Pages

Saturday, November 12, 2011

Some reflections on the death of Moulana A Khutbudeen Ahmed Sahib


Some reflections on the death of Moulana A Khutbudeen Ahmed Sahib: Muqeet Mujtaba Ali

Muqeet Mujtaba Ali, a long time associate, student and friend of Moulana A Khutbudeen Ahmed Baqawi Sahib writes the following:

Sitting in silence I recall my meeting with him at his house about four months ago. He compelled me to have tea with him. Neither he nor I knew that we were meeting for the last time.
Just a week ago, he had been to Singapore to meet his daughter there.
His wife and other children who wished him a happy journey never even dreamt that he will never come back.
Those who saw him off at the airport never knew that they were seeing him off forever.
The man, who is no more now, never knew that he is not going to meet his near and dear ones again. That his flight to Singapore was the last flight of his life!
His daughter in Singapore never knew that her father has come all along from Chennai to Singapore with an invisible ‘kafan’ wrapped over his body.
None realised that Allah was preparing for his burial in Singapore.
The deceased was a great scholar of Islam. He was the author and translator of many books in Tamil. His great contribution was the translation of Qur’an in Tamil language.
I pray to Allah to forgive all his sins and grant him the highest place in Jannah. Aameen.

Some Points to Think and Act Upon:
1. Death is certain. None can escape death. So I and you must be wise enough to prepare for the life after death.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ [٥٩:١٨
O Believers! fear Allah and let every person look and consider what he sends forward for the morrow. Fear Allah; Allah is well aware of all that you do. (Al-Hashr 59: 18)
2. The time of death is destined by Allah, the Giver of life, and the Taker of life. Neither the time of death can be advanced, nor can it be postponed.

وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَٰكِنْ يُؤَخِّرُهُمْ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ [١٦:٦١
Were Allah to take people to task for their wrong-doing, He would not have spared even a single living creature on the face of the earth. But He grants them respite until an appointed term. And when that term arrives, they have no power to delay it by a single moment, nor to hasten it.(Al-Nahl 16: 61)
3. The Place where one will die is decided already by Allah. None except Allah knows the place of every man’s death.

…وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ …[٣١:٣٤
No soul knows in which land he will die!(Luqman 31: 34)
Kuthbudeen Sahib spent his entire life in Tamilnadu, India. His death was destined in Singapore. So Allah took him there in the evening of his life.
We must realise and understand very well that Allah drives a person out of his house and takes him to a place where he is destined to die, and he dies there.

… قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ ۖ ….[٣:١٥٤
Say: ‘Even if you had been in your houses, those for whom slaying had been appointed would have gone forth to the places where they were to be slain.’ (Al Imran 3 : 154)
4. Most important thing for a Muslim is to die in the state of Imaan.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ [٣:١٠٢
Believers! Fear Allah as He should be feared, and see that you do not die save in the state of submission to Allah.(Al 'Imran 3: 102)
This ayah, along with other verses, is recited during Nikkah, marriage sermon. Brides and bridegrooms are reminded of death even during the happiest occasion of their life: Your happiness is not permanent. Nor is your life! Prefer that which is permanent over that which is transitory.

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا [٨٧:١٦
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ [٨٧:١٧
Nay! but you prefer the present life, whereas the Hereafter is better and longer lasting. (Al-A'la 87: 16-17)
More Here 

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி மறைவு : சில சிந்தனைகள் - முகீத் முஜ்தபா அலீ

6. நவம்பர், 2011. ஞாயிற்றுக்கிழமை.

தியாகத்திருநாள் நன்றாகக் கழிந்தது.

படுக்கப்போவதற்கு முன்பு வழக்கம்போல மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோதுதான் அந்தச் செய்தியைப் படித்தேன்.

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி மறைந்துவிட்டார் என்கிற செய்தியை நண்பர் அனுப்பியிருந்தார்.

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்

பெருநாள் அன்று மட்டுமே இருக்கக்கூடிய மகிழ்ச்சியும் மனநிறைவும் அந்தக் கணத்திலேயே அகன்றன.

இதயத்துக்கினியவர் எவராவது இறந்துபோகும் போது சோகம் மனத்தைக் கவ்வத்தானே செய்யும்.

மடியில் இருந்த கணிணித் திரையைப் பார்த்தவாறு உறைந்துபோனேன்.
அறையும் வீடும் நிசப்தத்தில் உறைந்திருக்க மௌலானாவைச் சந்தித்த அந்த நிமிடங்கள் மீண்டும் மனத்திரையில் ஓடின.

நான்கு மாதங்கள் கூட ஆகியிருக்காது.

வழக்கம்போல ஜமாஅத் அலுவலகத்திற்குச் சென்று எல்லோரையும் பார்த்து விசாரித்த பிறகு மௌலானாவைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போனேன். வற்புறுத்தி தேநீர் குடிக்க வைத்தார். அவரும் சரி, நானும் சரி தேநீருடன் அளவளாவிய அந்த மாலை வேளை தான் நாம் ஒருவரையொருவர் சந்திக்கின்ற கடைசி வேளை என்று இம்மியளவுகூட எண்ணிப் பார்க்கவில்லை.

மீண்டும் கணிணித் திரையில் தெரிந்த அந்த வலைப்பூ வாசகங்களை வாசித்தேன்.

ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவர் தனது மகளைப் பார்ப்பதற்காக சிங்கப்பூர் போய் இருக்கின்றார். கடல் கடந்து நெடும்பயணம் கிளம்பிய அவரை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்த அவருடைய குடும்பத்தார் அதுதான் அவருடைய கடைசி பயணம் என்கிற விவரம் தெரிந்திருக்கவில்லை.
விமான நிலையம் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்தவர்கள் அவரை நிரந்தரமாக வழியனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.

இனி இயக்கத் தோழர்களையும் குடும்பத்தாரையும் மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பே தனக்குக் கிடைக்காது என விமானம் ஏறிய அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்த விமானப் பயணம் தான் தனது வாழ்வின் கடைசிப் பயணம் என்றும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.

சிங்கப்பூரில் இருக்கின்ற அவருடைய மகளுக்கும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை பறந்து வந்திருக்கின்ற தனது தந்தையார் எவருடைய கண்களுக்கும் புலப்படாத கஃபன் துணியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது தெரியாமலே போயிற்று. 

சிங்கப்பூரில் அவருடைய நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளை அல்லாஹ் செய்துகொண்டிருந்தது எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி நாடறிந்த எழுத்தாளர்; பன்னூலாசிரியர்; மொழிபெயர்ப்பாளர். திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்க்கின்ற பணியில் அவருடைய பங்களிப்பும் பங்கேற்பும் மகத்தானது. அல்லாஹ் அவருடைய நற்பணிகளை ஏற்றுக்கொள்வானாக! அவருடைய பாவங்களை மன்னிப்பானாக! ஆமீன்.
அவருடை மரணம் எழுப்பிய சில சிந்தனைகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!
 1. மரணத்தைத் தவிர்க்க முடியாது.
மரணம் நிச்சயமான ஒன்று. எனவே, அந்த மரணத்திற்காகவும் அதன் பிறகு வரவிருக்கின்ற மறுமை வாழ்வுக்காகவும் நீங்களும் நானும் தக்க ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்-வுக்கு அஞ்சுங்கள். மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்-வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்.                     
(அத்தியாயம் 59 அல்ஹஷர் : 18)

2. உயிரைக் கொடுப்பவனும் இறைவன்தான். உயிரைப் பறிப்பவனும் அவனே. அவனே மரணத்திற்கான தேதியையும் நேரத்தையும் குறிக்கின்றான். அதனைத் தவிர்க்கவோ, தாமதப்படுத்தவோ, தள்ளிப்போடவோ, முடியாது.
மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்ப-தாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர்-களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது.                              (அத்தியாயம் 16: அந்நஹ்ல் : 61)

3. ஒருவர் எங்கே எப்படி மரணமடைவார் என்பதை இறைவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டான்.
 இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அது பற்றிய தகவல் தெரியாது.
தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது.                                 (அத்தியாயம் 31 : 34)
மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி சாகிப் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் தமிழ்நாட்டில் தான் கழித்தார். ஆனால் சிங்கப்பூர்தான் அவரது மரணக்களம் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனால் அவருடைய வாழ்வின் கடைசி நாட்களில் அல்லாஹ் அவரை சிங்கப்பூருக்கு எடுத்துக் கொண்டு போனான்.
ஒருவர் எந்த இடத்தில் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த இடத்திற்கு அல்லாஹ் அவரை அவருடைய இடத்திலிருந்து கிளப்பிக் கொண்டு போகின்றான் என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீர் கூறும்: ‘நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!‘                        
(அத்தியாயம் 3: ஆலுஇம்ரான் : 154)
4. மரணிக்கும்போது இறைநம்பிக்கை இருக்கின்ற நிலையில் மரணிக்க வேண்டும். இதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.                                 (அத்தியாயம் 3 ஆலுஇம்ரான் : 102)
இந்த வசனம் நிகாஹ் குத்பாவில் திருமணச் சொற்பொழிவில் ஓதப்படுகின்றது.
அதாவது மணமக்களுக்கு மரணம் குறித்து நினைவூட்டப்படுகின்றது. அவர்களுடைய வாழ்வின் மிக மிக சந்தோஷமான வேளையில் மகிழ்ச்சி பொங்குகின்ற தருணத்தில் அவர்களுக்கு மரணத்தைக் குறித்து நினைவூட்டப்படுகின்றது.
இதற்கு என்ன பொருள்?
உங்களுடைய இந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலையானதன்று. அது போலத்தான் உங்களுடைய வாழ்வும். எனவே நிலையில்லாத இந்த வாழ்வை விட நிலையான மறுமை வாழ்வுக்கு அதிக முன்னுரிமை தாருங்கள்.
ஆனால், நீங்கள் இம்மை வாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள். உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.                              (அத்தியாயம் 87 அல் அஃலா : 16, 17)
5. பின்வரும் துஆவை ஜனாஸா தொழுகையில் மட்டுமின்றி அடிக்கடி ஓதுவதை நாம் பழக்கப்-படுத்திக்கொள்ள வேண்டும்.
‘இறைவனே! நம்மில் உயிருடன் வாழ்வின் எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் வாழச் செய்வாயாக! நம்மில் மரணிக்கின்ற எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் மரணிக்கச் செய்வாயாக!
எனக்கு இன்னொரு துஆவும் மிகவும் பிடிக்கும். யூசுப் நபி செய்த துஆ அது:
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்கசீலர்களுடன் சேர்ப்பாயாக!                                  
(அத்தியாயம் 12 : யூசுப் : 101)

அல்லாஹ் நம் அனைவருக்கும் இறைநம்பிக்கையின்படி வாழ்கின்ற, அந்த நிலையிலேயே மரணிக்கின்ற நற்பேற்றைத் தந்தருள்வானாக! அதறகான வழிகாட்டுதலையும் நல்லருளையும் தந்தருள்வானாக!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...