மௌன உழைப்பாளியாக...
ஒரு முஸ்லிம் என்கிற முறையில் எத்தகைய வாழ்வை நீங்கள் விரும்புவீர்கள்?
நான் ஒரு முகம் தெரியாத, மௌன உழைப்பாளியாக, ஊழியனாகவே வாழ விரும்புவேன்.
எத்தகைய ஊழியராகவெனில் உறுதியுடனும் சமநிலை தவறாமலு, நீதி நியாய உணர்வுடனும், நிலைகுலையாமலும், அழகிய பொறுமையுடனும் தொடர்ந்து இடைவிடாமல் ஓயாமல் ஒழியாமல் தொய்வின்றி இறைவழியில் பாடுபடுகின்ற ஊழியனாகவே இருக்க விரும்புகின்றேன்.
அந்த ஊழியனை நீங்கள் பத்திரிகைச் செய்திகளில் பார்க்க மாட்டீர்கள். தொலைக் காட்சித் திரையில் அவனது முகம் தோன்றாது. பிறர் பாராட்ட வேண்டும்; வாழ்த்த வேண்டும் என்கிற ஆசை அவனுக்குக் கிஞ்சிற்றும் இருக்காது. புகழுரைக்காக அவன் ஏங்கவும் மாட்டான். அவன் ஒரு அடிப்படையான ஊழியனாக இருப்பான்.
இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என ஊகங்கள், சந்தேகங்களில் அவன் தனது நண்பர்களைத் துளைத்தெடுக்க மாட்டான். மனம் சஞ்சலமடையச் செய்யவும் மாட்டான்.
எந்தவொரு தோல்வியும் பின்னடைவும் அவனைத் துவளச் செய்யாது. வெற்றி கிடைத்தாலும்கூட கடமையை வெற்றிகரமாகச் செய்ததாக, பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியதாக அவன் நினைப்பான்.
அப்படிப்பட்ட ஊழியனாக இருக்கவே, வாழவே நான் விரும்புகின்றேன்.
- ஒரு பத்திரிகையின் நேர்காணலில்
1 comment:
Perfectly said !!!
Post a Comment