைவது. பிரச்னைகளை நினைத்து நினைத்து பதற்றமடைவது. பணிகளை எண்ணிப் பார்த்தும் செய்ய வேண்டிய பணிகளை நினைத்துப் பார்த்தும் டென்ஷன் அடைதல். இவையெல்லாமே இதயத்தைத் தூய்மைப்படுத்துவதிலிருந்து நம்முடைய கவனத்தைச் சிதறச் செய்துவிடும்.

2) பிஸியாக இருப்பது. எப்போதும் பிஸியாக இருப்பதும் ஆபத்தானதே. எப்போதும் தொழில், வணிகம், பணி, பணம் என்று ஆலாய்ப் பறப்பது. எந்நேரமும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பது. அந்த ஒற்றை இலக்குடன் இருபத்தினான்கு மணி நேரமும் பிஸியாக இருப்பது. ஒருவர் காலையில் 6.30 மணிக்கு கடையைத் திறப்பார். இரவு 11.30 மணி வரை கடையே கதி எனக் கிடக்கின்றார் எனில், எப்போதும் பிஸியாக இருக்கின்றார் எனில் அதனால் என்ன நன்மை? காலையில் 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 வரை உழைத்தால்தான் வெற்றியா? வேறு எதற்கும் நேரம் இல்லாத வகையில் பிஸியாக இருப்பது இதயத்தூய்மையிலிருந்து கவனத்தைத் திருப்பி விடும்.

3) சுய பச்சாதாபம் கொண்டு வருந்துதல். இதுவும் இதயத்தூய்மையைப் பாதிக்கும். ஒருவர் எந்நேரமும் தன்னைச் சூழ்ந்துள்ள தொல்லைகள் குறித்தும், தான் சந்தித்து நிற்கின்ற பிரச்னைகள் குறித்தும், தன்னுடைய கஷ்டங்கள் குறித்தும் நினைத்து நினைத்து வருந்துகின்றார் எனில் அவருடைய இதயம் தொல்லைகளாலும் பிரச்னைகளாலும் கஷ்டங்களாலும் நிறைந்துவிடும். பிறகு இதயத்தூய்மைக்கு ஏது வாய்ப்பும் நேரமும்?

4) ஆசை. ஆசை. ஆசை. அதிகமாக ஆசைப்படுதல். இதுவும் இதயத்தூய்மையைப் பாதிக்கும். நிறைவேறாத ஆசைகளாலும், கனியாத ஏக்கங்களாலும், மோசம் போன எதிர்பார்ப்புகளாலும் சின்ன சின்ன ஆசைகளாலும் பெரிய பெரிய ஆசைகளாலும் விருப்பங்களாலும் ஒருவருடைய இதயம் நிறைந்திருக்கின்றது எனில், இதயத்தூய்மைக்கு வழி ஏது?

இதயத்தூய்மைக்கான ஐந்து வழிமுறைகள்.

1) முதலாவதாக அல்லாஹ் ஏவியதைச் செய்ய வேண்டும். அல்லாஹ் தடுத்தவற்றிலி ருந்து முற்றாக விலகி இருத்தல் வேண்டும்.
குறிப்பாக ஹராமானவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருத்தல் வேண்டும்.

அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘ஒருவர் பாவம் செய்கின்ற போது சின்னதாக கரும்புள்ளி ஒன்று பதிந்துவிடுகின்றது. அவர் அதிலிருந்து மீளாமல் மீண்டும் மீண்டும் பாவம் செய்து அதிலேயே திளைத்திருப்பாரெனில் அந்தக் கரும்புள்ளி அடர்த்தியாக அவருடைய இதயம் முழுவதையும் சூழ்ந்துகொள்கின்றது’.

எனவே அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி இருத்தல் வேண்டும்.
குறிப்பாக ஹராமான சம்பாதியத்திலிருந்து விலகி இருத்தல் வேண்டும். ஹராமான வருமானத்தாலும் ஹராமான உணவுப் பொருள்களை விழுங்குவதாலும் இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஹராமான வருமானமும் உணவும் மனிதனின் நிம்மதியைப் பறிக்கக் கூடியவையாகும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கின்றது. ஜமாஅத்தின் அமைப்புச்சட்டத்தில் ஜமாஅத் உறுப்பினரின் பொறுப்புகளாக எட்டு பொறுப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் மூன்று பொறுப்புகள் ஹராமான வருமானத்திலிருந்து விலகி இருப்பது தொடர்பானைவையாகும்.
(3)    ஷரீஅத்தில் ‘மாஸீயத்தே ஃபாஹிஷாஹ்’* எனும் பிரிவுக்குள் வரும் வரு-மான வழிகளில் ஒருவர் ஈடுபட்டிருந்தால் அதனை விட்டுவிட வேண்டும்; அதனால் எவ்வளவு இழப்பு ஏற்படினும் சரியே! மேலும் சம்பாத்தியத்-தில் இப்படிப்பட்ட வருமா-னத்தின் ஒரு பகுதி கலந்து விட்டது என்றால், அந்தப் பகுதியை விட்டும் சம்பாத்தியத்தைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
(4)     ஹராமான (விலக்கப்பட்ட, சட்டத்துக்குப் புறம்பான) முறையில் ஈட்டப்-பட்ட பணம் அல்லது சொத்து அவருடைய கைவசமிருப்பின். அதனைக் கைகழுவி விட வேண்டும். ஆனால், அந்தச் சொத்தோ பணமோ பிரித்தறிய முடியாத அளவுக்கு மொத்த சம்பாத்தியத்தில் இரண்டறக் கலந்து விட்டிருந்-தால், இறைவனிடம் அதற்காக பாவமன்னிப்புக் கோருவதுடன் இயன்ற வழி-களில் அதற்கு ஈடு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
(5)    மற்றவருக்குச் சொந்தமான அல்லது மற்ற-வருக்குச் சேர வேண்டிய சொத்திலிருந்தோ பணத்-திலிருந்தோ ஒரு பகுதியையோ அல்லது பல பகுதி-களையோ பறித்து அவற்றை அவர் தம்முடைய சொத்திலோ பணத்திலோ சேர்த்துக் கொண்டிருந்-தால்  உடனடியாக அவர் அவற்றைத் தனியாகப் பிரித்-தெடுத்து அவற்றை அவற்றுக்கு உரியவரி-டம் திருப்பிக் கொடுத்து விட வேண்-டும்.  உரிமை-யாளர் யார் எனத் தெரியும்போதும் அவரிட-மிருந்து பறிக்கப்பட்ட சொத்து அல்லது பணம் இன்னதுதான் எனத் தெளிவாக அடையாளம்  காண முடிகிற போதும்தான் இவ்வாறு உரியதை உரியவரிடம் திருப்பிக் கொடுப்பது சாத்தியமா-கும். இல்லையெனில் இறைவனிடம் அதற்காக பாவமன்னிப்புக் கோருவதுடன் இயன்ற வழி-களில் அதற்கு ஈடு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  (ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புச் சட்டம் பாகம் 2; பிரிவு 8 (3,4,5)

அண்ணல் நபிகளார்(ஸல்) ஹராமான சம்பாத்தியத்தின் பாதிப்பை நபிமொழி ஒன்றில் விவரித்துள்ளார். ‘ஒருவர் நீண்ட தொலைவு பயணம் செய்து வருகின்றார். இறைவனைத் தொழுகின்றார். இறைவனை நினைவுகூர்கின்றார். மனம் உருக அழுது அரற்றி இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். ஆனால் அவர் அணிந்திருக்கின்ற ஆடை ஹராமான சம்பாத்தியத்தி-லிருந்து பெறப்பட்டது. அவர் உண்ட உணவு ஹராமான சம்பாத்தியத்திலிருந்து பெறப்பட்-டது எனில் அவருடைய முறையீடு எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?.’

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் தஸ்கியத்துன் னஃப்ஸ் இதயத் தூய்மை என்பது இதயத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. அது வாழ்வின் அனைத்து துறைகளையும் தழுவியதாகும்.

2) அடுத்ததாக, குர்ஆனுடன் தொடர்பு ஆழமானதாகவும் வலுவானதாகவும் அமைய வேண்டும். நாள்தோறும் குர்ஆன் ஓத வேண்டும். பொருள் புரிந்து வாசிக்க வேண்டும். குர்ஆன் தருகின்ற செய்தியை உள்வாங்கிக் கொள்வதற்காக முயல வேண்டும்.

குர்ஆனுக்கு அபாரமானதோர் சக்தி உண்டு. அதுதான் இதயத்தையே மாற்றிவிடுகின்ற, புரட்டிப்போட்டுவிடுகின்ற சக்தி. இதயத்தையே செம்மைப்படுத்திவிடுகின்ற ஆற்றல் குர்ஆனுக்கு உண்டு.

எனவே எப்பாடுபட்டாவது நாள்தோறும் குர்ஆன் ஓதுவதற்கும் அதனைப் புரிந்து கொள்வதற்கும் அதன் மொழிபெயர்ப்பையும் விளக்கவுரையையும் வாசிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். நேரத்தைப் பிழிந்தெடுத்து குர்ஆனை ஓதுவதில் செலவிட வேண்டும்.

3) அடுத்ததாக இஹ்திஸாப். இதயத்தூய்மைக்கு இஹ்திஸாபே நல்மருந்து. சுய மதிப்பீடும் சுய ஆய்வும் முக்கியமானவை. உளத்தூய்மையுடன் அன்றாடம் இரவு படுக்கப் போகு முன் இஹ்திஸாப் செய்ய வேண்டும்.

உமர்(ரலி) கலீஃபாவாக ஆட்சி செலுத்துகின்ற காலம் அது.

கலீஃபா உமருக்கு ஒரு பழக்கம். தன்னுடைய இரவுப் பொழுதுகளை மூன்று பகுதிகளாய்ப் பிரித்து ஒன்றை மக்கள் குறை தீர்ப்பதற்கும் அடுத்ததை இறை வழிபாட்டுக்கும் மூன்றாவதை ஓய்வுக்கும் ஒதுக்கி வந்தார் உமர்(ரலி).

இரவில் மக்கள் குறைகளை நேரடியாக அறிந்துகொள்வதற்கும் குறைகளைத் தீர்ப்பதற்கு உகந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நகர்வலம் போவதையும் வழக்கமாய் வைத்திருந்தார் கலீஃபா உமர்(ரலி).

இவ்வாறு ஒரு நாள் இரவு வேளையில் நகர்வலம் கிளம்பிய போது அஸ்லம்(ரலி) என்கிற நபித்தோழரையும் தம்முடன் அழைத்துச் சென்றார் உமர்(ரலி). இருவரும் மதீனத்து வீதிகளில் சுற்றித் திரிந்து விட்டு மஸ்ஜிதுன் னபவியை அடைந்தனர். ஒய்வு எடுத்துவிட்டு இரவின் கடைசிப் பகுதியை இறைவழிபாட்டில் கழிக்கத் திட்டமிட்டிருந்தனர்.

களைத்துப் போயிருந்த அஸ்லம் படுத்த மாத்திரத்தில் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த அஸ்லம் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.

‘உமரே, நீர் அப்படி செய்திருக்கக் கூடாது’
‘உமரே, நீர் இறைவனுக்குப் பதில் அளித்தாக வேண்டும்’
‘உமரே நீர் செய்தது முற்றிலும் தவறு’
என யாரோ கடுமையான குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

விருட்டென்று எழுந்தார் அஸ்லம். அமீருல் முஃமினினை இந்த இரவு வேளையில் திட்டுபவர் யாரோ என அறிந்து கொள்ளவும் ஒரே வீச்சில் அவரைப் பிடித்துவிட வேண்டும் என்கிற ஆசையிலும் அஸ்லம் பாய்ந்தார்.

ஆனால்-

அவர் கண்ட காட்சி அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.

‘உமரே, நீர் அப்படி செய்திருக்கக் கூடாது’
‘உமரே, நீர் இறைவனுக்குப் பதில் அளித்தாக வேண்டும்’
‘உமரே நீர் செய்தது முற்றிலும் தவறு’
எனக் கடுமையான குரலில் விமர்சித்துக் கொண்டிருந்தது உமர்(ரலி) அவர்களே தாம்.

அந்த அகால வேளையில் மதீனத்து மாநகரமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஆட்சியாளர் உமர்(ரலி) தன்னைத்தானே சுயமதிப்பீடும் ஆய்வும் செய்து கொண்டிருந்த காட்சியைத்தான் அஸ்லம்(ரலி) கண்டார்.

இதே போன்று ரோம சாம்ராஜ்யம் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு பெரும் அளவில் பொற்குவியல்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தன.

அந்தப் பொற்குவியலைப் பார்த்து உமர்(ரலி) கர்ஜிப்பார்; “ஒருபோதும் உன்னால் என்னை ஏமாற்றிவிட முடியாது. என்னுடைய வாழ்வின் இலட்சியத்தை மாற்றிவிடுகின்ற ஆற்றல் உனக்குக் கிடையாது. என்னுடைய வாழ்வு போய்க் கொண்டிருக்கின்ற திசையை மாற்றிவிடுகின்ற சக்தி உனக்கு இல்லை. இந்தப் பொற் குவியலால் எனக்குள் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தி விட முடியாது.’
இந்த மாதிரியான இஹ்திஸாப் - சுய மதிப்பீடுதான் நமக்குத் தேவை.

4) வழிபாடுகளில் கவனம் வேண்டும். மூன்றாவதாக, வழிபாடுகளில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நாம் நிறைய பணிகளில் ஈடுபடுகின்றோம். தனிப்பட்ட அளவிலும் கூட்டு முறையிலும் நாம் நிறைய நற்செயல்களைச் செய்கிறோம். என்றால் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இறுதியில் மறுமை நாளில் நாம் இறைவனுக்கு முன்னால் தனித்தனியாகத் தான் நின்று கணக்கு காட்ட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

வழிபாடுகளில் கவனமும் அக்கறையும் செலுத்தும்போது வாழ்க்கை செம்மைப் படுத்தப் படும். வழிபாடுகள் சடங்குகள் ஆகிவிடக் கூடாது.

நம்முடைய தொழுகைகள் எப்படி இருக்கின்றன?

‘தொழும்போது இறைவன் நம்மைப் பார்க்கின்றான் என்கிற எண்ணத் தெளிவுடன் தொழ வேண்டும் என்று அண்ணல் நபிகளார்(ஸல்) அறிவுறுத்தி இருக்கின்றார். அல்லாஹ்-வுடன் நாம் செய்கின்ற உரையாடல்தான் தொழுகை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தொழுகைக்காக நிற்கின்ற போதும் அல்லாஹு அக்பர் எனச் சொல்லி கைகளைக் கட்டிக் கொள்கின்ற போதும் எல்லாவிதமான கவலைகளிலிருந்தும் சிந்தனைகளிலிருந்தும் மனத்தை விலக்கிவிட்டு மனம் ஒருமுகப்பட்ட நிலையில் தொழ வேண்டும்.

தொழுகை எப்படி அமைந்தன என்பதைக் குறித்து இரவில் இஹ்திஸாப் செய்ய வேண்டும்.

தொழுகையை மேம்படுத்துவதற்காக வேண்டி தொழுகைகளுக்கு ஏ, பி, ஸி என  படித்தரங்களைக் கொடுக்கின்ற வழக்கத்தை நாங்கள் எங்களுடைய பகுதியில் அறிமுகப் படுத்தினோம்.

ஒருமுறை இந்தப் படித்தரங்கள் பற்றி ஊழியர் கூட்டத்தில் விவாதித்தோம். அப்போது ஒரு ஊழியர் சொன்னார். ‘தொடக்கத்தில் இந்தத் திட்டம் நல்ல பலனைத் தந்தது. மனம் ஒன்றித் தொழுதேன். தரம் மேம்பட்டது. ஆனால் காலப்போக்கில் தொழுவதற்காக நிற்கின்ற போதே இந்தத் தொழுகை ஏ கிரேடு தொழுகை, பி கிரேடு தொழுகை என மனத்திற்குள் பற்பல சிந்தனைகள் வந்துவிடுகின்றன’ என்று புலம்பினார் அவர்.

எனவே தொழுகையை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொழுகையில் நம்முடைய கவனம் சிதறிவிடக் கூடாது என்பதிலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நம்முடை இயக்கச் செயல்பாடுகளில் நமக்கு ஆர்வம் நிலைப்பதற்கும், ஊக்கத்துடனும் உற்சாகமாகவும் நாம் பணியாற்றுவதற்கும் தஸ்கியத்துன் னஃப்ஸ் பெரிதும் உதவும்.

5) இதயத்தூய்மைக்காக துஆ. இதயத்தூய்மைக்காக இறைவனிடம் அடிக்கடி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒரு முறை அன்னை ஆயிஷா(ரலி) இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அழுகின்ற சத்தம் கேட்டு எழுந்தார்.

யாரென்று பார்த்தால் அண்ணல் நபிகளாரே அழுது கொண்டிருந்தார். அப்போது ‘என் இதயத்தைத் தூய்மைப்படுத்துவாயாக’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லி பிரார்த்தித்துக கொண்டிருந்தார் அண்ணல் நபிகளார்(ஸல்)
இஸ்லாமிஸ்டுகளின் மிகப்பெரும் ஆயுதம் இறைத்தொடர்பும் பிரார்த்தனையும்தாம். இந்த இரண்டின் மூலம் நாம் இந்த வாழ்விலும் வெற்றி பெற முடியும் மறுமையிலும் நற்பேறுகளை ஈட்டிக் கொள்ள முடியும். அல்லாஹ் நல்லருள் செய்வானாக.
ஆமின்.

8 செப்டம்பர் 2012 அன்று சென்னையில் நடந்த மாநில உறுப்பினர் முகாமில்
எம். ஐ. அப்துல் அஜீஸ் ஆற்றிய உரை..!


தமிழில் :  சையத் சுல்தான்
தொகுப்பு :  அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

Wednesday, August 29, 2012

ஆட்டோவில் இஸ்லாமிய அழைப்பு!

நில்... கவனி... படி...! 
ஆட்டோவில்    
இஸ்லாமிய அழைப்பு!’

பெங்களுர் ஸலாம் சென்டரின் மற்றுமோர் மகுடம் என்று அதனைச் சொல்லலாம்.

விளம்பரப் பதாகைகளில் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச் சொன்னவர்கள்,
நீதி மன்றங்களில் குர்ஆன் ஓசையை முழங்க விட்டவர்கள்,
நீதியரசர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இறைவேதத்தைத் தந்து மனம் நிறைந்தவர்கள்,
மூத்த காவல்துறை அலுவலர்களுக்கு குர்ஆன் பிரதிகளைக் கொடுத்து மகிழ்ந்தவர்கள்,
இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஏடுகளை தரமான தாளில், கலை எழில் மிளிர, அறிவமுதம் சொட்டச் சொட்ட அழகிய ஆக்கங்களை இலவசமாக விநியோகித்து மகிழ்ந்தவர்கள்,
இப்போது மற்றுமோர் வெற்றிகரமான பணியைத் தொடங்கியிருக்கின்றார்கள்.




எந்நேரமும் எப்போதும் இறைவனின் செய்தியைச் சமர்ப்பிக்க வேண்டுமே என்கிற ஓயாத எண்ணத்திலும் கவலையிலும் முகிழ்ந்த அருமையான திட்டம் என்று அதனைச் சொல்லலாம்.

ஆம்.

இன்று மாநகர மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற ஆட்டோக்களில் இஸ்லாமிய நூல்களை வைத்து ஆட்டோக்களை நடமாடும் இஸ்லாமியப் படிப்பகங்களாய் மாற்றி இருக்கின்ற திட்டம்தான் அது.

ஆட்டோவில் ஒட்டுநரின் முதுகுக்குப் பின்னால் மீட்டர் பொருத்தப்படுகின்ற இடத்தில் விஞ்ஞான முறையில் வடிவமைக்கப்பட்ட பேழைகளில் இஸ்லாமிய நூல்கள் வைக்கப் பட்டிருக்க,
கண்கவர் முகப்புகளுடன் கொள்ளை அழகுடன் புத்தகங்கள் ‘படி.. படி..’ என மௌனமாய் அழைக்க,
‘உலகப் பொதுமறை குர்ஆன்’, ‘அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடை அண்ணல் நபி-களார்(ஸல்)’, ‘இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளும் சரியான விளக்கங்களும்’ , ‘மறுமைச் சிந்தனை’, ‘ஹிஜாப்‘, ‘இஸ்லாமும் பயங்கரவாதமும்’ என நூல்களின் தலைப்புகள் பார்ப்போரின் கவனத்தைச் சுண்டியிழுக்க,
இந்தத் திட்டம் அறிமுகமான சில நாள்களிலேயே பெங்களுர் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேன்மேலும் படிக்க விரும்புகின்ற பயணிகளுக்கு இலவச நூல்களும் தரப்படுகின்றன. 

முதற்கட்டமாக ஐம்பது ஆட்டோக்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்-தியுள்ளனர். இதற்கென முதன்மை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு ஐவர் அடங்கிய குழு ஒன்று சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது.

ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சிறப்புப் பயிற்சி

ஐம்பது ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் விதத்தில் சிந்தனைப் பட்டறையும் நடத்தப்பட்டுள்ளது. ஆட்டோ ஒட்டுநர்கள் மனமுவந்து இந்தத் திட்டத்தில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அறிமுகப்படுத்தப்பட்ட சில நாள்களுக்குள்ளாகவே இவர்கள் சந்தித்த அனுபவங்களும் எதிர்கொண்ட மக்களின் அணுகுமுறைகளும் இவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளன.

நிஸார் அஹ்மத் என்கிற ஆட்டோ ஒட்டுநர்தான் இந்தத் திட்டத்தில் சேர்ந்த முதல் ஆட்டோ ஒட்டுநர். இஸ்லாத்தின் செய்தியை மக்கள் வரை கொண்டு சேர்க்கின்ற மன நிறைவு என்னை ஆட்டோவிலிருந்து கீழே இறங்கவிடுவதில்லை. முன்பெல்லாம் மாலை ஆறு மணிக்கெல்லாம் வண்டியை வீட்டுக்குத் திருப்பிவிடுவேன். இப்போது இரவு பத்து, பத்தரை மணி வரை ஒட்டுகின்றேன் என்கிறார் அவர்.

காதர் பாஷா சொல்கின்றார்; ‘என்னுடை ஆட்டோவிலும் இஸ்லாமிய நூல்களை வைத்துள்ளேன். பயணிகளும் ஆர்வத்துடன் படிக்கின்றார்கள். பயணிகளை விட எனக்கு இது புது அனுபவம். அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றை இதற்கு முன்பு முழுமையாக நான் வாசித்ததே இல்லை. இப்போது வாசித்து விட்டேன். குர்ஆன் மொழிபெயர்ப்பையும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இது என்னுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.’

ஹாஃபிஸ் முஹம்மத் ஸாதிக் கூறுகின்றார்: ‘ஒரு முறை ஒரு இந்து புரோகிதர் என்னுடைய வண்டியில் ஏறினார். ஆர்வத்துடன் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அவர் போக வேண்டிய இடம் வந்த பிறகும் அவர் சிறிது நேரம் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருந்தார். இஸ்லாத்தின் செய்தியை சிறப்பாகப் பரப்புகின்றீர்கள் என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.’

பாஷா சொன்ன அனுபவம் நெஞ்சை நெகிழ வைப்பதாகும். அவர் சொல்கின்றார்: ‘ஒரு முறை ஒருவர் மிகவும் பரபரப்புடன் கைப்பேசியும் கையுமாக என்னுடைய வண்டியில் ஏறினார். ஏதோ ஒரு பிரச்னை போலும்! காரசாரமாக உரத்த குரலில் பேசி வந்தவர், ‘பிறகு பேசுகின்றேன்‘ எனச் சொல்லி கைப்பேசியை அணைத்துவிட்டார். பேழையில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார். கன்னட மொழியில் குர்ஆன் கிடைக்குமா? எனக் கேட்டார்.

நானும் அவருடைய முகவரியை வாங்கிக் கொண்டேன். அடுத்த நாளே ஸலாம் சென்டரில் குர்ஆன் பிரதியை வாங்கிக்கொண்டு அவருடைய வீட்டுக்குச் சென்று கொடுத்தேன். குர்ஆனை வாங்கிக் கொண்ட அவர் ஆயிரம் ரூபாய்த்தாளைக் கொடுக்க முற்பட்டார். நான் வேண்டாம் என மறுத்தேன். மறுமையில் இதற்காக இறைவன் எனக்குத் தரவிருக்கின்ற நற்கூலியே போதும் என்று சொன்னேன். என்னுடைய பதிலைக் கேட்டு அவர் சற்றுநேரம் திகைத்துப் போய் நின்றுவிட்டார்.

செய்தி :  ஷுஐப் ஷேக்
தொகுப்பு : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
Source : Here

Saturday, March 3, 2012

Documentary on Moulana Abdur Razaq Latheefi

It is the unique documentary of its kind. Jamaat-e-Islami Hind has been striving in India for the establishment of Divine law in all aspects of life. It has attracted millions of noble souls and changed and shaped their lives. It continues to attract and mould countless human beings throughout the nook and corner of this country.

It has produced many stalwarts and stars. Moulana Abdur Razaq Latheefi is one of them. When we, a handful of youth and students made the goal of establishing Deen as our mission he was not in the scene. But, we grew up hearing moving, soul stirring anectodes about him. As we had Moulana M A Jameel Ahmed and Moulana H Abdur Raqeeb who never get tired of narrating anectodes from the life of Moulana Abdur Razaq Latheefi Sahib. Hence Latheefi Sahib is not alien to us.

But, still, we could not get the full picture. We had never seen his photograph. We never knew how he looked like.

Here is a documentary on the life and times of Moulana Abdur Razaq Latheefi Sahib. It is informative, inspiring and good. Scores of leaders and veterans of the Islamic movement introduce you various aspects of this towering personality. S. M. Malik Sahib's version would continue to echo in your mind : "Moulana used to undertake tours after tours. He used to remember the names and addresses of three hundred members. He never needed a file or assistant." It is simply amazing. Nowadays in this age we have become addicted to our cell phones, computers. Sometimes we tend to forget our own numbers.

Moulana Abdul Azeez Sahib and Moulana Sirajul Hasan Sahib extol the leadership quality of the late Moulana. Shakeel Anwar Sahib sheds light on his milli qidmat. Scores of his sons including Br Abdur Raqeeb Latheefi, my friend, remember him passionately.

It is worth watching. Cross posted in Luthfispace

Tuesday, February 28, 2012

Apna Muqam Paida Kar


No two days in the life of a Muslim should be the same. A Muslim should always strive to do something new. Something different. Something more than the previous day.

Isi roz-o-shab main ulajh kar na rah ja
Ke tere zamaan o makaan aur bhi hain

Lose not yourself in the cycle of days and nights
Within your reach are feats even more

Dyare Ishq Mein Apna Muqam Paida Kar
Naya Zamana Naya Subho Sham Paida Kar


Iqbal's philosophy of khudi shows that man is neither soul nor body. Man is above both because he pessesses them. Iqbal's naujawan is a Man of Khudi. The absolute Khudi is infinetly creative. "Know thy self and success shall be thine" said by some Philosopher. Iqbal expresses if man becomes empror of himself then he can lead the world to his own direction. He says:

"The man of strong character who is master of himself
will find fortune complaisant.
....
He will dig up the foundations of the universe
and cast its atoms into a new mould.
He will subvert the course of Time
And wreck the azure firmament.
By his own strength he will produce
A new world which will do his pleasure

Monday, February 20, 2012

Give me my world back


Nowadays old memories haunt me more than dreams of future. Old is always Gold. I miss Moulana M. A. Jameel Ahmed Sahib most. I miss my college buddies. I miss my SIO days.

Those pleasing evenings when we used to assemble in libraries and drawing rooms, those passionate discussions, those dreamy talks of Hukumat-e-Ilahi, those enchanting words of Iqamat-e-deen, shahadat-e-huq and ummatan wasatan. I miss them.

Those endless cups of tea and tireless discussions on the state of Muslim Ummah.. I miss them.
Nowadays I find myself immersed in my work. My world has shrinked to world of books and words.
I need that passion back. I need that dream back. I yearn for that innocence. I crave for that fascination. Give me my world back.
Azm-e-Muhkam ataa kar khudaaya
Howslon ku nayee zindgi de

Thursday, January 19, 2012

Bade Be-aabru Hokar Tere Kooche Se Hum Nikle



Hazaaron Khwahishein Aisee ki Har Khwahish Pe Dam Nikle
Bohot Nikle mere armaan lekin Phir Bhee Kam Nikle
Thousands of desires, each worth dying for...
many of them I have realized...yet I yearn for more...
Nikalna Khuld Se Aadam Ka Sunte Aaye The Lekin,
Bade Be-Aabru Hokar Tere Kooche Se Hum Nikle.
We have heard about the dismissal of Adam from Heaven,
With a more humiliation, I am leaving the street on which you live...
Ghalib Mirza Asadullah Khan. Here 

Monday, January 16, 2012

Agar kho gaya ek nasheman to kya ghum..!



Allama Iqbal addresses the youth:
Sitaron se aage jahan aur bhi hain
Abhi ishq ke imtehan aur bhi hain
Beyond the stars there are worlds more
Our quest yet has more tests to pass
Tahi zindagi se nahin ye fizayen
Yahan siakdon karwaan aur bhi hain
This existence alone does not matter
There are boundless journeys more
Khana’at na kar aalam-e-rang-o-bu par
Chaman aur bhi aashiyaan aur bhi hain
Do not rest on what you have
There are other gardens, other nests (resting places) too
Agar kho gaya ek nasheman to kya ghum
Maqmat-e-aah-o-fughaan aur bhi hain
Why worry if you have lost one abode
There are a million addresses to claim
Tu shaheen hai parvwaaz hai kaam tera
Tere saamne aasmaan aur bhi hain
You are the falcon, your passion is flight
And you have skies more to transcend
Isi roz-o-shab main ulajh kar na rah ja
Ke tere zamaan o makaan aur bhi hain
Lose not yourself in the cycle of days and nights
Within your reach are feats even more
Gaye din ke tanha tha main anjuman mein
Yahaan ab mere raazdaan aur bhi hain


Gone is the day when I was lonesome in the crowd
Today those who resonate my thoughts are more
 Allama Iqbal had written these lines in 1908. But I feel that he has written these inspiring, soothing lines just for me. Here

Monday, January 9, 2012

A memorable camp of Jamaat-e-Islami Hind in Chennai


Hats off to Br A Shabbir Ahmed, Ameer-e-Halqa and Br Jan Muhammad Nazim-e-Ijtema for the succesful execution of the training camp for the state and central leaders and also making foolproof arrangements for the sessions of Markazi Majlis-e-Shura.

There may have been a few minor lapses, deficiencies and inadequacies. We are all humanbeings and to err is human. But the fact is that Allah blessed us all and both the events were successful, upto the mark and incident free.

The Markazi and Riyasati Qayideen returned to their homes with fond memories, smiling faces and rejuvenated spirits. I could not count the number of persons - every one of them tall leaders of the Tahreek - who congratulated and complimented for the arrangements made.

Alhumdulillah! All praise, glory, acclamation, honor, adoration, adulation and thanks to Allah.
Report of the camp Here and Here
Related Posts Plugin for WordPress, Blogger...