Pages

Thursday, May 20, 2010

Dr Abdullah (Periyar Dasan) in Dubai

 
Dr Abdullah reading அண்ணல் நபிகளார் வாழ்வினிலே.. a book published by IFT
Photo courtesy : The New Indian Express

The following is the preface to a thought provoking interview of Professor Periyar Abdullah (former Periyar Dasan). It was published in Sathya margam website. Br Jameel the UAE representative of Sathymargam and Br Ashraf have done a commendable job. The intervies is good, pleasing and thought provoking. Still, there is a feeling that yearns for something more. yeh dil mange more! The personality of Dr Abdullah is like that. You could not get satisfied. you yearn for more. Read the interview here

“என்ன … இப்புடி திடீர்னு …?”
தன் நண்பர்கள் சிலரின் வினாவுக்கு அண்மையில் உரியவராகிப் போனவர்.
நாடறிந்த நாத்திகர்; நாவன்மை மிக்கவர்; படைத்த கடவுளைப் பாரெங்கும் சுற்றி மறுத்து நின்றவர்; தத்துவ இயல் கற்றவர்-கற்பிக்கின்ற பேராசிரியரா இவர்? என வியக்க வைக்கும் எளிய தோற்றம்; இனிய பேச்சு; பேச்சினூடே இயல்பாக இழையோடும் நகைச்சுவை – முனைவர் அப்துல்லாஹ் எனும் முன்னாள் பெரியார்தாசன்.
இவர் இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதைப் பற்றி, பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளத்தில் கடந்த 01.04.2010 நாளிட்டு, ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தலைப்பு : தோழர் பெரியார்தாசனின் கொள்கை மாற்றம்.அதே கட்டுரை, அதே தலைப்புடன் கீற்று இணைய இதழில் இருநாட்கள் கழித்து 03.04.2010இல் வெளிவந்திருந்தது.
அதில், “இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய் விட்டாரே என்று ஆதங்கப் பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது” என்று பழைய பெரியார்தாசனை ‘உன்னிப்பாக’க் கவனித்து வந்த, ‘பெரியாரிஸ்ட்’ ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவற்றுள்,
  1. ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, ‘பெரியார்தாசன்’ ஆக மாறியது.
  2. பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, ‘பெரியார் சமதர்ம இயக்கம்’ எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது.
  3. புத்த மார்க்கத்தில் போய் சேர்ந்து கொண்டு, ‘சித்தார்த்தன்’ ஆக மாறியது.
  4. ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து ‘நந்தன்’ இதழில் எழுதியது.
  5. தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் ‘கல்ராசி’ பற்றிப் பரப்புரை செய்தது.
  6. பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, ‘தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி’யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்டது.
  7. மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பது.
ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமே விளக்கம் கேட்பதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.
கடந்த 07.05.2010இல் ஐக்கிய அரபு அமீரகங்களின் வணிகநகரான துபையில் நடைபெற்ற ‘பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக’த்தின் அமீரக்கிளை அறிமுக விழாவில் ‘பெரியார்தாசன்’ என்று அறியப்பட்ட முனைவர் அப்துல்லாஹ் சிறப்புரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்ட அழைப்பு வடிவில் அந்த அரிய வாய்ப்பு வந்தது.
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவரும் அமீரகத் தமிழர்களின் அன்பரும் சமூக ஆர்வலருமான அன்புத் தம்பி குத்தாலம் அஷரஃப் அவர்களைத் தொடர்பு கொண்டு, “சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காக முனைவரோடு ஒரு பத்துநிமிட நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யமுடியுமா?” என்று கேட்டபோது, “இன்ஷா அல்லாஹ்” என்றார்.

2 comments:

Abdul Jabbar said...

Alhumdulillah! Dr Abdullah is succinct in his views. May Allah bless him with more and more wisdom, hikmah and health.

ஹைதர் அலி said...

அல்ஹம்துலில்லாஹ்

Related Posts Plugin for WordPress, Blogger...